பாட் டிசைனிங் - 3

தேதி: June 11, 2014

4
Average: 4 (4 votes)

 

பானை
ஃபெவிக்கால்
சணல்
க்ளாஸ் கலர் - இரண்டு நிறங்களில்
ஃபேப்ரிக் கலர்
ப்ரஷ்
கத்தரிக்கோல்
ஸ்டோன்ஸ்

 

பானையைச் சுத்தமான துணியை வைத்து துடைத்துக் கொள்ளவும்.
பிறகு அதன்மீது ஃபெவிக்கால் தடவி படத்தில் காட்டியுள்ளபடி சணலை நெருக்கமாகச் சுற்றவும்.
பானையின் முழுவதும் சணல் சுற்றிய பிறகு இவ்வாறு இருக்கும்.
அதன் மீது க்ளாஸ் கலரில் ஒன்றை எடுத்து இதே போல் இடைவெளி விட்டு நிரப்பவும்.
பிறகு இடைவெளி விட்ட இடங்களில் மற்றொரு நிற க்ளாஸ் கலரை நிரப்பவும்.
இதே போல் பானை முழுவதும் சணலின் மேல் கலர் செய்து காயவிடவும்.
பிறகு பானையின் வாய் பகுதியில் ஃபேப்ரிக் கலர் அடித்து காயவிடவும்.
காய்ந்ததும் விருப்பத்திற்கேற்ப ஸ்டோன்ஸ் ஒட்டி முடிக்கவும். அழகான, சிம்பிளான பாட் டிசைன் இது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சூப்பர் நான் பானையில் அரிசி ஒட்டி செய்திருக்கிறேன் இதையும் செய்து பார்க்கிறேன்

அழகு... இதெல்லாம் கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தா நிறைய வீட்டில் குட்டீஸை செய்ய வெச்சிருப்பாங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகான கைவினை.
கைவினைக்கென்றே இப்படி பாதத்தோடு பானைகள் விற்கிறார்களா?

‍- இமா க்றிஸ்

roma supera iruku