உப்புமா (உதிரி உதிரியாக)

உப்புமா உதிரி உதிரியாக செய்வது எப்படிங்௧?

நீங்க உதிரியா கேட்கறீங்க... எனக்கு உதிரியா தான் செய்யவே வரும், இவருக்காக இவருக்கு பிடிச்ச மாதிரி கொஞ்சம் குழைய வைக்க நான் ஆரம்பத்தில் சிரமப்பட்டேன். ;(

எந்த ரவை பயன்படுத்தறீங்க? ரோஸ்டட் இல்லன்னா நீங்க ஒரு முறை வறுத்துக்கங்க. 1 கப் ரவைக்கு 2 கப் நீர் விட்டா குழையாம வரும். ரவையை போடும் முன் நீர் நல்ல கொதி நிலையில் இருக்கனும். மிதமான் தீயில் வைத்து ரவையை கொஞ்சம் கொஞ்சமா கரண்டியால் கிளறிகிட்டே சேர்க்கனும். சேர்த்ததும் சிறு தீயில் வைத்து மூடி போட்டு மூடனும். 3 - 4 நிமிடம் போதும். திறந்து ஒரு முறை நல்லா கிளறிவிட்டு அப்படியே மூடி அடுப்பை ஆஃப் பண்ணிட்டு 5 நிமிஷம் விடுங்க. எடுத்து பரிமாறும் போது மீண்டும் கிளறிவிடுங்க. நல்லா வரும். நான் அதிகம் எண்ணெய் சேர்ப்பதில்லை... 1 கப் ரவைன்னா நான் 2 தேக்கரண்டி எண்ணெய் தான் போடுவென். கூட போட்டாலும் உதிரியா வர நல்லா இருக்கும். இன்னொன்னு நான் ரவை, நீர் அளப்பதும் இல்லை... அம்மா போல கண் அளவு தான். நீர் கொதித்ததும் ரவையை கொட்டிக்கொண்டே வருவேன்... பாயாசம் பதம் வரும் போது நிறுத்திடுவேன். நல்லா வரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அக்கா, என்னவருக்கு உதிரி உதிரியாக‌ இருந்தால் தான் பிடிக்கும்.ஆனால் எனக்கு அப்படி செய்ய‌ தெரியாது. அதனால் உப்புமா சாப்பிடவே மாட்டார். நன்றி அக்கா.இனி முயற்சி செய்து பார்க்கிறேன்.

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

ட்ரை பண்ணிட்டு சரியா வந்துச்சான்னு சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உப்புமா உதிரியாக வர ரவையை வறுத்து விட்டு தண்ணீர் குறைவாக சேர்த்தால் உப்புமா நன்றாக வரும்

நன்றி ஜெயா

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

மேலும் சில பதிவுகள்