கத்தரிக்காய் மசாலா

தேதி: June 14, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

கத்தரிக்காய் - 3
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று (அ) தக்காளி ப்யூரி - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
சீரகத் தூள் - அரை தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
புளிக்கரைசல் - கால் கப்
உப்பு - தேவைக்கேற்ப
வறுத்து பொடிக்க:
வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி
வெள்ளை எள்ளு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு

கத்தரிக்காயைப் பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கத்தரிக்காயை வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு நன்கு வதக்கவும்.
வதங்கியதும் தூள் வகைகளைச் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் தக்காளி (அல்லது) தக்காளி ப்யூரி, உப்பு மற்றும் வறுத்து பொடித்தவற்றைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.
கொதித்ததும் வதக்கி வைத்துள்ள கத்தரிக்காயைச் சேர்த்து 10 நிமிடங்கள் சிறு தீயில் சுருள வேகவிடவும். எண்ணெய் பிரிந்து மேலே மிதந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான கத்தரிக்காய் மசாலா தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

நான் புளிக்கரைசல் சேர்க்காமல் செய்துருக்கேன்... இந்த முறையில் செய்து பார்க்கிறேன்... ப்ளேட்ல என்ன புளி சாதமா? சூப்பர் காம்பினேஷனா இருக்குமே...

கலை

கத்தரிக்காய் மசாலா மிகவும் அருமையாக கலர் புல்லா இருக்கு.

கத்தரிக்காய் மசாலா பிரியாணிக்கு வைப்பது போல இருக்கு, கத்தரிக்காய் வறுவல் மட்டும் தான் தெரியும் இதை செய்து பாக்குறேன்

குறிப்பை வெளியிட்ட‌ அட்மின் மரற்றும் டீமிர்க்கு மிக்க‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முதல் பதிவிர்க்கு மிக்க‌ நன்றி,செய்து பாருங்க‌ நல்லா இருக்கும்.அது கொள்ளு புலாவ்.என்னுடைய‌ குறிப்பில் உள்ளது.http://www.arusuvai.com/tamil/node/23888

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

தவராமல் பதிவிடும் உங்க‌ அன்பிர்க்கு மிக்க‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பிரியாணிக்கு கத்திரிக்காயை நீளநீளமாக‌ நருக்கி செய்வோம்,நான் இதில் சற்று வித்தியாசமாக‌ வேர்கடலை சேர்த்து செய்துள்ளேன்.இதே போல் குழம்பும் செய்யலாம்.செய்து பாருங்க‌ ரொம்ப‌ பிடிக்கும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நான் இந்த காம்பினேஷனில் குழம்பு வைத்தது உண்டு. எனக்கு பிடிக்கும். இப்படி மசாலாவா இதுவரை ட்ரை பண்ணதில்லை. நிச்சயம் செய்யறேன், விருப்பப்பட்டியலில் சேர்த்திருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பார்க்கும்போதே சாப்பிட தோணுது. அருமையான குறிப்பு முசி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி வனி,செய்து பாருங்க‌ ரொம்ப‌ பிடிக்கும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு மிக்க‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஹாய் முசி அஸ்ஸலாமு அழைக்கும் நல்லா இருக்கீங்களா உங்க கத்தரிக்காய் மசாலா செய்தேன் நல்லா இருந்தது நன்றி

கத்தரிக்காய் மசாலா செய்தேன் முசி டேஸ்ட் ரொம்ப நல்லாருந்தது. கத்தரிக்காயை தனியே வதக்கி சேர்க்குறது வித்தியாசமான சுவையா இருக்கு. இப்ப கத்தரிக்காயில என்ன செஞ்சாலும் தனியா வதக்கித்தான் செய்றேன். நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க‌ நன்றி,உமா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.