எண்ணெய் முருங்கைக்காய்

தேதி: June 21, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

முருங்கைக்காய் - 3
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 3
சோம்பு - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி
மிளகாய் தூள். - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 5 தேக்கரண்டி


 

முருங்கைக்காயைச் சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
தேங்காயுடன் சோம்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து வைக்கவும்.
வெங்காயத்துடன் தக்காளியைச் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். (விழுதாக அரைக்க வேண்டாம்).
வாணலியில் எண்ணெய் ஊற்றி முருங்கைக்காயைப் போட்டு வதக்கவும்.
அத்துடன் வெங்காயம், தக்காளி விழுதைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு சிறிது தண்ணீர் விட்டு மிளகாய் தூள் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கி வேகவிடவும்.
முருங்கைக்காய் வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை பிரட்டி இறக்கவும்.
சுவையான எண்ணெய் முருங்கைக்காய் தயார். சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ்... முருங்கையில் இப்படி செய்ததில்ல.. கட்டாயம் ட்ரை பண்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சோம்பு போடாமல் அம்மா இப்ப்டித்தான் செய்வாங்க.சூப்பர் நித்யா

நித்யா அசத்திரீங்க போங்க, நான் எண்ணெய் கத்தரிக்காய் தான் செய்துருக்கேன் எண்ணெய் முருங்கைக்காய் சூப்பர்.

பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்கு. நாளைக்கு நான் கண்டிப்பா செய்து பார்த்துடுறேன். என் மாமியாருக்கு முருங்கைக்காய் பொறியல் ரொம்ப பிடிக்கும். இப்ப இதை செய்து அசத்த போறேன்.

நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை.

கீதா கோபால்

வாவ்....சூப்பர் நித்யா. எண்ணெய் முருங்கைக்காய் பார்க்கும்போதே ஆசையா இருக்கு.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

எண்ணை முருங்கைக்காய் இன்று செய்தேன். செம டேஸ்ட்.