
ஒரு கருத்தரங்கில் நிறைய பெண்கள் கூடி இருந்தனர்.கணவருடன் இனிமையாக எப்படி வாழ வேண்டும் என்பதற்க்கான செமினார் அங்கு நடந்தது.
அங்கிருந்த பெண்களிடம், "எத்தனை பேர் உங்கள் கணவரை நேசிக்கிறீர்கள்?" என்று கேட்டனர்.
அத்தனை பேரும் கையை உயர்த்தினர்...
எப்பொழுது உங்கள் கணவரை நீங்கள் நேசிப்பதாக அவரிடம் சொன்னீர்கள் என்று அடுத்த கேள்வி கேட்டார்கள்.
சிலர் இன்று, சிலர் நேற்று, சிலர் ஞாபகம் இல்லை என்று பதில் வந்தது..
அனைவரும் உங்கள் மொபைலை எடுத்து உங்கள் கணவருக்கு "I Love you sweetheart" என்று மெசேஜ் அனுப்புங்கள் என்று சொல்லவும், அனைவரும் மெசெஜ் அனுப்பினர்.
அவர்களுக்கு வந்த பதில்கள் சில....

1.ஏய், உனக்கு உடம்பு நல்லா தானே இருக்கு....
2.என்னாச்சு, காரை திரும்ப மோதிட்டயா?
3.எனக்கு புரியல நீ என்ன சொல்ல வரன்னு?
4.இப்ப என்ன பன்னுன நீ, ? இந்த முறை நான் உன்னை மன்னிக்க மாட்டேன்....
5.???!!??
6. சும்மா சுத்தி வளைக்காத சொல்லு எவ்வளவு வேனும்ன்னு?
7.யாருக்கு இந்த மெசெஜ்ன்னு நீ சொல்லல இன்னைக்கு அவ்வளவு தான்!!
8.நான் உன்கிட்ட சொல்லிட்டேன் குடிக்காத இதுக்கு மேலன்னு....
9.கனவு எதும் கண்டுக்கிட்டு இருக்கேனா?
10.யாரு நீங்க????
இது எனக்கு What's app-ல் தோழி அனுப்பியது, எதார்த்தமாய் நகைச்சுவையாகவும் இருந்தது, அதனால் இங்கு தோழிகளுக்கு பகிர்கிறேன், நீங்களும் உங்கள் கணவருக்கு ஒரு மெசெஜ் அடிங்கோ:)), வருகிற ரிப்லேவை விரும்பினால் இங்கு பகிரவும்:))
Comments
ரேணு,
தினமும் ஒரு வார்த்தை,நிதமும் ஒரு புன் சிரிப்பு, அவ்வப்போது கன்னத்தில் ஒரு முத்திரைன்னு இதைத்தான் பழக்கப்படுத்திக்கனும்.அவங்களும் இதை விரும்புவாங்க.பட் இலைமறை காய்மறையாக.....வாழ்க்கை அலுப்பில்லாமல் செல்லும்.......தேங்ஸ் ஃபார் ஷேரிங்.....:)
ரேணுகா சிஸ் :)
பெருமைக்குன்னு சொல்லவில்லை.வாரமொருமுறை + சண்டை போட்ட நாட்களில் கட்டாயம் எஸ்.எம்.எஸ் அனுப்பிடுவேன்..இதுவரை ஒரு ரிப்ளை வந்ததில்லை..அதுக்கு பதிலும் எதிர்பார்த்ததில்லை..
ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "
ரேணு
படிச்சிருக்கேன் இதை நானும் ;) நல்ல பகிர்வு.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரேணு..
நல்ல நகைச்சுவை பகிர்வு ரேணு...:) //நீங்களும் உங்கள் கணவருக்கு ஒரு மெசெஜ் அடிங்கோ:)),// அது தான் டெய்லியும் அடிச்சாகுதே.. ;) ஆமா உங்க ஆத்துக்காரர் கிட்ட இருந்து நீங்க அட்ச்ச மெசெஜ்க்கு வந்த ரிப்ளை என்ன ரேணு??;)..;)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
ரேணு
ஆமா ரேணு நீங்க சொன்ன மாதிரி நல்லா நகைச்சுவையாய் இருந்தது, படிப்பதற்கும் சுவாராசியமா இருந்தது.
ரேணு
பல வீடுகளில் இது உல்ட்டாவா நடக்க வாய்ப்பிருக்கு.அன்பை வெளிப்படுத்தாத மனைவிகளை விட கணவர்களே அதிகம்னு நினைக்கிறேன். நான் மட்டும்தாங்க அப்படி நினைக்கிறேன்,மத்தவங்களை பத்தி தெரியாது.
ரேணு
அட ஏங்க காமெடி பண்ணினு.
Be simple be sample
renuka
நா என்னவருக்கு I LOVE U சொன்னேன் . உடனே அவரு என்ன ஆச்சு உனக்கு? னு கேட்டார் எனக்கு சிரிப்பு வந்துருச்சு.
'I <3 u'
இந்தக் ஜோக்! இணையத்துல பலமுறை உலா வந்திருக்கு. ;)
//பெருமைக்குன்னு சொல்லவில்லை.// இல்லீங்க. நிச்சயம் இது பெருமைப்பட்டுக்கக் கூடிய விஷயம்தான். சூப்பர் ஜெயா. :-)
நான் ஆரம்ப காலத்துல வீட்டுல இருந்துட்டே தபால் போட்டிருக்கேன் இப்படி. ;) இப்பவும் கண் முன்னால இருக்கிறப்ப ஆன்லைன்ல மோபைல்ல அடிக்கடி மெசேஜ் அனுப்புறது உண்டு. பதிலாக ஒரு ஸ்மைலி, மீ டூ, தாங்ஸ், ப்ரவ்ட் டு ஹாவ் யூ இன் மை லைஃப் (தபால்னா அடிஷனலா ஒரு குரங்கு படமும் வரும்.) இப்படித்தான் வந்திருக்கு. அந்த ஜோக்ல வர மாதிரி கேட்டதே இல்லை ஒரு நாளும்.
- இமா க்றிஸ்
ஹாஹா எனக்கு மெசெஜ் தினமும்
ஹாஹா எனக்கு மெசெஜ் தினமும் அனுப்பும் பழக்கம் இல்லை, பட் ஊர்ல இருக்கப்ப அனுப்புவேன்:) அப்ப மட்டும் தான் ரிப்லே வரும்,
அது மட்டும் இல்லாம இமா சொல்ற மாதிரி, ஆளுக்கு ஒரு ரூம்ல உட்காந்து சாட் பன்னுவோம், நோ பேச்சு ஏகபட்ட படம் தான் இருக்கே, குட்டி குட்டியா மொத்த படமும் தீர்ந்து போற அளவுக்கு படத்தாலேயே பேசி தீர்ப்பேன்,
ஆனா இந்த மெசெஜ் வச்சு வீட்ல நடந்த காமெடி கொஞ்சம் இல்லை, இப்ப நினைச்சாலும் வயிறு வலிக்க சிரிக்க வேண்டியதா இருக்கு:))
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
ரேணுகா
நான் நினைச்ச நேரம் அனுப்புவேன். எவ்வளவு வேலையா இருந்தாலும் கண்டிப்பா I love you too, me too ரெண்டுல ஒன்னுதான் கண்டிப்பா வரும். இப்டியெல்லாம் வந்ததே இல்ல. :-)
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா