klebsiella pneumoniae in urine(>100000 cfu/ml)

வணக்கம், எனக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதம் ஆகிறது,குழந்தை அழுது கொண்டு இருக்கிறது,என்று மருத்துவமனை சென்றேன்,மருத்துவர் கிழ்கண்ட urine report கொடுத்தார்.,

klebsiella pneumoniae in urine(>100000 cfu/ml)

தெரிந்தவர்கள் இதனை பற்றி தெரிவித்தால் நலமாக இருக்கும்,இதனால் பயம் கொள்ள வேண்டுமா???

சீக்கிரம் சொல்லுங்கள் தோழிகளே

பத்மா தர்மராஜா

\\மருத்துவர் கிழ்கண்ட urine report கொடுத்தார்//
குழந்தைகள் நல மருத்துவர் தானே?மருத்துவரிடம் இது என்னவென்று நீங்கள் கேட்டிருக்கலாமே, அல்லது second opinion-க்காக இங்கே கேட்கிறீர்களா?
இதுவும் ஒருவித யூரினரி டிராக்ட் இன்பெக்க்ஷன் தான்(UTI),
பொதுவாக இதற்க்கு ஆன்டிபயாட்டிக் கொடுப்பார்கள்.
உங்கள் குழந்தைக்கு மருத்துவர் கொடுத்திருப்பார் தானே ??
இன்பெக்ஷன் இருந்தால் காய்ச்சல் வர வாய்ப்புள்ளது.மருத்துவரின் ஆலோசனைப் படி காய்ச்சல் மருந்தும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். மேலும் குழந்தை விஷயத்தில் அவ்வப்போழுதே மருத்துவ ஆலோசனைகளை கேட்ப்பது மிக முக்கியம். மருத்துவர்கள் ஒரு பிரச்சனையைப் பற்றி சொல்லும் போது இது எதினால் வருகிறது?
வராமல் எப்படி தடுக்கலாம்? அப்படியே வந்து விட்டால் என்னென்னெ செயல்களை மேற்க் கொள்வது போன்ற கேள்விகளைக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
\\இதனால் பயம் கொள்ள வேண்டுமா???//
பயம் கொள்வதால் என்ன பயன் தோழி ?

ஒரு ஆலோசனை
பெண்குழந்தைகள் மலம் கழிக்கும் போது அது சிறு நீர் துவாரத்தை சுற்றிலும் சென்று தேங்கி கிருமிகள் வர வாய்ப்புள்ளது. ஆகவேதான் நன்றாக கழுவுவதோ, துடைப்பதோ மிக முக்கியம்.ஆண் குழந்தைகளுக்கு இப்படிபட்ட சிரமம் இல்லை. துடைப்பதற்க்கு Wipes உபயோகித்தாலும்,நன்றாக கழுவி விடுவது நல்லது.

மேலும் சில பதிவுகள்