ஆபரேசன் செய்திருந்தால் குழந்தை பிறக்குமா

தோழீஸ்,எனக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது ,குழந்தைக்காக‌ எத்தனயோ ட்ரீட்மென்ட் பன்னிவிட்டோம்,இன்னும் அந்த‌ பாக்கியம் கிடைக்கவில்லை,முன்பு இருவருக்கும் எந்த‌ பிரச்சனையும் இல்லை என்று சொன்னாங்க‌,இப்போ என் கணவருக்கு விந்து எண்ணிக்கை அதிகமாக‌ இருந்தாலும் அதன் தலை மற்றும் வால் பகுதி குறைவாக‌ இருக்கிற்து என்கின்றனர்,அவருக்கு மாத்திரைகளும் கொடுத்து இருக்கிறார்கள்,ஆனால் இன்னும் கரு தங்கவே இல்லை

எனக்கு திருமணத்திற்கு முன் ஆபரேசன் ஆகிருக்கு,வயிற்றில் 24 தையல் எனக்கு தொப்புள் கூட‌ ஆபரேசன் ல‌ எடுத்துட்டாங்க‌,எனக்கு இதனால‌ தான் குழந்தை தங்கலயானு பயமா இருக்கு ,ஆனால் டாக்டர் கிட்ட‌ கேட்டு தான் நாங்க‌ திருமணம் பன்னோம் அதெல்லாம் எந்த‌ பிரச்சனையும் இல்லை என்று சொன்னாங்க‌
இப்போ பார்க்கிற‌ டாக்டர் கூட‌ அதெல்லாம் பிரச்சனை இல்லை என்றார்,

யாருக்காவது இப்படி இருந்து குழந்தை பிறந்திருக்கா தோழீஸ்,
எங்க‌ மாமியார் கிட்ட‌ ஒவ்வொரு மாதமும் எதோ தப்பு பன்ன‌ மாதிரி சொல்லவே பயமா இருக்கும்,
ப்ளீஸ் யாராச்சும் உதவி பன்னுங்க‌ பா,நாங்க‌ எப்படி இருக்க‌ வேண்டும் ,அவருக்கு எந்த‌ மாதிரி உணவு கொடுத்தா விந்தனுவின் தலை மற்றும் வால் பகுதி அதிகமாகும்
மனசே வெறுத்துப்போச்சி,சாக‌ கூட‌ நினைக்கிறேன்,ஆனால் என் கணவரை விட்டு பிரிய என்னால் முடியாது அதான் ,எனக்காக‌ கடவுள் கிட்ட‌ வேண்டிக்கோங்க‌

வைட்டமின் பி நிறைந்துள்ள உணவுகளான பாலாடை கட்டி, முட்டை, பால், கெட்டி தயிர், தானியங்கள், கீரைகள், பருப்பு வகைகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வது, விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும்.ஜிங்க் உணவுகளான கடல் சிப்பிகள், எள் மற்றும் சூரியகாந்தி விதைகள், இஞ்சி, கோதுமை, இறைச்சி, டார்க் சாக்லேட், தர்பூசணி விதைகள் மற்றும் பூசணி விதைகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து வருவது, ஆரோக்கியமான விந்தணு உற்பத்திக்கு வழிவகுக்கும்.
செலினியம் நிறைந்துள்ள உணவுகளான மட்டி (Shellfish), ஈரல், மீன், சூரியகாந்தி விதைகள், நண்டுகள், இறால்கள், கடல் நண்டுகள், அரிசி, கோதுமை, ஓட்ஸ் போன்ற தானியங்கள் விந்தணு குறைபாட்டைத் தடுக்கும்.ஃபாஸ்ட் புட், ஜங்க் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்கவும்

யோகாசனங்களை தினமும் மேற்கொண்டு வந்தால், விந்தணு குறைபாட்டில் இருந்து விடைபெறலாம். - அக்னிசார் கிரியா (Agnisaar kriya) - ஹலாசனம் (Halasana) - சேதுபந்தாசனம் (Setubhandhasana) - தனுராசனம் (Dhanurasana) - அஷ்வாணி முத்திரை (Ashwani Mudra) - பஸ்ற்றிக பிராணயாமம் (Bhastrika Pranay ........

sister ithu ellam naa net la paarthathu..........

