பட்டர் இறால் முட்டை மசாலா

தேதி: June 19, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

பட்டர் - 2/3 தேக்கரண்டி
இறால் - ஒரு கப்
வேக வைத்த முட்டை - 4
வெங்காயம் (பெரியது) - 2
தக்காளி (பெரியது) - 2
பட்டை - சிறிது
கிராம்பு - ஒன்று
ப்ரிஞ்சி இலை - ஒன்று
சோம்பு - சிறிது
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது


 

இறாலைச் சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் பட்டர் போட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை மற்றும் ப்ரிஞ்சி இலை சேர்த்து பொரிந்ததும், வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கி, இறாலைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும்.
இறால் வெந்ததும் சோயா சாஸ் ஊற்றிக் கிளறவும். மசாலா திக்கானதும் அதனுடன் முட்டைகளை குறுக்காக வெட்டிப் போட்டு நன்கு பிரட்டி இறக்கவும்.
சுவையான பட்டர் இறால் முட்டை மசாலா தயார். சாத்தில் போட்டுச் சாப்பிட அல்லது சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிகவும் பொருத்தமாக இருக்கும்.

சின்ன வெங்காயத்தை நசுக்கிப் போட்டுச் செய்தால் இன்னும் அதிகச் சுவையாக இருக்கும்.

முட்டையைப் போட்டு பிரட்டும் போது மஞ்சள் கரு தனியாக வராதவாறு பார்த்துப் பிரட்டவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கலக்கலான குறிப்பு... எனக்கு இறால் ரொம்ப பிடிக்கும்... முட்டையும் தான்... ரெண்டும் சேர்த்து சூப்பரா செஞ்சுருக்கீங்க... கடைசி படத்தை பார்த்ததுமே கண்டிப்பா செஞ்சு பார்த்தே ஆகனும்னு தோணுது..

-> ரம்யா

பார்க்கவே ரொம்ப டேஸ்டா இருக்கு அருமையான குறிப்பு வாழ்த்துக்கள்

இறால் முட்டை மசாலா அருமை இரண்டும் நல்ல காம்மினேசன் சூப்பர்.

பார்க்கும்போதே சாப்பிடத்தூண்டுதுங்க.....

இறால் செய்யும்போது அதுல இனிப்புத்தன்மை வந்துடுதே , அப்படி இல்லாமல் இருக்க ஏதாவது சேர்ப்பீங்களா?

சூப்பர். எதாவது பார்ட்டி வரும் போது கட்டாயம் செய்யனும். வீட்டில் இறால் இவர் விரும்பி சாப்பிடுவதில்லை ;( நான் மட்டும் சாப்பிட வேண்டியதாகிடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பு வெளியிட்ட அட்மினுக்கு நன்றி.

அனு. எனக்கு இது வரைக்கும் அது போல வந்தது இல்லை. வேனும்னா கொஞ்சம் காரம் கூட சேர்த்து பாருங்கள்.

பின்னூட்டம் கொடுத்த அனைத்து தோழிகளுக்கும் நன்றி

செம யம்மி.ஆசைய கூட்டுது.கண்டிப்பா பட்டர்தான் சேர்க்கணுமா

Be simple be sample

சூப்பர் நித்யா. இறால், முட்டை காம்பினேஷன் ரொம்ப நல்லாருக்கு. :-)

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

இறால் பிடிக்காது சோ இறால் இல்லாமல் செய்கிரேன்