ennaku age 24 . ennaku 1 1/2 vayasula oru paiyan erukkan.ennaku normal delivery tha. en vairu.. perusa erukku. athu verum air(kathu0 than solluranga. na kudallam erukka matten. en vairu mattum konjam perusa erukku. en vairulla ulla kathu ponunna enna pannanum plz sollunga ennakeu tummy romba asinga erukku. yepothu pregnant ah erukurathu pola.
சித்திரைசெல்வி
தினமும் ஒரு அவித்த முட்டை சாப்பிடுங்க சீக்கிரமே சரி ஆகிடும்.முடிந்தால் தினமும் யோகாசனமும் பண்ணுங்க சரி ஆகிடும்.
உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி
appadiya? thank you. na
appadiya? thank you. na treatment yellam poren.
சித்திரைசெல்வி
இதற்கு ட்ரீட்மென்ட் எல்லாம் தேவையில்லை பா.
உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி
சித்திரைச்செல்வி & ஹாசனி
//athu verum air(kathu0 than solluranga.// யார் சொன்னாங்க? புதுசா கேள்விப்படுறேன். அதுதான் தெரிந்துகொள்ளலாம் என்று கேட்கிறேன். சொல்லுங்க.
//ennakeu tummy romba asinga erukku.// எக்சர்சைஸ் / யோகாசனம் நல்லது என்று தோன்றுகிறது. உங்கள் வயதிற்கு நிச்சயம் முறையாகத் தொடர்ந்து செய்து வர மாற்றம் தெரியும்.
ஹாசனி... முட்டை கூட சிலருக்கு வாயுப் பிரச்சினையை உண்டுபண்ணுமே! நீங்கள் தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் வயிறு குறையும் என்கிறீர்கள். இதுவும் எனக்குப் புதிதாகத்தான் இருக்கிறது. இதுவரை கேள்விப்பட்டதில்லை.
நான் சித்திரைச்செல்வியின் இடத்தில் இருந்தால் எக்சர்சைஸ் மட்டும்தான் செய்வேன். மாசம் 30 முட்டை!! நினைக்கவே பயமாக இருக்கிறது.
- இமா க்றிஸ்
ஹாசினி
ஹசினி சொன்னது போல தினமும் ஒரு அவித்த முட்டை சாப்பிடுங்க......தொப்பை குறைய அருகம்புல் ஜூஸ் குடிங்க......
Anbudan,
Viji
இமாம்மா
என் அக்காவுக்கு குழந்தை பிறந்தப்ப வயிறு பெரிதாக தான் இருந்தது,அப்ப டாக்டர் தினமும் அவித்த முட்டை சாப்பிட சொல்லிருந்தாங்க அக்காவும் ட்ரை பண்ணாங்க சரியாகிவிட்டது இமாம்மா.தெரிந்ததனால்தான் இவங்களுக்கும் சொன்னேன்.
உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி
ஹாசினி
:-) தப்பாக எடுத்துக் கொள்ளாமல் பதில் சொன்னதற்கு மிக்க நன்றி ஹாசினி. இப்படித் தெளிவாகப் போட்டால் எனக்கும் கேள்வி கேட்கத் தோன்றியிராது. அக்கா கூடவே எக்சர்சைஸும் பண்ணாங்களா? இல்லை தனியே முட்டை சாப்பிட்டது மட்டும்தானா? எனக்கு இவை எல்லாம் புதிது. என் அறிவை வளர்த்துக் கொள்வதற்காகக் கேட்கிறேன். அக்கா தொடர்ந்து எவ்வளவு காலம் அப்படி சாப்பிடவேண்டியிருந்தது? பிரச்சினை சரியான போது குழந்தைக்கு எத்தனை வயது ஆகி இருந்தது? சொல்லுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.
- இமா க்றிஸ்
எனக்கு சிசேரியன் நானும் இதை
எனக்கு சிசேரியன் நானும் இதை ட்ரை பன்னலமா
இமாம்மா,சித்திரைசெல்வி
டாக்டர் என் அக்காவிடம்ுழந்தை பிறந்ததிலிருந்து தினமும் சாப்பிடுங்க கொஞ்ச நாள்ல சரியாகிடும்னுதான் சொல்லிருந்தாராம் அக்காவும் திரும்ப எவ்ளோ நாள்னு கேட்கலையாம்,ஆனா அக்கா 1 1/2 மாதம் சாப்பிட்டாங்க சரியாகிடுச்சி. அக்கா யோகாசனம்,எக்சர்சைs எதுவும் பண்ணல வீட்டு வேலையே சரியா இருக்கும் இமாம்மா.
உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி
mohammed samad
ட்ரை பண்ணலாமே ஒன்னும் பிரச்சினை இல்லை தோழி.
உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி