தேதி: June 25, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
போஹா (அவல்) - 2 கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
எலுமிச்சை பழம் - ஒரு மூடி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
அவலில் தண்ணீர் ஊற்றி இரண்டு முறை அலசிவிட்டு, பிறகு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊற வைத்து தண்ணீரை சுத்தமாக வடித்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டுக் கிளறவும்.

பிறகு ஊற வைத்த அவலைச் சேர்த்து நன்கு கிளறிவிட்டு, சிறிது நேரம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான லெமன் போஹா தயார். விரைவில் செய்யக்கூடிய காலை உணவு இது.

Comments
நித்யா
இது இந்த ஊர் ஸ்பெஷல் ;) சூப்பரா செய்திருக்கீங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நித்யா
லெமன் போஹா சூப்பர், காலை உணவாக குழந்தைக்கு கொடுத்துவிட எளிதாக இருக்கும், செய்முறையும் எளிமையாக படங்களும் தெளிவாக உள்ளது.
லெமன் போஹா
இதுவும் கர்நாடகா ஸ்பெசலா சூப்பர்.
நித்யா
ரொம்ப ஈசியா இருக்கு நித்யா. சூப்பர்.;-)
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
நித்யா
ஈஸி டிபன்.. சூப்பர்
நித்யா
சுவையாகவும்,உடனே செய்யக்கூடியதாகவும் இருக்கும், நான் அடிக்கடி செய்யறதுண்டு....சத்தானதும்கூட
sixmonth baby food
en baby ku sixmonth start akuthu nan ena food kodukanum solluga madam.
நித்யாஅக்கா,ஈஸி அன்ட்
நித்யாஅக்கா,
ஈஸி அன்ட் ஹெல்த்தி டிப்ஸ் சூப்பர் அக்கா.
இது எங்க வீட்ல அவல் உப்புமானு சொல்வோம்.....
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
நித்யா,
இதை அடிக்கடி செய்து சாப்பிடுவேன்பா.ரொம்ப பிடிக்கும் எனக்கு.:)நன்றாக செய்திருக்கீங்க:)
நன்றி
குறிப்பு வெளியிட்ட அட்மினுக்கு நன்றி.
கருத்து தெரிவித்த தோழிகள் அனைவருக்கும் எனது நன்றி..