தேதி: June 7, 2014
இயர் பட்ஸ் - பச்சை மற்றும் விருப்பமான நிறங்களில்
ஃபெவிக்கால்
வெள்ளை நிற ஸ்டோன்
சிவப்பு நிற வெல்வெட் துணி
வெள்ளை நிற மெல்லிய லேஸ்
செவ்வக வடிவ பைண்டிங் அட்டை
பைண்டிங் அட்டையின் மேல் பெவிக்கால் தடவி வெல்வெட் துணியை ஒட்டி காயவிடவும். மஞ்சள், ஆரஞ்ச் நிற பட்ஸை இரண்டாக நறுக்கி வைக்கவும். மஞ்சள் நிற பட்ஸில் 6 துண்டுகளும், ஆரஞ்ச் நிற பட்ஸில் 12 துண்டுகளும் எடுத்துக் கொள்ளவும். இதே நிற பட்ஸில் அரை இன்ச் அளவில் நறுக்கி மேற்கூறிய எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளவும். பச்சை நிற பட்ஸை எடுத்து, அதன் இருபக்கமும் இருக்கும் பஞ்சு உள்ள பகுதியை வெட்டி எடுத்துவிட்டு, நடுவிலுள்ள ட்யூப்பைத் தனியாகவும், பஞ்சு உள்ள பகுதியைத் தனியாகவும் வைக்கவும்.

வெல்வெட் அட்டையின் ஒரத்தை சுற்றிலும் லேஸ் ஒட்டி காயவிடவும்.

மூன்று வெள்ளை நிற பட்ஸ் எடுத்து, அதில் இரண்டு பட்ஸை இவ்வாறு "V" வடிவில் ஒட்டி, அதன் மேல் மீதமுள்ள ஒரு பட்ஸை ஒட்டவும். ஒட்டிய பிறகு தொட்டி வடிவில் இருக்கும்.

பச்சை நிற பட்ஸில் வெட்டி எடுத்த டியூப்பில் மூன்றை எடுத்து தொட்டியின் நடுவில் காம்பு போல் ஒட்டவும். எடுத்து வைத்துள்ள பஞ்சு உள்ள பகுதியை படத்தில் உள்ளவாறு காம்பின் ஓரத்தில் இலைகள் போல் ஒட்டிவிடவும்.

நடுவில் உள்ள காம்புக்கு நேராக மஞ்சள் நிற பட்ஸை பூ வடிவில் ஒட்டவும். அதன் இடையிடையே அரை இன்ச் அளவில் நறுக்கிய பட்ஸை ஒட்டவும். பூ தயார்.

தொட்டியின் உட்புறத்தில் அதன் அளவிற்கேற்ப பட்ஸை நறுக்கி ஒட்டவும்.

அதன் பிறகு இரண்டு பக்கமும் இருக்கும் காம்பின் நுனியில் ஆரஞ்சு நிற பஞ்சையும், மஞ்சள் நிற பஞ்சையும் பூங்கொத்து போல வைத்து ஒட்டவும்.

பிறகு மஞ்சள் நிற பூவின் இருபக்கங்களிலும் ஆரஞ்சு நிற பட்ஸை வைத்து இரண்டு பூக்கள் ஒட்டவும்.

அனைத்து பூக்களின் நடுவிலும் விருப்பமான நிற ஸ்டோன் ஒட்டி முடிக்கவும்.

அழகான பட்ஸ் பூந்தொட்டி தயார். விரும்பினால் அட்டையின் பின் புறம் ஸ்டாண்ட் போல தயார் செய்து ஒட்டிக் கொள்ளலாம். அறுசுவையின் கிட்ஸ் கைவினைப் பகுதிக்காக செண்பகாவின் உதவியுடன் நவீனா செய்து காட்டிய பூந்தொட்டி இது.

Comments
அழகு நவீனா
அழகு நவீனா பூந்தொட்டி,
செய்வது எளிமை அன்ட் பார்க்க அருமை.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
நவீனா
கியூட்டா செய்திருக்கடா உன்னை போலவே ;) அடுத்த முறை அம்மா ஹெல்ப்பே இல்லாம ஒன்னு செய்து அனுப்பிடனும்? ஓக்கே?
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நவீனா
நவீனா குட்டி உன்னை போலவே ரொம்ப அழகா இருக்கு.. all the best..
செம க்யூட்..... நவீனா
செம க்யூட்..... நவீனா குட்டிக்கு ஒரு சபாஷ்
செண்பகா & நவீனா
சூப்பரா இருக்கு க்ராஃப்ட். ஐடியா சூப்பர். பூக்கள் வெகு அழகு.
நவீனா க்ராஃப்ட்ஸ் இனி நிறைய வரும் போல இருக்கே! :-) வாழ்த்துக்கள்..
- இமா க்றிஸ்
நவீனா'ங்க
ரொம்ப ரொம்ப அழகா செய்திருக்கீங்க..
வாழ்த்துக்கள் ங்க .... :-)
நட்புடன்
குணா
நவீனா
வாவ் பூந்தொட்டி நவீனா குட்டி போல ரொம்ப அழகா இருக்கு. ஸ்வீட்டுடா செல்லம்.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
பூந்தொட்டி
உன்னைபோலவே அழகாஇருக்குடா.வாழ்த்துக்கள் நவீனாகுட்டி
நவீனா
பூந்தொட்டி மிகவும் அழகாக உள்ளது, நல்லா ஐடியா சூப்பர்.
செண்பகா
குழந்தையும்,பூந்தோட்டியும் அழகாஇருக்கு.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.