ஹாய் தோழி உங்களுக்கு தெரிந்தத‌ சொல்லுங்க‌ ப்ளீஸ் புலுவெட்டுக்கு மருந்து

எனக்கு தலையில் புலுவெட்டு உள்ளது. புலுவெட்டு என்றால் தலையில் அங்கு அங்கு முடி முழுவதுமாகா விழுந்து சொட்டை போன்று இருக்கும். யாராவது உங்களுக்கு தெரிந்த‌ மருந்து மற்றும் வைத்தியம் இருந்தா சொல்லுங்க‌ தோழி. தலையில் அரிப்பு வேற உள்ளது.தலையில் அரிப்பு ஏற்பட்டாலே அந்த இடத்தில் புலுவெட்டு விழுகிறது என்று அர்த்தம். நான் ஸ்கின் டாக்டர் கிட்ட‌ காட்டி மருந்து எடுத்தேன் ஒரு மாதம் அப்புறம் என்னோட அப்பா அவங்களுக்கு இது மாதிரி 15 வருஷம் முன்னாடி விழுந்தது என்று ஒருத்தர் மருந்து வாங்கி கொடுத்துள்ளார். அதை தேய்த்ததும் எங்க‌ அப்பாவுக்கு சரியாகிடுச்சு. இப்ப வரைக்கும் எந்த‌ பிரச்சனையும் இல்லை. அந்த‌ மருந்து வாங்கி கொடுத்தாங்க‌ அதை தான் தேய்த்து கொண்டு இருக்கேன். அந்த‌ புலுவெட்டு உள்ள இடத்தில் முடி முளைக்க ஆரம்பிக்கிறது. இருந்தாலும் மறுபடியும் வேற இடத்தில் அரிப்பு ஏற்ப்பட்டு புலுவெட்டு விழுகிறது உதவுங்கள் தோழி... இப்ப‌ நான் வாரம் ஒரு முறை வேப்பிலை அரைத்து அரை மணி நேரம் போட்டு விகேர் சீயக்காய் யூஸ் பன்றேன்..வேற‌ ஏதாவது வழி கூறுங்கள் தோழி.கருவேப்பிலை மற்றும் மருதாணி அரைத்து தோங்காய் எண்ணெயில் போட்டு யூஸ் பன்றேன்.

இதுக்கு மருந்து தேவையில்லை.
தானாகவே சரியாகி விடும்.
கொஞ்ச‌ நாள் ஆனதும் முடி தானாகவே வந்துவிடும்,
இது மிக‌ பிரபலமான‌ ஸ்கின் டாக்டர் சொன்னது.
தேவையானால் சத்தான‌ உணவு எடுங்கள் போதும்.

சீத்தாப்பழம் மர இழையை மைய ௮ரைத்து தலைக்கு தேய்த்து ௮ரை மணிக்கு ஊர விட்டு சீயக்காய் பொடி வைத்து தலையை சுத்தம் செய்து வர புலுவெட்டு சீக்கிரமாக சாியாகி விடும்,,,,,,இந்த குறிப்பை நான் ஜி தமிழ் டிவி முலமாக தெரிந்து கொண்டேன்,,,பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்,,,,, தோழி

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
திவ்யா

தோழி நிகிலா, திவ்யா நன்றி

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

அப்படிதான் நானும் இருந்தேன்..ஆனால் அங்கு அங்கு மறுபடியும் விழுகிறது.உங்களுக்கு தெரிந்தவங்களுக்கு யாருக்காவது ஸ்கின் டாக்டர் இப்படி சொன்னாங்களா தோழி அப்படி சொல்லி அவங்களுக்கு சரி ஆயிருக்கா தோழி

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

எனக்கு தெரிந்தவரை சின்ன வெங்காயம் அரைத்து தேய்த்து வர சரியாகும் என கேள்விப்பட்டிருக்கிரேன் ,பார்த்தும் இருக்கிரேன்.

தோழி தோல் சம்மந்தமான‌ எந்த‌ பிரச்சனைன்னாலும் வேம்பு நல்ல‌ மருந்து. கூட‌ செம்பருத்தி சேர்த்தால் இன்னும் நன்று.
மீண்டும் முடி வர‌ சுண்டைக்காய் செடி தெரியுமில்லையா?(சுண்டைக்காய் புளிக்குழம்பு வைப்போமே) அந்த‌ சுண்டைக்காய் செடியின் இலைகளை கிள்ளி நன்கு கழுவி அரைத்து அதன் சாறு படும்படி புலுவெட்டு உள்ள‌ இடத்தில் தடவுங்கள்....நல்ல‌ பலன் கிடைக்கும். தெரிந்தவர் செய்து முடி வந்திருக்கிறது.

ரெம்பா நன்றி தோழி

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

//அப்படிதான் நானும் இருந்தேன்..ஆனால் அங்கு அங்கு மறுபடியும் விழுகிறது.உங்களுக்கு தெரிந்தவங்களுக்கு யாருக்காவது ஸ்கின் டாக்டர் இப்படி சொன்னாங்களா தோழி அப்படி சொல்லி அவங்களுக்கு சரி ஆயிருக்கா தோழி//
ஆம் தோழி,எனக்கு தெரிந்து இப்படி இருவருக்கு சரி ஆகி இருக்கிறது.
ஒருவருக்கு மீண்டும் மீண்டும் வந்து சரி ஆகி விட்டது.இப்போது வரவே இல்லை

ரெம்ப‌ நன்றி தோழி

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

மேலும் சில பதிவுகள்