வெட்டவெளி பொட்டலிலே-2

உலகத்தின் மற்றுமொருநாள் தொடங்க ஆரம்பித்தது. இன்றைய கணக்கு பரீட்சைக்காக படித்துக் கொண்டிருந்தாள் இந்திராணி. இந்திராணி எழும் முன்பே இந்திராணியின் அம்மா எழுந்து தொழுவத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள். நேற்று மாலை வந்து கயிற்று கட்டிலில் விழுந்த அப்பன் இன்னும் எழுந்திருக்கவே இல்லை. தெளிவான வானத்தை மேகம் மறைப்பது போல் பேனா இல்லாமல் எப்படி பரிட்சை எழுதுவது என்ற கவலையில் கண்களின் நீர் வந்து புத்தகத்தை மறைத்தது. துடைத்து கொண்டே படித்து கொண்டிருந்தாள்.
பள்ளிகூடம் நெருங்கி கொண்டிருந்தது கால்கள் பள்ளிக்கு செல்ல மறுத்து அடம் பிடித்து வேகம் குறைந்தது. ”இந்திராணி... இங்கே வா” கணக்கு ஆசிரியை அழைத்தார்கள். ”இந்தா புது பேனா, நல்லா எழுதணும் என்ன” ஆசிரியையின் வார்த்தைகளை கேட்டதும் கண்களில் கண்ணீர் நிறைந்தது. ”நன்றி டீச்சர்” குரல் கம்மியது இந்திராணிக்கு. பரிட்சைக்கு போ ஆல்த பெஸ்ட் என சொல்லி தோளை தட்டி கொடுத்து அனுப்பினார் ஆசிரியை.
பரிட்சைகள் முடிந்தன. கோடை விடுமுறை ஆரம்பமானது. சோறாக்குவது, குட்டியானை பார்த்துக் கொள்வது. அம்மா வேலை விட்டு வந்ததும் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு போவது என்று வேலைகள் தொடர்ந்தன... ஆடுகளை மேய்ச்சலில் விட்டு மற்ற தோழிகளுடன் விளையாடும் அந்த கொஞ்ச நேரம் ஆறுதலாக இருக்கும்.
கோடை விடுமுறை முடிந்து ஆறாம் வகுப்பு செல்ல அப்பனிடம் கேட்ட பொழுது ”படிச்சது போதும் இனிமே வூட்ல வேலையை பாரு” என்று பதில் வந்தது...
-தொடரும்

Average: 5 (4 votes)

Comments

அசத்தல்... மேலும் தொடருங்கள்

நட்புடன்
குணா

அருமை மேலும் தொடருங்கள்.

தொடருங்க. நல்லா இருக்கு கதை. ஆனா... ஆமை வேகத்துல ஊருது. எனக்கு பொறுமை பத்தல. ;))

‍- இமா க்றிஸ்

தவமணி அண்ணா உங்கள் எழுத்துநடை கிராமங்களீல் நடப்பதை அப்படியே பிரதிபலிக்கின்ரன.

கதை நல்லா போகுது.. ஆனா இன்னும் கொஞ்சம் கூட் எழுதலாமே ஒவ்வொரு பகுதியும். :) சீக்கிரம் படிக்கும் ஆவல் தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்பல்லாம் 10th, 12th ரிசல்ட் வரும்போது பார்த்தீங்கன்னா, இந்த மாதிரி கஷ்டத்தில் படிக்கும் பிள்ளைகள்தான் கலக்குறாங்க....

நானும் வனியை வழி மொழிகிறேன். இன்னும் சீக்கிரமே குடுக்கணும் ..நல்லா போகுது கதை

Be simple be sample