மசாலா புட்டு

தேதி: June 18, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

வறுத்த அரிசி மாவு - ஒன்றரை கப்
வறுத்த கோதுமை மாவு - ஒன்றரை கப்
தேங்காய் துருவல் - ஒரு கப்
கேரட் - ஒன்று (பெரியது)
உருளைக்கிழங்கு - ஒன்று (பெரியது)
பீன்ஸ் - ஒன்று
முட்டை - ஒன்று
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
பட்டர் - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

அரிசி மற்றும் கோதுமை மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வெதுவெதுப்பான தண்ணீர் தெளித்து பிசறி தேங்காய் துருவல் சேர்த்து உதிரியாக கலந்து கொள்ளவும்.
பிறகு மாவை புட்டுக் குழல் (அல்லது) இட்லிப் பானையில் வேக வைத்து உதிர்த்து வைக்கவும்.
கேரட், பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதங்கியதும், தக்காளி சேர்த்து குழைய வதக்கி தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
தூள் வகைகளின் பச்சை வாசனை போனதும் முட்டையை உடைத்து ஊற்றி வேகவிடவும்.
முட்டை அரை பதம் வெந்ததும், வேக வைத்த காய்கறிகள் மற்றும் பட்டர் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்.
அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து வந்ததும் வேக வைத்த புட்டைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
சுவையான மசாலா புட்டு தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

மசாலா புட்டு சூப்பர், கோதுமை மாவு, அரிசி மாவு, காய்கறிகள் எல்லாம் சேர்த்து செய்துருக்கீங்க ஆரோக்கியமான குறிப்பு.

ஆரோக்கியமான‌ சூப்பரான‌ மசாலா புட்டு. செய்துட்டு சொல்ற‌ அக்கா...

குறிப்பை வெளியிட்ட அன்பு டீமுக்கு நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

முதல் பதிவுக்கும் வருகைக்கும் நன்றி பாரதி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி அபிராமி. செய்துட்டு சொல்லுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ஆகா... எப்படிப்பா இப்படிலாம் வித்தியாசமா யோசிக்கறீங்க. இது தான் உமா உங்க குறிப்புகளில் எனக்கு பிடிச்சது... எல்லாமே வித்தியாசமானதா இருக்குறது. ட்ரை பண்ணிடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வித்தியாசமான குறிப்புங்க.
அரிசி,கோதுமை, காய்கள் மற்றும் முட்டைன்னு ,இது ஒரு முழுமையான உணவா இருக்குங்க.

ஆரோக்கியமான சூப்பரான குறிப்பு

Be simple be sample

நன்றி.... நன்றி... நன்றி வனி. செய்துட்டு சொல்லுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி அனு. இப்புடியெல்லாம் ஏதாவது கோல்மால் பண்ணாத்தான் எங்க சின்ன மேடமுக்கு காய்கறி இறங்கும். இல்லன்னா ரொம்ப கஷ்டம்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வருகைக்கு நன்றி ரேவ்ஸ்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

உமா,

உங்க‌ புட்டு அருமயா இருக்கு. நான் கன்டிப்பா try பன்னுவ‌. கார‌ புட்டு நான் சாப்டது இல்லை செஞ்சதும் இல்லை. என் வீட்டில் வயதானவர்க்கு என்ன‌ செய்ரது தரதுனு நிரய‌ நால் தெரியாம‌ இருக்கும். இந்த‌ புட்டு கன்டிப்பா ரொம்ப‌ ஹெல்பா இருக்கும். ரொம்ப‌ thanks. உங்க‌ wordings ரொம்ப‌ supera இருக்கு.

அன்புடன்,

பாலா

எல்லாம் சில‌ காலம்.....

வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி. செய்துட்டு எப்டி இருந்ததுன்னு சொல்லுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

உங்க‌ புட்டு செய்து சாப்டோம். வீட்ல‌ எல்லார்க்கும் பிடிச்சது. அருமையா இருந்துச்சி. ஹெல்தி. நன்றி உமா.

எல்லாம் சில‌ காலம்.....