கிறிஸ்மஸ் அச்சு முறுக்கு

தேதி: December 22, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

மைதாமாவு - அரைக்கிலோ
சர்க்கரை - முக்கால் கோப்பை
முட்டை - ஒன்று
கெட்டியான தேங்காய்ப்பால் - அரைக்கோப்பை
எள்ளு - இரண்டு தேக்கரண்டி
உப்புத்தூள் - ஒரு சிட்டிக்கை
எண்ணெய் - மூன்று கோப்பை
தண்ணீர் - தேவையான அளவு


 

முதலில் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி காயவைக்கவும். அதில் முறுக்கு அச்சியை வைத்து சூடாக்க வேண்டும்.
சற்று குழிவான பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும். அதில் சர்க்கரையைப் போட்டு அது கரையும் வரை நன்கு கலக்கவும்.
பிறகு தேங்காய்ப்பாலை ஊற்றி உப்பைச் சேர்த்து நன்கு கலக்கி மைதாவையும் எள்ளையும் சேர்த்துக் கொட்டவும்.
கைகளால் எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி விட்டு தேவையான தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.
கலவை தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
பிறகு எண்ணெயில் உள்ள முறுக்கு அச்சியை வெளியில் எடுத்து மாவில் மெதுவாக அச்சை முக்கால் பாகம் முழுகும் அளவிற்கு முக்கி எடுக்கவும்.
அதை உடனே காய்ந்துக் கொண்டிருக்கும் எண்ணெயில் வைத்தால் அச்சியில் ஒட்டியிருக்கும் மாவு பிரிந்து எண்ணெயில் விழுந்து விடும்.
இதேப் போல் எல்லா மாவையும் முறுக்குகளாக சுட்டு எடுக்கவும். பார்ப்பதற்க்கு அழகாகவும் சுவையாகவும் இருக்கும். கிறிஸ்மஸ்க்கு ஏற்ற இனிப்பு பலகாரம் இது.


மேலும் சில குறிப்புகள்


Comments

திருமதி மனோ அவர்களே, சைவ அச்சுமுறுக்கு (முட்டை இல்லாமல்) செய்முறை கிடைக்குமா?

ஹலோ சாந்தா எப்படி இருக்கின்றீர்கள்?சைவ அச்சு முறுக்கு செய்ய, மேற்கூறியுள்ள பொருட்களில் முட்டையை நீக்கிவிட்டு ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூளைச் சேர்த்துக் கொள்ளவும். மைதா மாவிற்க்கு பதிலாக அரிசி மாவிலும் செய்யலாம். நீங்கள் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் அளவில் பாதியாக எடுத்து செய்துப்பார்த்தால் சுலபமாக இருக்கும்.நன்றி.

மிக்கநன்றி மனோகரி, கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.