கொள்ளைக்கூடம்????

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்தாச்சு.

பல இனிய விஷ்யங்கள் நடந்தாலும் பள்ளிகளால சில கசப்பான அனுபவங்கள் நிறையவே ஏற்படுது.
இது யாராலும் மறுக்க முடியாத உண்மை . இப்ப பெரும்பாலும் நாம் நம் பிள்ளைகளை தனியார் பள்ளிகூடம்லதான் சேர்க்கிறோம்.

அட குழந்தை பிறக்கும்போதே நாம நினைக்கிற பெரிய  பள்ளிகூடத்துல ஃபார்ம் வாங்கி சேர்த்துட்டோம்னா நாம கட்டாயம் ஏதோ பூர்வ ஜென்மத்துல கண்டிப்பா பெரிய புண்ணியம் பண்ணிருப்போம் . இல்லனா கிடைக்குமா சொல்லுங்க .

சரிப்பா எப்படியோ கஷ்டமோ , நஷ்டமோ நம்ம முதல் பிள்ளைய சேர்த்துட்டோம்ன்னு இரண்டாவது பிள்ளைக்கும் லாம் சீட் கிடைக்கும்ன்னுலாம் எதிர்பார்க்க முடியாது . நாமலும் நமக்கு தேவையில்லாத அலைச்சல் வேண்டான்னு எப்பாடு பட்டாவது அதே ஸ்கூல்ல டொனேஷன் கட்டி சேர்த்துடுவோம்ல .

இப்ப பள்ளிகள் புதுசு புதுசா என்னனவோ கண்டுபிடிக்கிறாங்க. இப்பலாம் pre k.g க்கு மட்டும் தான் அட்மிஷன் . அதுக்கு அப்பறம் எந்த கிளாஸ்க்கும் நோ சீட் . ஒரு வேலை மத்த வகுப்பு பிள்ளை டிஸ்கண்டினியூ பண்ணா வேணா நமக்கு சீட் கிடைக்கலாம் . அதுவும் எம் .பி இல்ல mLA ந்னு யாராவது ரெகமண்ட் பண்ணாதான் கிடைக்கும்.

காலை வகுப்புக்கு 1லட்சம் மாலை வகுப்புக்கு 75000 இது காலேஜ் பீஸ் இல்லிங்கோ. எங்க ஏரியால இருக்கற பள்ளிகூடத்துல LKG க்கு பீஸ் .

சரி எப்பாடுபட்டாவது சேர்த்துட்டோம்னு நிம்மதியாலாம் இருக்கு முடியாது. ஆக்டிவிட்டி என்ற பேர்ல கிடைக்க அரிதான பொருட்கள் ,அல்லது செய்து எடுத்துருக்கேன் வரும் சொல்லுவாங்க .இப்பலாம் இதை செய்து குடுக்க நிறைய கடைகள் திறந்தாச்சு .ஒரு சில பள்ளிகள் அவங்களே செய்துகுடுக்கறதுன்னு தனியா பணம் பிடுங்குறாங்க .

அப்பறம் விளையாட்டு . பாதி பள்ளிகள் மைதானமே கிடையாது .அப்பறம் எங்க விளையாடறது . முதல்ல மைதானம் இருக்குன்னு கொஞ்சம் இடத்தை காண்பிச்சு அனுமதி வாங்கிட்டு இப்ப அந்த இடத்துலயும் வகுப்பறை கட்டி பசங்க விளையாட அரை கிரவுண்ட் இடம் இருந்தாலே அதிகம்.

அடுத்து இவங்க பள்ளிகளுக்கு 100% கிடைக்கணும்ன்னு படிக்கற பசங்களுக்கு நல்ல கவனிப்பு .நல்லா படிக்காத பசங்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ் ந்னு அதுக்கு தனியா பீஸ்ன்னு நம்ம பீஸ்ஸ பிடுங்குறாங்க.

வசதி குறைவான வீட்டு குழந்தைகளுக்கு 25% இடம் ஒதுக்கி தரணும்றது எத்தனை பள்ளிகள்ல நடைமுறைல இருக்குன்னு அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.

