தோழிகளே,
மீன் சாப்பிட்டால் கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு மூளை வளர்ச்சி அதிகரிக்குமா?
கர்ப்ப காலத்தில் எப்போது இருந்து மீன் சாப்பிடலாம். எப்படி சாப்பிட வேண்டும். பொறித்து சாப்பிட கூடாதா? தெரிந்தவர்கள் உதவவும்.
தோழிகளே,
மீன் சாப்பிட்டால் கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு மூளை வளர்ச்சி அதிகரிக்குமா?
கர்ப்ப காலத்தில் எப்போது இருந்து மீன் சாப்பிடலாம். எப்படி சாப்பிட வேண்டும். பொறித்து சாப்பிட கூடாதா? தெரிந்தவர்கள் உதவவும்.
மீன்
//மீன் சாப்பிட்டால் கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு மூளை வளர்ச்சி அதிகரிக்குமா?// இப்படி யாராவது சொன்னார்கள் என்பதற்காக அளவுக்கதிகமாகச் சாப்பிட வேண்டாம். எல்லாமே அளவோடுதான் இருக்க வேண்டும்.
//கர்ப்ப காலத்தில் எப்போது இருந்து மீன் சாப்பிடலாம்.// எப்போதும்.
//எப்படி சாப்பிட வேண்டும்.// முன்பு மீன் சாப்பிடுவீர்கள்தானே? அதே போல சமைத்துச் சாப்பிடுங்கள். //பொறித்து சாப்பிட கூடாதா?// அது தேவயற்ற கொழுப்பை உடலில் சேர்ப்பதற்கு வழி. வேண்டாம்.
- இமா க்றிஸ்
நன்றி மேடம்
கருத்துகளுக்கு நன்றி. நான் ஏன் இதை கேட்டேன் என்றால் சில வெப்சைட் களில் மூளை வளர்ச்சி அதிகரிக்கும் என்று உள்ளது. சில வெப்சைட் களில் மீன் சாப்பிடுவதால் மெர்குரி உடலில் சேர வாய்ப்பு அதிகம் உள்ளது. அது குழந்தை வளர்ச்சிக்கு நல்லதல்ல என்றும் உள்ளது. அதனால் தான் கருத்து கேட்டு இருந்தேன். நன்றி மேடம்
--
கவிஸ்ரீ
//மீன் சாப்பிடுவதால் மெர்குரி உடலில் சேர வாய்ப்பு அதிகம்// இதுபற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு காலகட்டத்தில் ஆழ்கடல் மீன்கள் வாரம் மூன்று தடவைக்கு மேல் சாப்பிட வேண்டாம் என்றார்கள். எங்களிடம்தான் நிறைய நல்ல உணவு வகைகள் இருக்கிறதே. மாற்றி மாற்றி தினம் ஒரு புரதம் சாப்பிடலாம். எப்போதாவது மட்டும் சாப்பிடும்போது தேவையற்றவை சேமிக்கப்படும் சாத்தியம் குறைவு இல்லையா!
- இமா க்றிஸ்