குழப்பம் தீர்த்துவையுங்கள்

தோழிகளே,சகோதரிகளே,
என்னையும் உங்கள் தோழியாகவும்,சகோதரியாகவும் நினைத்து உதவுங்கள், அட்வைஸ் பண்ணுங்கள், ஆலோசனை கூறுங்கள்

என்னை ஒருவர் பல‌ வருடங்களாக‌ காதலிக்கிறார், என்னிடம் சில‌ வருடத்திற்கு முன் கூறினார், நான் சம்மதிக்கவில்லை........ அவர் நல்லவர் தான் ஆனால் எங்கள் வீட்டிற்கு சரி வராது என‌ நான் விலகியே இருந்தேன்,

நான் எவ்வளவோ சொல்லியும் , என் குடும்ப‌ நிலைமையை விலக்கியும் ஒரு பயனும் இல்லை, ஆனால் விடாமல் ரொம்ப‌ என் மேல் பாசம் வைத்து கஸ்ட‌ பட்டார்.
நான் இதற்கு முடிவு கட்ட‌ என் வீட்டில் சொன்னேன்,அவர்கள் கூப்பிட்டு கண்டித்தனர்... சில‌ மாதம் பேசாமல் இருந்தார், ஆனால் மறக்க‌ வில்லை..

நான் அவருடன் பழகவோ, தனியாய் பேசினதோ கூட‌ இல்லை இது வ‌ரை.

மறுபடியுமொரு நாள் என்னிடம் நீ இல்லாத‌ வாழ்க்கையை என்னால் நினைத்துக்கூட‌ பார்க்க‌ முடியாது , நீ இல்லையேன்றால் இறந்துவிடுவேன் என்றார்,

நான் அதை பெரிதாக‌ எடுத்துக்கொள்ளவில்லை, ஆனால் அவர் ஒரு நாள் விசம் சாப்பிட்டு விட்டார், ஆனால் கடவுள் புண்ணியத்தால் எதுவுமாகவில்லை,

அதற்கு பிறகு எனக்கு அவர் மேல் ரொம்ப‌ பிரியம் வந்துவிட்டது,எங்கள் வீட்டில் உள்ளவர்கள் மனதையும் அது பாதித்தது, நான் என் வீட்டில் எனக்காக‌ உயிரை விடும் அளவுக்கு நேசிப்பவரை என்னால் விட‌ முடியாது எனக்கூறினேன்,

அவர்களும் எங்கள் கல்யாணத்திற்கு சம்மதித்து விட்டார்கள்,இப்பொழுது என்ன‌ பிரச்சனை என்றால் இரு வீட்டிலும் ஜாதகம் பார்த்தார்கள் அதில் பொருத்தம் இல்லையாம், அதனால் 2வீட்டு பெரியவர்களும் மனக்குழப்பத்திலிருக்கிறார்கள்,

எங்கள் இருவருக்கும் ஜாதகத்தில் நம்பிக்கை இல்லை<ஆனால் கடவுள் மீது முழுமையான‌ நம்பிக்கை இருக்கிறது கடவுள் எங்களை நல்லபடியாக‌ வைப்பார் என்று.......

இப்பொழுது சொல்லுங்கள் தோழிகளே,

எங்க‌ வீட்டு பெரியவர்களை எப்படி சமாளிப்பது,
சாதி , காசு, குடும்பம் பிரச்சனை எல்லாம் ஒரு வழியாக‌ சரியாகி, இப்பொழுது ஜாதகம் பிரச்சனை

ஜாதகம் எல்லாம் உண்மையா தோழிகளே, ஜாதகம் பார்த்து திருமணம் செய்த‌ பலர் கஸ்டபடுவதை நானே பார்த்திருக்கேன்...........

அப்பா என்ன‌ மன நிலைமல‌ இருக்கேன் உங்களுக்கு புரியும், தயவு செய்து எனக்கு ஆலோசனை கூறுங்கள்............எனக்கு ஆறுதல் சொல்லவோ, என்னை திடபடுத்தவோ தோழிகள் யாரும் இல்லை அதான் உங்களிடம் கேட்கிறேன்.......

HI thendral12 kadavul ellai ena kuriya periyar 90+ years erunthar kadavul undu ena kuriya rajaji also same like so nambikai enbathu avar avar manathai poruthathu antha boy nallavan unnai vaithu nalla padiya erupar endru ne nambinal then u have do decided.jadhgam enbathu ellam oru oruvar parvaiyulam differ.

Ungaludaya parvaiyil jadhagam eppadi endru enaku theriyavillai but enaku athil antha alavuku nambigai ellai its my point of view thats all

தாங்ஸ் ப்ரெதர்,
அவரும் இதையே தான் அடிக்கடி சொல்வார், எனக்கு எதுவும் ஆவது என்றால் நான் விசம் சாப்பிட்டவே போயிருப்பேன்,நம்ம‌ பாசம் உண்மையா இருந்தா போதும் எல்லாத்தையும் வெல்லல்லாமுனு சொல்வார்......