அதுவும் பள்ளிகள்லயே டியூஷன் வச்சா ,நம்ம பிள்ளைதான் பர்ஸ்ட் வரும் .

எந்த பேரண்ட்ஸ்ஸாவது ஏதோ ஒரு காரணத்துக்காக பள்ளியை எதிர்த்து கேள்வி கேட்டா ,அன்னையோட அந்த பிள்ளைங்க ஒரூ வேண்டாதவங்களா ஆகிடறாங்க. பேரண்ட்ஸ் மேல் இருக்கற கோபம் எல்லாம் குழந்தைகங்க மேல் திரும்புது.
நாம எதிர்த்து ஒன்னும் செய்ய முடியாது .சீட் கிடைச்ச ஸ்கூல விட்டு எங்கயூம் அலைய முடியாது . இப்படி பல காரணங்களால அடங்கி போய் வாய் இருந்தும் ஊமையாய் நம் பணத்தை கட்டி வேடிக்கை பார்க்கிறோம் .அதுல நானும் ஒரு ஆள்தான் . இதற்குலாம் என்னமாதிரி விடிவு வரம்ன்றது யாரும் அறியாத விடை தெரியாத கேள்விகள்....

5
Average: 5 (4 votes)

Comments

உண்மைதான்ங்க.. நிறைய பள்ளிகள் இப்படிதான்..
ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க. ..அருமைங் ..

நட்புடன்
குணா

ஆமா ரேவதி நீங்கள் சொன்னதது அனைத்தும் உண்மை, பெற்றோர்கள் எல்லாரும்மே தங்கள் பிள்ளைகளை நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்க்கோனும் தான் நினைக்கிறாங்க அதைப் பயன்படுத்தி நிறைய பள்ளிக்கூடங்கள் எவ்வளவு பீஸ் இருந்தாலும் பரவாயில்லை ஏன் பிள்ளையை அந்த பள்ளிக்கூடத்தில் தான் சேர்ப்பேன், சொல்லுறாங்க, அதனால இதை பயன்படுத்தி தான் இப்ப கல்வி நிர்வாகமும் கல்வி கட்டணத்தை வருஷம் வருஷம் அதிகரித்து கொண்டுதான் இருங்காங்க.

//ரமணா படத்தில் எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை எங்க அண்ணன் பிழைத்தால் போதும் அது மாதிரி தான் இப்ப எஜிகேசன் நடக்குது//
இதை மாற்றனுமுனா பெற்றோர்கள் தான் முதலில் திருந்த வேண்டும்.

முன்னாடி கொள்ளைக்கூட்டம் இரவில் வருவார்கள், இப்ப பள்ளிக்கூடம் பெயரில் பகலில் வருகிறார்கள் அல்ல செல்கிறோம்.

ஹாய்,
/////////பல‌ இனிய‌ விசயங்கள் நடந்தாலும் சிலகசப்பான‌ விசயங்கள் ஏற்படுவது உண்டு/////////////////உண்மையான‌ வார்த்தைங்க‌.இது நம்ம‌ பிள்ளைகளை மிகவும் பாதிக்கிறது.நாமோ பி.ஜி.படித்து இருப்போம்.+2படித்த‌ கே.ஜி.மிஸ்ஸிடம் கொலைகுற்றம் செய்ததுப்போல் நாம் முழித்துக்கொண்டு நிற்ப்பது என்ன‌ கொடுமைடா சாமி.மனம் வெறுத்துவிடும்.ஆனா மற்றவர்களிடம் எங்க‌ பசங்க‌ இந்த‌ ஸ்கூலதான் படிக்கிறான் பெருமையடிக்கும் போது எல்லாத்தையும் மறந்துடுவோம்.அதுதாங்க‌ நம்ப‌ வீக்னஸ்.

