தேதி: June 20, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
நேந்திரன் பழம் - 2
சீனி - அரை கப்
நெய் - கால் கப்
ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை
தேவையானப் பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

நேந்திரன் பழத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி, ஆவியில் 5 நிமிடங்கள் வேக வைத்து ஆற வைக்கவும்.

ஆறியதும் மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு பழக் கூழை ஒரு நாண் ஸ்டிக் பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து கைவிடாமல் 5 நிமிடங்கள் கிளறவும்.

அத்துடன் சர்க்கரை மற்றும் ஏலக்காய்ப் பொடி சேர்த்து மீண்டும் கிளறவும்.

இடையிடையே நெய் சேர்த்து கலந்து நன்கு கிளறவும்.

கலவை நன்கு கெட்டியாகி ஓரங்களில் ஒட்டாமல் வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி, நெய் தடவிய தட்டில் போட்டு துண்டுகள் போடவும்.

சுவையான நேந்திரன் பழ அல்வா தயார்.

நேந்திரன் பழம் இல்லாதவர்கள் சாதாரண வாழைப் பழத்தை வேக வைக்காமல் கூழாக்கி இது போன்று செய்யலாம்.
அவரவர் விருப்பத்திற்கேற்ப நெய்யையும், சர்க்கரையையும் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
Comments
வாணி
சூப்பரு. இதுவரை நேந்திரம் பழத்தில் செய்ததில். வெறும் வாழையை அப்படியே கூழாக்கி செய்திருக்கென். இது இன்னும் ஹெல்தி, அவசியம் ட்ரை பண்றேன் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வாணி
நேந்திர பழத்தில் அல்வா அற்புதம், கடைசி படம் அழகாக உள்ளது.
வாணி
சூப்பரா இருக்கு. கண்டிப்பா செய்துபார்க்கிறேன் .
Be simple be sample
வாணி
அருமை வாணி. வனி பலாப்பழத்துல அசத்துறாங்க. நீங்க நேந்திரம்பழத்துல அசத்துறீங்க. கலக்குங்க ரெண்டு பேரும்.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
வாணி
வாணி என் பொண்ணுக்கு நேந்திரம் பழம்னா இஸ்டம் செய்துபாக்கிரேன்.
வாணி அக்கா
நேந்தரம் பழத்தை வேக வைக்கும் போது தோலுடன் வேக வைக்கணுமா, சாதாரண வாழை பழத்தை அறைக்கும் போது தோலுடன் அறைக்கனுமா என்று எனக்கு தெளிவு படுத்துங்கள் அக்கா.
நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை.
கீதா கோபால்
Nice sister
Nice sister
கீதா கோபால்
வாணி பதில் தர தாமதமாகலாம்... இப்போ தான் பிள்ளை பெற்றிருக்கிறார்கள். அதனால் நான் பதில் சொல்றேன்... நேந்திரம் பழம் தோலோடு வேக வெச்சுட்டு தோலை நீக்கி மசிப்பாங்க, சாதாரண வாழைப்பழம் என்றால் தோலை நீக்கிட்டு அப்படியே அரைக்கலாம் (வேக வைக்காமல்).
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி அக்கா
வாணி அக்காவுக்கு முதல் குழந்தையா? வாழ்த்துக்கள் சொன்னேன்னு சொல்லிடுங்க்
உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி
வாணி
வாணி நேந்திரன் அல்வாசெய்தேன் சூப்பரா இருந்தது,குழந்தைகளூம் நல்லா சாப்பிட்டாங்க,நன்றி
ஹாசனி
இரண்டாவது குழந்தை. வாழ்த்துக்கள் நீங்க சொன்னதை அவங்களே படிச்சுருவாங்க ;) எனக்கும் அறுசுவையில் தானே தெரியும் அவங்களை ;) நான் எங்க போய் சொல்ல? ஹஹஹ.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
vani
நான் சாதாரண வாழை பழத்தில் செஞ்சேன். ரொம்ப நல்லா இருந்துச்சி. என் மாமியார் ரசிச்சி சாப்டாங்க. என் குழந்தையும் நல்லா சாப்டான். சூப்பர் வாணி. ரொம்ப சிம்புள் அன்ட் சூப்பர் ஹல்வா. thanks vani.
எல்லாம் சில காலம்.....