தையல் போட்ட‌ இடத்தில் வலி அதிகம்

என் சகோதரிக்கு ப்ரசவம் ஆகி இன்றோடு 5 நாட்கள் ஆகிறது. சுக‌ ப்ரசவம் தான். முதல் குழந்தை. தையல் போட்ட‌ இடத்தில் வலி தாங்க‌ முடியவில்லை என்று கூறி அழுகிறாள். ப்ளீஸ் அனுபவம் உள்ளவர்கள் உதவுங்களேன்.
அருசுவைக்கு நான் புதிதல்ல‌. பழைய‌ அனிதா சுஜி தான் மீண்டும் அனிதா கன்னையா வாக‌ வந்திருக்கிரேன். ஏதாவது வீட்டு வைத்தியம் இருந்தால் சொல்லுங்களேன்.
பழைய‌ தோழிகள் யாரேனும் இப்பொழுதும் அருசுவை யில் இருக்கிரீர்களா. மீண்டும் சந்திததில் மிக்க‌ மகிழ்ச்சி.

எனக்கு இது போல பிரெச்சனை இருந்தது. சும்மா இல்லைங்க... 1 வருடம் ;) நிக்க கூட முடியாது. இந்த வலியை விட சிசேரியன் வலி தேவலைன்னு முடிவு பண்ணி அடுத்து சிசேரியன் பண்ணேன் தெரியுமோ? உட்கார்ந்தபடி நகர்ந்தா தையல் பிரியும். புண் ஆற அவங்க ஒரு லிக்விட் கொடுத்திருப்பாங்களே... வெது வெதுப்பான நீரில் விட்டு உட்கார்திருக்க சொல்லி? செய்தாங்களா? இப்போ சீக்கிரம் டாக்டரை பாருங்க. தையல் பிரிஞ்சிருந்தா கேர்ஃபுலா இருக்கனும். தானா தான் இனி கூடனும், மீண்டும் தையல் போட மாட்டாங்க. புன்னாகி இருந்தா மருந்து தருவாங்க... முதல்ல போய் பார்க்க சொல்லுங்க அனிதா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hai frnd 20days pain irukum nadaka kuda mudiyathu romba kastamathan irukum vethuvethupana waterla detol pottu thaiyal potta placela wash panna sollunga dailyum 2 times cure agirum. romba pain overa iruntha dr parunga

எனக்கும் முதல் குழந்தை கு தையல்லால ரொம்ப கஷ்டபட்டேன்.. இப்போ இரண்டாவது 7 மாதம்.. சிசேரியன் better நு நின்ய்குர்றேன் .. ஆனா எங்க வீட்ல எல்லாரும் திட்ராங்க.. நொர்மல் ஆகட்டும் நு.. ப்ளீஸ் advice..

Thanks,
Subadra..

எனக்கும் முதல் குழந்தை கு தையல்லால ரொம்ப கஷ்டபட்டேன்.. இப்போ இரண்டாவது 7 மாதம்.. சிசேரியன் better நு நின்ய்குர்றேன் .. ஆனா எங்க வீட்ல எல்லாரும் திட்ராங்க.. நொர்மல் ஆகட்டும் நு.. ப்ளீஸ் advice..

Thanks,
Subadra

Sister thaiyalku payanthu yen operation betternu ninaikuringa pa normal than pa best normal delivery thaiyal pain maximum 20days than pa bt operation pain lifelong irukum pa for ex: vilaiyataai nama kulanthainga nama stomach la viluntha kuda thanga mudiyathu then sometimes thaiyal pota idam arikum punnaga kuda chance iruku pa so better normal delivery than pa.

அன்பு தோழிக்கு என் வாழ்த்துகள். குழந்தையை நன்கு பார்த்துக் கொள்ளுங்கள். தையல் வலி குறைவதற்கு சூடான நீரில் டெட்டால் ஊத்தி தையல் போட்ட இடத்தில் ஊத்துங்கள் வெது வெதுப்பா ஊத்தினாள் சீக்கிரம் ஆராது பா அதனால சூடா உத்துங்க அப்படி உங்களால ஊத்த முடிலைன்னா அம்மாவ கூப்டுகோங்க சீக்கிரம் பலன் கிடைக்கும். இல்ல ரொம்ப வலி இருந்தால் go to doctor.

Its Better check with the docter first may be infection

உங்கள் advice கு ரொம்ப நன்றி!! நொர்மல் டெலிவரிக்கே try பண்றேன்.

Thanks,
Subadra..