ரஜினிபாய்

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

நிறைய பெற்றோர்களின் மன குமுறல் தான் உங்க பதிவில் பிரதிப்பளிக்கிறது ரேவதி, பிள்ளைக்களின் எதிர்காலத்திற்காக எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள வேண்டியதாக உள்ளது, பணம் பிடுங்கும் கூடங்கள் தான் நடத்தப்படுகின்றன

ஆமா தம்பிங் .நீங்க இப்பயே சேர்த்து வைக்க ஆரம்பிங்க .. பின்னாடி நிறைய தேவைப்படும்

Be simple be sample

சரியா சொன்னிங்க பாலா . நம்ம மனபான்மையா பயன்படுத்தி அவங்க சம்பாதிக்கறாங்க .என்னபண்ணறது.

Be simple be sample

ஆமா ரஜினி. நாம படிக்கும்போதெல்லாம் நம்ம அம்மா மிஸ்கிட்ட கம்ளைண்ட் பண்ணுவாங்க. இப்ப அவங்க நம்மகிட்ட சொல்லி நம்பள திரு திருன்னு முழிக்க வைக்கிறாங்க .இந்த கெளரவம் கெளரவம்ன்னு நாம படற அவஸ்த்தை இருக்கே அப்ப்பபபபா....ஆ

Be simple be sample

ஆமா உமா. என்ன பண்ணறது சொல்லுங்க .வழிபறி நடந்தா கூட சொல்லி இடம் இருக்கு .இதுக்கு எதுவும் இல்ல.

Be simple be sample

இதெல்லாம் மாற நம்ம தான் மாறனும்... பிள்ளைகள் மேல் நம்பிக்கை வைத்து சாதாரண நல்ல பள்ளிகளில் சேர்க்கனும்... சேர்த்தா இப்படி பிகு காட்டும் பள்ளியெல்லாம் வாலை சுருட்டிக்கும். அங்கே கியூவில் நின்னு அப்லிகேஷன் வாங்கி 1 லட்சம் 2 லட்சம் கட்ட நாம தயரா இருக்குறதால தானே அவன் பெரிய ஆள் ஆகறான்? மக்களின் சோம்பேரித்தனம்... கோதுமையை கொடுத்துட்டு வெளிய ரொட்டியா வரனும், அதுவரை நம்ம உழைப்பு தேவைப்படக்கூடாதுன்னு இப்படி பெரிய பள்ளியில் சேர்க்குறாங்க. என்ன தான் நல்ல பள்ளியா இருந்தாலும் உள்ள நாம கொடுத்த கோதுமையின் தரம் தான் வெளிய வரும் ரொட்டியின் தரம். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//என்ன தான் நல்ல பள்ளியா இருந்தாலும் உள்ள நாம கொடுத்த கோதுமையின் தரம் தான் வெளிய வரும் ரொட்டியின் தரம்.// இதை நான் ஆமோதிக்கிறேன் வனி. வீட்டார் கையிலும் சிலது இருக்கிறது.

மேலே இடுகை மற்றும் கருத்துகள்... எனக்கு அறிமுகமில்லாத விடயங்களாக இருப்பதால் இங்கே பார்வையாளராக மட்டும் இமா.

