தேதி: June 7, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பட்டு ரவை (Sooji) - அரை கிலோ
மைதா மாவு - 100 கிராம்
வெதுவெதுப்பான தண்ணீர் - மாவு பிசைய
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் + வெண்ணெய் - தேவையான அளவு
பாத்திரத்தில் ரவையுடன் மைதா மாவைச் சேர்த்து வெதுவெதுப்பான தண்ணீர் தெளித்து பரோட்டா மாவைவிட சற்று தளர்வாக இருக்கும்படி நன்கு பிசையவும். எண்ணெய் + வெண்ணெயை சம அளவாக கலந்து வைக்கவும்.

மாவை உருண்டைகளாக உருட்டி, அதன் மேல் வெண்ணெயைத் தடவி வைக்கவும்.

மாவு உருண்டைகளில் ஒன்றை எடுத்து கைகளாலேயே மாவை மெல்லியதாக தேய்த்து வைக்கவும். (மாவு தளர்வாக இருப்பதால், பூரி கட்டை தேவையில்லை).

அதன் இருபுறமும் எண்ணெய் + வெண்ணெய் கலவையைத் தடவி, ரவை மாவை தூவி விட்டு, மேலிருந்து கீழாக இவ்வாறு மடிக்கவும். பிறகு அதன் எதிர்புறத்தையும் மேல் நோக்கி மடிக்கவும்.

பிறகு அதனை படத்தில் உள்ளவாறு மடித்து, அதன் எதிர்புறமும் மடிக்கவும். (தேய்த்த மாவை நான்கு புறமும் மடிக்க வேண்டும்). இதே போல் மீதமுள்ள உருண்டைகளையும் கைகளால் தளர்த்தி, ஓரங்களை மடித்து சதுரமான பரோட்டா போல் தயார் செய்யவும்.

தவாவை காயவைத்து, அதில் பரோட்டாவைப் போட்டு எண்ணெய் தெளித்து வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான மரோக்கா பரோட்டா ரெடி.

இந்த பரோட்டாவை மரோக்கர்கள் டீயுடன் சாப்பிடுவார்கள். இதை க்ரேவியுடனும் சாப்பிடலாம். செய்முறையில் சற்று வித்தியாசம் ஏற்பட்டாலும் சற்றே சவ்சவ் என்றாகிவிடும்.
Comments
ஹாய் முசி. எப்பவும்
ஹாய் முசி. எப்பவும் வித்தியாசமான குறிப்பு குடுத்து அசத்தறிங்க. வெண்னை கட்டாயம் சேர்க்கணுமா. ரவை அதிகமா போடறதால ஹார்டா ஆகாதாப்பா.
Be simple be sample
நன்றி.
குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவிர்க்கு மிக்க நன்றி.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
ரேவதி
வாழ்த்திர்க்கு மிக்க நன்றி,மாவு போல் உள்ள ரவையில் தான் செய்யவேண்டும்.வெண்ணெய் சேர்ப்பதால் நல்ல சாப்டாக இருக்கும்.நான் நெய் சேர்த்து செய்தது கிடையாது.நீங்கள் நெய் சேர்த்து செய்து பாருங்க.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
முசி
பரோட்டா சூப்பர் முசி. பட்டு ரவைன்னு ஒரு வகை இருக்கா? சாதாரண ரவையில் செய்ய முடியாதா?
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
பரோட்டா
சூப்பர். எனக்கும் ரவைதான் சந்தேகம் தெளிவுபடுத்துங்கள்.
முசி
பேரும் குறிப்பும் அருமை.... பட்டு ரவை என்பது வெள்ளை ரவை தானே... //ரவை மாவை தூவி விட்டு, // ரவையை மிக்ஸியில் பொடித்து செய்ய வேண்டுமா? மாவை ஊற வைக்க வேண்டுமா? வெண்ணை இல்லாமல் வெறும் எண்ணெய் மட்டும் பயன்படுத்தலாமா?
முசி
நீங்க சொல்லியிருக்க அளவில் எத்தனை பரோட்டாவரும் முசி?
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
உமா
fine semoule என்று இங்கு கடைகளில் கிடைக்கும்.கடைசி படத்தில் கிண்ணத்தில் உள்ளதுதான் அது.ரவயை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி செய்து பார்க்கவும்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
இனியா
நன்றி இனியா,உமாவிர்க்கு சொன்னதுதான் உங்கலுக்கும்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
பிரியா
நன்றி,வெள்ளை ரவை தான்.ஊற வைக்க தவை இல்லை.ரவயை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி செய்து பார்க்கவும்.வெண்ணெய் சேர்த்து செய்தால் தான் மிருதுவாக இருக்கும்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
உமா
7 இல் இருந்து 8 வரை வரும்,நீங்கள் போடும் உருண்டையின் அளவை பொருத்தது.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
முசி
மரோக்கா பரோட்டா நல்லா இருக்கு.
அன்புடன்,
செல்வி.
செல்வியக்கா
வாழ்த்திர்க்கு மிக்க நன்றி,செல்வியக்கா.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.