thaiyal

Internet il e- learning valiyaga blouse and kids dress free ya thaikka patikalama.yes enil website address sollunga pls.illana neenga yaravathu daily one one chapter a vachi solli thara mutiuma pls.enga veetula veliya poi patika Vida mattanga.en baby Ku nanae dress thaikka asaiya iruku.pls yaravathu solli thanga sisters pls.

பெண் பிள்ளையா? “learn stitching for girls"னு தட்டுங்க குகில்ல. வீடியோஸ் போங்க. நிறைய இருக்கும். பார்த்து கத்துக்கங்க. முடிஞ்சா கேள்வியை தமிழில் மாற்றுங்க, பலரும் உதவுவாங்க. இங்கே வேறு லின்க் தர கூடாது... அதனால் தான் தேட சொல்லிருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Akka Nan cell Il arusuvai open panni kondu irukkiraen.aathalal Tamil lil type seyya mutiya villai.mannikkavum.

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

Akka enakku blouse patri therinthu kolla valli unda.?

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

Blousla ena therinjukanum nenga?

Kalam pon ponrathu

நார்மல் blouse cutting எப்படி பண்ணணும், stitching எப்படி பண்ணணும் தெரியனும் மா! ஏனெனில் என் delivery கு அப்புறம் நான் ரெம்ப குண்டாயிட்டேன்.புதுசு புதுசா எடுத்து தைக்க வேண்டி இருக்கு அதான் மா.ப்ளீஸ் சொல்லி தருவீங்களா?

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

யாராவது சொல்லி தாங்௧ப்பா பிளீஸ்

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

வனி சொன்னதற்கு மேல் உங்களுக்கு வேறு உதவி சட்டென்று கிடைக்காது. யாராவது மெஷர்மண்ட் எடுத்து கட்டிங் எடுக்கத் தெரிந்தவர்கள் கைவினைக் குறிப்பாக அனுப்பினாலொளிய இங்கு உதவி கிடைக்க வழி இல்லை. :-)

சுலபமான வழி சொல்கிறேன். முதலில் யாரிடமாவது கொடுத்து ஒரேயொரு ப்ளவ்ஸ் மட்டும் சரியான அளவுக்கு தைத்து எடுங்கள். பிறகு அதை பேப்பரில் வைத்து பார்ட் பார்ட்டாக ட்ரேஸ் செய்து வரைந்து எடுங்கள்.
முதுகு - பேப்பரை இரண்டாக மடித்துப் போட்டு, ப்ளவ்ஸையும் இரண்டாக மடித்துப் போட்டு ட்ரேஸ் செய்யலாம். வரையும் முன்பே பேப்பரை கீழ் மடிப்புக்கு அளவாக வரும் விதமாக மடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நெஞ்சுப் பகுதி - வரையும் போது நினைவாக எது கழுத்து எது கைப்பகுதி என்பதைக் கட்டிங்கில் குறித்து வைக்க வேண்டும். டாட்ஸ் வரும் இடங்களில் மாற்றங்கள் செய்யும் விதத்தை இப்படி எழுத்தில் விபரிக்க இயலாதே! ;( நீங்கள்தான் யோசித்து வரையவேண்டும். அடையாளம் செய்து வைக்கவும் வேண்டும்.
முன்பக்க கீழ்த்துண்டு - இதற்கும் எது திறந்த பக்கம் எது பொருத்துப் பக்கம் என்பதைக் குறித்து வைத்திருக்க வேண்டும்.
கை - கட்டிங் முன்பக்கம் கொஞ்சம் உள்ளே வளைந்தது போல இருக்கும்.

எல்லாவற்றுக்கும் சுற்றிலும் தையலுக்கு இடம் விட்டு வரைந்து எடுங்கள்.

துணியில் வெட்டும் போது துணியை இரண்டாக மடித்துப் போட்டு வெட்டுவீர்களானால் முன்பக்கம் இரண்டும் சரியாக வரும். முதுகு x 1, நெஞ்சு x 2, கை x 2, நெஞ்சு கீழ்ப்பக்கம் x 4 இதோடு கூட பைப்பிங் வெட்டி எடுக்க வேண்டும். பைப்பிங் குறுக்குத் துண்டில் வெட்டிப் பொருத்த வேண்டும். இது லைனிங் இல்லாமல் தைக்கும் ப்ளவ்ஸுக்கு.

முதலில் டாட்ஸைத் தைத்துக் கொண்டு மீதியை ஒரு முறை நூலோடிப் பொருத்தி மாட்டிப் பாருங்கள். எந்தப் பகுதியை முதலில் தைக்க வேண்டும் என்பது ஏற்கனவே இருக்கும் ப்ளவ்ஸைப் பார்த்தால் புரியும். எங்கு பிடிக்க வேண்டும், எங்கு இன்னும் விட்டுத் தைக்க வேண்டும் என்பதைக் கவனித்துக் குறித்துக் கொண்டு நூலோட்டத்தைப் பிரித்துவிட்டு மெஷினில் தைத்து எடுங்கள்.

சரியாக கட்டிங் எடுக்க இன்னொரு வழி... சரியான அளவு ப்ளவ்ஸின் இடது பக்கம் கை, முன்பக்கம் எல்லாம் பிரித்துப் போட்டு அந்தத் துண்டுகளை வைத்து பேப்பர் கட்டிங் எடுக்கலாம். பிரிக்கும் போது எப்படித் தைத்திருக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். பிறகு திரும்பத் தைக்கலாம். மறந்து போனால் வலது பக்கம் பார்த்துப் பார்த்துத் தைக்கலாம். முதுகு பிரிக்காமல் அப்படியே வைத்து கட்டிங் எடுக்கலாம். தையலுக்கும் மடிப்புகளுக்கும் மட்டும் சரியாகக் கணக்குப் பார்த்து விட்டால் போதும்.

பிரிக்கும் போது துணி கெட்டுப் போகாமல் பத்திரமாகப் பிரிக்க வேண்டும். முதலில் தைத்த ஊசி அடையாளம் தெரியாமல் அதன் மேலேயே தைத்துவிடுங்கள். கொஞ்சம் அப்படி இப்படி ஆனாலும்... இடது பக்கம்தானே! சேலை மறைத்துவிடும். :-)

ஒரு பழையை சேலையை வெட்டி முதல்ல தைச்சுப் பாருங்க. ட்ரை பண்ணுங்க. சரி வரும். பிறகு துணி வாங்கித் தைக்க ஆரம்பிக்கலாம். வெற்றிகரமாக வேலையை முடிச்சீங்கன்னா லைனிங் ப்ளவ்ஸ் சொல்லித் தரேன். ;)

குட் லக்! ;)

‍- இமா க்றிஸ்

கொஞ்சம் கஸ்டம்னு தான் நினைக்கிறேன்.சரி அக்கா முயற்சி செய்து பார்க்கிறேன்.

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

வாவ் ரொம்ப நல்லா சொன்னீங்க நானும் ட்ரை பன்ட்ரேன் நன்றி அக்கா

யோசனை யாரிடம் வேண்டுமானாலும் கேள். ஆனால்,முடிவை நீ மட்டும் எடு.

சரி அக்கா முயற்சி செய்து பார்க்கிறேன்.

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

மேலும் சில பதிவுகள்