மிக்க‌ நன்றி தோழி,
நான் கண்டிப்பாக‌ நீங்க‌ சொல்றதை முயற்ச்சி செய்கிறேன்,
ஆபரேசன் ஆனதால் எதாவது பிரச்சனை இருக்குமா தோழி

//எனக்கு திருமணத்திற்கு முன் ஆபரேசன் ஆகிருக்கு,// கர்ர்ர்... என்ன ஆப்பரேஷன் என்று சொல்லாம மொட்டையா சொல்றது அறுசுவைக்கு ஓகே. உறவுகள் நட்புகள்ட்ட எல்லாம் தேவையில்லாம புலம்பாதீங்க. கருத்தடை ஆப்பரேஷன் பண்ணல உங்களுக்கு. அதுக்கு 24 தையல்லாம் போட மாட்டாங்க. யார்ட்டயாச்சும் சொல்ல வேண்டியது கட்டாயம் என்று வந்தால்... இன்ன சர்ஜரி என்று குறிப்பிட்டு சரியா சொல்லித்தான் பேசணும். இப்பிடி மொட்டையா எதுன்னு இல்லாம பேசுறது... உங்க தலைல நீங்களே மண்ணை வாரிப் போடுற மாதிரி.

//எனக்கு தொப்புள் கூட‌ ஆபரேசன் ல‌ எடுத்துட்டாங்க‌,// ;) ஏவாளுக்கு ஆப்பரேஷன் பண்ணாமலே தொப்புள் இருக்கலயாம். இது ஒரு மாட்டரே இல்ல. குழந்தை தொப்புளுக்கும் உங்களுக்கும்தான் தொடர்பு இருக்கும். உங்க தொப்புளுக்கும் குழந்தைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

//டாக்டர் கிட்ட‌ கேட்டு // ம்... அவங்க சொன்னதை நம்பல. எங்கள்ட்ட கேட்கறீங்க!

//யாருக்காவது இப்படி இருந்து குழந்தை பிறந்திருக்கா தோழீஸ்,// கேள்வியே தப்பு. பாதி விபரம் சொல்லி ஒரு கேள்வி கேட்டுட்டு அதுக்கு வரும் பதில்களை வைச்சு இருக்கிறதுக்கு மேல குழம்பப் போறீங்க.

//எங்க‌ மாமியார் கிட்ட‌ ஒவ்வொரு மாதமும் எதோ தப்பு பன்ன‌ மாதிரி சொல்லவே பயமா இருக்கும்,// ஏன் இப்படி நினைக்கிறீங்க??

//மனசே வெறுத்துப்போச்சி,சாக‌ கூட‌ நினைக்கிறேன்,// உங்களைத் தவிர இன்னொருவரால் உங்களுக்கு உதவ முடியாது.
//என் கணவரை விட்டு பிரிய என்னால் முடியாது// சொன்னாங்களா அவங்க பிரிஞ்சு போகச் சொல்லி! இல்ல மாமி சொன்னாங்களா! ஏன் இப்பிடி யோசிக்கிறீங்க? கர்ர்...

//எனக்காக‌ கடவுள் கிட்ட‌ வேண்டிக்கோங்க‌// :-) தனக்குத்தானே உதவ முயற்சி செய்யாதவங்களுக்கு கடவுள் உதவ மாட்டார். நீங்க தேவையில்லாம யோசிக்கிறீங்க. நான் அட்வைஸ் பண்றதாலயோ ஆயிரம் பேர் உங்களுக்காக ப்ரே பண்றதாலயோ நீங்க மாறமாட்டீங்க. நீங்களா நினைச்சு மாறணும். சுயபச்சாத்தாபம் எதுக்கும் உதவாது. இதுல இருந்து வெளிய வாங்க.

உங்கள் கணவர் பிரச்சினைக்கு... பிரச்சினை இன்னது என்று சொன்ன டாக்டர் சரியாக வழி சொல்லி இருப்பார்ல! அதை ஃபாலோ பண்ணுங்க. நீங்க உங்களையும் உங்க டாக்டரையும் நம்பணும் முதல்ல. மனசை கண்டபடி ஓடவிடக் கூடாது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்