கோழி ரசம்

தேதி: July 2, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (4 votes)

 

எலும்புடன் சேர்ந்த கோழி இறைச்சி - 350 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வதக்கி அரைக்க:
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - ஒன்றரை கைப்பிடி அளவு
தக்காளி - ஒன்று
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
வரமிளகாய் - 3
மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி
இடிக்க:
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5
பூண்டு - 4 பல்
தாளிக்க:
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
சீரகம், சோம்பு - தலா அரை தேக்கரண்டி


 

கோழியைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வதக்கி அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களில் உள்ள வரமிளகாயைப் போட்டு வறுக்கவும். மிளகாய் வறுபட்டதும் சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கி எடுத்து ஆறவிடவும். நன்கு ஆறியதும் அதனுடன் மல்லித் தூள் மற்றும் ரசப்பொடி சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வெறும் கடாயில் இடிக்கக் கொடுத்துள்ள மிளகு மற்றும் சீரகத்தை வறுத்து, ஆறவிட்டு பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து இடித்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம் தாளித்து, நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதனுடன் கோழி, நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
வதக்கியவற்றை ப்ரஷர் குக்கருக்கு மாற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து, நான்கு கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை வேகவிடவும்.
ப்ரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து ரசத்தை கொதிக்கவிடவும். கொதித்ததும் இடித்து வைத்துள்ள மிளகு, சீரகக் கலவையைத் தூவி இறக்கவும்.
சுவையான கோழி ரசம் தயார். சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும், சூப் போல பருகவும் அருமையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கோழி ரசம் சூப்பர், இந்த ரசத்தை சளி உள்ளவர்கள் சாப்பிட்டால் உடனே சரியாகிவிடும், அல்லவா அக்கா, வித்தியாசமான குறிப்பு.

குறிப்பை வெளியிட்ட டீமுக்கு நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

முதல் பதிவிற்கு நன்றி பாரதி. சளி, காய்ச்சல் நேரத்தில் சாப்பிட நன்றாக இருக்கும்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சூப்பர் குறிப்பு... இங்க குளிர் துவங்குது, செய்ய சரியான குறிப்பு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உமா குறிப்பு அருமையா இருக்கு.

வருகைக்கும் பதிவுக்கும் நன்றி. செய்துட்டு சொல்லுங்க வனி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

arumai

Mrs.Anantharaman

arumai

Mrs.Anantharaman

பதிவுக்கு நன்றி தோழி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

இன்னைக்கு இந்த ரசம் செய்தேன்.. சமைச்சு முடிச்சதும், நானே பாதிய காலி பண்ணிட்டேன்.. சூப்பர் டேஸ்ட்..

கலை

செய்து பார்த்து பதிவிட்டதுக்கு நன்றி கலை.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

KOLZHI RASAM ARUMAI.......

பெறுவது தெய்வத்தால் இழப்பது கர்வத்தால்......