அடடா... நார்மல் ஆனா நார்மலே பண்ணிக்கங்க சுபத்ரா. இயற்கையா நடக்க வேண்டியது, சில நேரம் டாக்டர்ஸ் பண்ற தப்பால நார்மல் சிக்கலா போகுது. எனக்கு சிக்கலான நார்மல்... ஏறக்குறைய பாதி சிசேரியன். முழுசா என் பிள்ளைக்கு 10 வயசு ஆகும் வரை நான் சிரமப்பட்டேன். நிக்க முடியாது, உட்கார முடியாது. இன்னுமே அன்று நடந்த நார்மலால் சிரமப்படறேன். அதனால் தான் நான் அடுத்து சிசேரியனுக்கு ஆப்ட் பண்ணேன். அதுவும் நல்லதா தான் எனக்கு அமைஞ்சுது. நார்மலில் பட்ட வலியெல்லாம் இதில் எனக்கு இல்லை.

சிசேரியன் தப்புன்னு நான் சொல்ல மாட்டேன்... நார்மல் தப்புன்னும் நான் சொல்ல மாட்டேன். அவங்க அவங்க உடம்பு வாகு, அந்த நேர சூழல்... அதுக்கு ஏற்றபடி மருத்துவர்கள் சொல்வதை கேட்டு செய்துக்கங்க. எனக்கு இரண்டு டெலிவெரியும் வெவ்வேறு ஹாஸ்பிடல். முதலில் நான் பட்ட கஷ்டம் இரண்டாவது பார்த்த டாக்டர்ஸ்க்கு தெரியாது, அதனால் பிடிவாதமா சிசேரியன் பண்ணிகிட்டேன். அது இன்னைக்கு வரை எனக்கு நல்ல சரியான தேர்வு தான். ஆனா அதையே நான் எல்லோருக்கும் சொல்ல முடியாதே... உங்க உடம்பு நார்மலுக்கு தகுதி உள்ளதா இருந்தா ஆகட்டுமே... ஏன் வேணாம்னு சிரமப்படனும்?

மருத்துவருக்கே உங்களுக்கு எது சரின்னு தெரியும். அதை அப்படியே கேட்டுக்கங்க சுபத்ரா. உங்கள் குழந்தை ஆரோக்கியமா பிறக்க பிராத்தனைகள்.

சிசேரியனா நார்மலா என்பது நம்ம ஆரோக்கியத்தை மட்டுமே பாதிக்கும் விஷயமில்லை மக்களே... உங்க குழந்தை நல்லபடியா பிறக்கவும் யோசிச்சு முடிவு பண்ண வேண்டிய விஷயம். அதனால் சிசேரியன் பண்ணிகிட்டா பின்னாடி நாம கஷ்டப்படுவோம்னு மட்டுமே யோசிச்சு சிசேரியன் வேணாம்னு பிடிவாதம் பண்ணாதீங்க. உங்க டாக்டர் உங்களுக்கு எது சரின்னு முடிவு பண்றாங்களோ அதை கேட்டுக்கங்க. அது சிசேரியனாவே இருந்தாலும். வருந்த தேவை இல்லை. அது ஒன்னும் பெரிய மேட்டர் இல்லை. ஓப்பன் ஹார்ட் சர்ஜரியே சாதாரணமாயிட்ட இந்த காலத்துல சிசேரியனுக்கு பயம்??

இன்னொன்னு மக்களே... இங்க கர்ப்பமா இருக்க எல்லாருக்கும் தான்... நார்மல் தான் பெஸ்ட்டுன்னு அந்த காலத்துல சொன்னதையே இன்னும் யோசிக்காதீங்க. இப்போ நாம எல்லாம் அவ்வளவு ஆரோகியமா இல்லை. பிள்ளையை ஆரோக்கியமா வெளிய கொண்டு வர எது நல்லதுன்னு உங்க டாக்டர் உங்களுக்கு சொல்றாங்களோ அதை கேளுங்க. அட்வைஸ் பண்ணும் அளவு நானும் டாக்டரில்லை. ரொம்ப பெரிய சிரமங்களை சந்திச்சு இரண்டு பிள்ளைகளுக்கு தாயான ஒரு அனுபவம் மட்டுமே பேசுது. நார்மலையும் பார்த்துட்டேன், சிசேரியனும் பார்த்துட்டேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எங்க டாக்டர் நொர்மல் எ try பண்ணலாம் நு சொன்னாங்க ..
அந்த‌ நேரம் எப்படி ஆகுதோ கடவுள் விட்ட‌ வழி..
பட், அதுக்கு அப்பறம் family planning பண்ணனும் நு நெனச்சேன். அதுக்கு operation இல்லாம நல்ல வழி சொல்லுங்கலேன் ப்ளீஸ்..

Thanks,
Subadra.

மேலும் சில பதிவுகள்