‍- இமா க்றிஸ்

இமா... இங்கெல்லாம் இப்போ பல பிரபலமான பள்ளிகளில் நடப்பதை ரேவ்ஸ் சொல்லி இருக்காங்க. பெற்றோரெல்லாம் கியூ கட்டி 1 நாள் முன்பே ரோடு வரை நிப்பாங்க... அது போல பள்ளிகளில் அப்ளிகேஷன் ஃபார்ம் வாங்க. அதன் பின் அவங்க அப்ளிகேஷன் ஏற்கப்பட்டு, எண்ட்ரன்ஸ் எக்ஸாம் (LKGக்கு) வெச்சு பாஸ் பண்ண கிட்ஸ்’அ செலெக்ட் பண்ணுவாங்க. பண்ண பிறகும் அவங்க சொல்வது தான் நாம செய்யனும். ஒவ்வொன்னுத்துக்கும் காசு தான். அதான் புலம்பி இருக்காங்க ரேவ்ஸ். முன்பு இது போல பள்ளிகள் சென்னையில் கூட 4 அல்லது 5 தான் இருந்திருக்கும். இப்போ எல்லாம் பள்ளியும் பெரிய பள்ளின்னு சொல்லிக்கறாங்க... வாங்கும் ஃபீஸ், அட்மிஷன் கொடுக்க காட்டும் டிமாண்ட் வெச்சு மக்களும் “வாவ்... இது ரொம்ப பெரிய ஸ்கூல்!!! இதுல அட்மிஷன் கிடைப்பதே குதிரைக்கொம்பு” அப்படின்னு அம்ப ஆரம்பிச்சு ஒன்னுமில்லாத பள்ளியை பெரிய பள்ளியா ஆக்கிவிட்டுடுறாங்க.

இது மட்டுமில்ல... சென்னை போன்ற நகரங்களின் இப்போதைய ட்ரெண்ட் தெரியுமோ? ஒவ்வொரு பில்டரும் ஒரு பள்ளியோடு டையப் வெச்சிருக்காங்க. அந்த பில்டர் கட்டும் அப்பார்ட்மண்ட் பகுதியில் அந்த பள்ளிக்கு ஒரு கட்டடம் இருக்கும். அந்த பள்ளிக்கூடம் அந்த அப்பார்ட்மண்ட்டில், குடியிருப்புகளில் உள்ளவர்கள் பிள்ளைகளூக்கு தான் முக்கியத்துவம் தருவாங்க. பில்டரும் இப்படி ஒரு பெரிய பள்ளி என் காம்பவுண்ட் உள்ள இருக்கு, என்கிட்ட வீடு வாங்கினா தான் உன் பிள்ளைக்கு அங்க அட்மிஷன் கிடைப்பது சாத்தியம்னு அட்வர்டைஸ் பண்ணிக்குவாங்க. ;) எப்படி??? நல்லா இருக்கில்ல? OMR, ECR போன்ற இடங்களில் எல்லாம் இப்படி பில்டர்ஸ் + பள்ளிகள் தான் அதிகம்.

அட்மிஷன் கிடைப்பதும் LKG க்கு தான். அதுக்கு மேல கிடைப்பது சிரமம். இது போன்ற நடைமுறையால் இப்போதெல்லாம் மாண்டசரி பள்ளிகள் என சிறு குழந்தைகளுக்கு வந்த பள்ளிகள் இப்போது அட்மிஷன் இல்லாமல் திண்டாடுவதாக செய்தி. ஏன்னா இவங்க UKG வரை தான் வெச்சிருக்காங்க... ஒன்னாவதுக்கு பெரிய பள்ளியில் கிடைக்காதே!! LKGக்கே பெரிய பள்ளியில் போட்டா தானே உண்டு? அது பெற்றோர் கவலை. போங்க இமா... இவங்க க்தையை சொன்னா இந்த பக்கம் எனக்கு போதாது. அம்புட்டு அனுபவம் இந்த 4 மாதத்தில் எனக்கு. தேவையில்லை இந்த பெரிய பள்ளிகள் எனக்குன்னு சின்ன ஸ்கூலில் அட்மிஷன் போட்டுட்டு விட்டுட்டேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி நச்சுனு சொல்லிட்டிங்க . நாங்களும் அப்படிதான் வனி .பெரிய ஸ்கூல் தேடிலாம் போகல .ஆனா சின்ன பள்ளிகளும் இப்படிதான் அலும்பு பண்ணின்னு திரியுது.என்ன சொல்லறது.

Be simple be sample

இங்க போட்டுக்கறது ரொம்ப கொஞ்சம் தான் .முழுவதும் போடனனும்னா ,பார்ட் 1 .பார்ட். ந்னு நிறைய பகுதிகள் போடலாம் .அவ்வளவு இருக்கு.வனி குடுத்த விளக்கம் சரியானது

Be simple be sample