குக்கூ நெஸ்ட்

தேதி: June 23, 2014

5
Average: 4.6 (5 votes)

 

முட்டை ஓடு - 2
தேங்காய் நார்
பஞ்சு
க்ளூ (தேவைப்பட்டால் செல்லோ டேப்)
கடுகு - கண்களுக்கு
ப்ளாஸ்டிக் பாக்ஸின் மூடி (அ) அட்டை

 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். தேங்காய் நாரைத் தட்டிப் பிரித்து எடுத்துக் கொள்ளவும். முட்டை ஓடுகளைக் கழுவி காயவைக்கவும்.
ப்ளாஸ்டிக் பாக்ஸின் மூடி (அ) அட்டையில் க்ளூ தடவி, அதன் மேல் தேங்காய் நாரை வட்டமாக ஒட்டவும். (நாரை வட்டமாகச் சுற்றி ஒட்டிவிட்டு செல்லோ டேப்பாலும் ஒட்டலாம்). அதன் நடுவில் அட்டைத் தெரியாதவாறு சிறிது தேங்காய் நாரை விரித்து வைத்து ஒட்டிவிடவும்.
முட்டை ஓட்டின் உள்ளே க்ளூ தடவி பஞ்சை வைத்து ஒட்டவும். குருவியின் தலைப்பாகத்திற்கு படத்தில் காட்டியுள்ளது போல் முட்டை ஓட்டின் ஏதாவது ஒரு புறம் மட்டும் சிறிது பஞ்சை வைத்து வெளிப்புறம் பாதி பஞ்சு தெரிவதுபோல் ஒட்டிவிடவும். இதே போல் மற்றொரு முட்டை ஓட்டிலும் பஞ்சை ஒட்டிக்கொள்ளவும்.
பிறகு கண்களுக்கு க்ளூ வைத்து கடுகை ஒட்டவும். முட்டையின் அடியில் க்ளூ தடவி ஒட்டி வைத்துள்ள தேங்காய் நாரின் நடுவில் ஒட்டி காயவிடவும்.
அழகிய குக்கூ நெஸ்ட் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

குக்கூ நெஸ்ட் அழகா இருக்கு ரேணுகா மேடம்... முதல் கைவினை குறிப்புக்கு வாழ்த்துக்கள்... இன்னும் பல குறிப்புகள் கொடுங்க...

கலை

ரொம்ப அழகா இருக்கு... வாழ்த்துக்கள்

முதல் கைவினை குறிப்புக்கு வாழ்த்துகள், குக்கூ நெஸ்ட் ரொம்ப அழகா இருக்கு சூப்பர்.

க்யூ..ட்டா இருக்கு குக்கூஸ் நெஸ்ட்.

‍- இமா க்றிஸ்

வாவ்..சூப்பர். குக்கூ நெஸ்ட் க்யூட்டாவும், செய்ய‌ ஈசியாவும் இருக்கு. என் பொண்ணு பார்த்துட்டு டை பண்றேன்னு சொல்லியிருக்கா.. முதல் கைவினை குறிப்புக்கும் இனி மேலும் தொடரவும் என் வாழ்த்துகள் ரேணு..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

குக்கூ நெஸ்ட் அழகா பண்ணிருக்கீங்க.வாழ்த்துகள்

WOW ! Super ....

என் சமையல் குறிப்புக்கு இம்புட்டு நாள் கழிச்சு பின்னூட்டமா என்றே நினைச்சேன் சமீபத்திய பதிவுகளை கண்டு ;) பார்த்தா இங்க இப்படி அழகா 2 இருக்கு. சூப்பர். சமையலா கைவினையா என்று என் குறிப்பில் அப்போது படித்த நினைவு. கைவினையும் அதே பேரில்... அசத்துங்க. முதல் குறிப்புக்கு வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கைவினையில் எனது முதல் குறிப்பை வெளியிட்ட‌ அண்ணா அண்டு டீமுக்கு நன்றிகள் பல‌.

ரொம்ப‌ நன்றி கலை,வருகைக்கும் வாழ்த்துக்கும்.

பிரியா பாலபாரதி வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க‌ நன்றிப்பா...

இமா தேங்க் யூ..... உங்க‌ கிட்டயும் ரேணுவிடமும் இருந்து இன்னும் பலது கத்துக்கப்போகிறேன். உங்கள் இருவரை பார்த்துதான் விட்டதை துவங்க‌ ஆசை வந்தது.அதர்க்கும் சேர்த்து நன்றிகள் :‍)

நன்றிகள் சுமி, சந்தோஷம் குட்டிக்கு பிடிச்சிருக்கா? பொறுமையா செய்யசொல்லுங்க‌.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்ப்பா இருவருக்கும்.

நிஜமா உங்க‌ சமையல் குறிப்பை பார்க்கும்போது நான் நினைத்தேன் நா வச்ச‌ பெயரையே இவங்களும் யோசிச்சிருக்காங்கன்னு. ஏன்னா இது பள்ளி செல்றச்சே செஞ்சு பரிசு வாங்கியது.இதன் பெயர் அப்பவே கொடுத்துட்டேன்.
இதை பார்த்துட்டு என்னவர் உங்களோட‌ குக்கூ நெஸ்ட் எப்ப‌ செய்யப்போறன்னு கேட்டுட்டார்...அனைவருக்கும் ரொம்ப‌ புடிச்சிருந்தது....தேங்க்ஸ் ஃபார்தட் ரெஷிபி.

வந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள் வனி....:)