தோழி ஜாதகம் உண்மையா , பொய்யா என‌ எனக்கு தெரியாது.மன‌ பொருத்தம் இருந்தால் போதும் என்பது என் கருத்து.பொருத்தம் சரி இல்லை என‌ திருமணத்திற்கு பிறகு தெரிந்து இருந்தால் என்ன‌ செய்வீர்கள் ? நடப்பது நடக்கட்டும் என வாழ தானே செய்வீர்கள்.
என் வாழ்விலும், என் திருமணத்திற்கு பின் பல‌ பிரச்சினைகள் எனவே என் வீட்டில் இருந்த்தேன்.குழப்பத்தில் ஜாதகம் பார்த்தார்கள் கணவன் மனைவி இருவரும் இந்த‌ வருடம் வரை சந்தோஷமாக‌ வாழ்ந்தால் கணவன் உயிருக்கு ஆபத்து 1 வருடம் தனியாக‌ பிரிந்து வாழ வேண்டும் என கூறினார்கள்.என் கணவர் நடப்பது நடக்கட்டும் எனக் கூறி என்னை எங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றார்.வருடங்கள் 2 கழிந்து விட்டது. நான் இப்போது 5 மாத‌ குழந்தைக்கு தாய். என் கணவர், குழந்தையுடன் சந்தோஷமாக‌ வாழ்ந்து வருகிறேன்.
இருவரும் பிரிந்து வாழ்ந்தால் மட்டும் இருவரும் சந்தோசமாக‌ வாழ்ந்து விடுவீர்கள் எனில் வாழுங்கள்.இல்லையெனில் சந்தோஷம் இல்லாமல் இன்னொருவடன் நெடுநாள் வாழ்ந்து என்ன‌ பயன்?. நீங்கள் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளுங்கள்.நடப்பது நடக்கட்டும். 2ம் உங்கள் விருப்பம்.

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

Thanks for accepting my cmd then u and ur lover ll decide and choose urs life and live with happy god bless u all the best tc..

டெல்சி தோழி,
மிக‌ மிக நன்றி உங்க‌ பதிலுக்கு, நான் இப்பொழுது கொஞ்சம் தெளிவாக‌ உள்ளேன்.....

ம்ம் ஆமாம் நானும் அதே தான் கேட்டேன் , மேரேஜ்க்கு அப்புறம் ஜாதகத்தில் ப்ராப்ள்ம் என்றால் என்ன‌ செய்வது என்று, பெரியவர்கள் தான் மனசு இறங்க‌ மாட்டேங்குறாங்க‌......

அவர் நாமே வா இப்பவே மேரேஜ் பண்ணலாம், அப்புறம் வீட்ல‌ சம்மதம் வாங்கலாம் என்கிறார், எனக்கு 2 பெற்றோர் மனதையும் கஸ்டபடுத்த விருப்பம் இல்லை. கூடாது என்கிறேன்.

வாழ்த்துக்கள் தோழி,
//எனக்கு 2 பெற்றோர் மனதையும் கஸ்டபடுத்த விருப்பம் இல்லை//மிக‌ சரி. நமக்காக வாழ்ந்தவர்கள்.அவர்கள் மன‌ கஸ்டத்தில் என்றும் உங்கள் வாழ்க்கையை தொடங்க‌ விரும்பாதீர்கள்.எல்லோர் ஆசியுடன் மண வாழ்வை தொடங்குங்கள்.நல்ல‌ மகிழ்ச்சியான‌ வாழ்க்கை வாழ அவர்கள் ஆசி என்றும் தேவை.இன்னும் 2 அல்லது 3 சோசியர்களிடம் மீண்டும் ஆலோசனை பெறலாம்.ஏதெனும் பரிகாரம் உண்டா ? என‌ கேளுங்கள்.உண்மையான‌ காதல் என்றும் காத்திருக்கும்.நீங்கள் தலை குனியாமல் உங்கள் கழுத்தில் தாலி ஏற முடியாது.அவர் விரும்பாமல் யாருக்கும் தாலி கட்ட‌ முடியாது.ஆதலால் காத்திருக்கலாம் என்பது என் கருத்து.முடிவு உங்களது.

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

ஹாய்,

சோசியர் பொருத்தம் இல்லை நு சொல்லும் போதே நீங்கள் அதற்கு பரிகாரம் உண்டா என்று கேட்டு அதிக‌ செலவானாலும் செய்து விடுங்கள்.அது எல்லோருக்கும் ஒரு மன‌ நிறைவு தரும்.எல்லாம் நன்மைக்கேனு திருப்தியா முடிவெடுங்க‌.ஓ.கேவா.

ரஜினிபாய்

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

பதில் அளித்த‌ எல்லா தோழிகளுக்கும் நன்றி,

நான் எல்லாம் வகையிலும் முயற்சி செய்துவிட்டேன், கயிறு பொருத்தம் அதாவது ரஜ்ஜு பொருத்தம் காலில் உள்ளதாம், வேண்டாம் அவ்ளோதான் அப்படினு சொல்றாங்களாம், ஆனா 2 பேர் உயிருக்கும் ஆபத்து இல்லையாம், கொஞ்சம் கஸ்டம் வரும் என்று சொன்னார்கள்...... என்னவோ பயம் காட்றாங்க‌..

அதற்கு நான் இப்படி கேட்க‌ சொன்னேன், இருவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது இப்போ என்ன‌ பரிகாரம் செய்யலாம் என்று கேட்க‌ சொன்னேன், அதற்கு எவரிடமும் பதில் இல்லை.

அவரை நீங்க‌ போய் பாருங்கஎன்றால் எனக்கு இதெல்லாம் நம்பிக்கை இல்லை என்று என்னை திட்றார்,

இன்னும் ஒரு சிலரிடம் விசாரித்தற்கு 30 வயதுக்கு பிறகு திருமணம் செய்தால் எதுவும் பார்க்கத் தேவையில்லை என்கிறார்கள், அப்படி ஒண்னு இருக்கானு தெரில‌ ,

எனக்கு பைத்தியமே பிடிச்சிரும் போல‌, நான் என்ன‌ பண்ண‌ ........

மேலும் சில பதிவுகள்