குட்டிக் குட்டி கோலங்கள்

நேர்ப்புள்ளி, 3 புள்ளி - 3 வரிசையிலான குட்டிக் கோலங்கள். சிக்குக் கோலங்கள், பார்டர் கோலங்கள் வரைவதற்கு இது அடிப்படையாக இருப்பதால், இது போன்ற சிறிய வகைக் கோலங்களை முதலில் முயற்சித்தால், பெரிய சிக்குக் கோலங்கள் போடுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

Comments

சூப்பர். இது தான் நம்ம சாய்ஸ் ;) சின்ன சின்ன கோலம். நான் பொதுவா கோலம் போடுவதில்லை, வேலை ஆள் தான் போடுவாங்க. கேட் உள்ள இருக்க தரை போட வசதிபடுறதில்லை, ஓடு போல பதித்திருக்காங்க. வெளி வாசல் போய் போட சங்கடம். கூடவே போடவும் கைகள் தோதுபடுவதில்லை. பேனா கொடுத்தா வரைவேன். அழகா இருக்கு, அம்மாக்கு காட்டனும் உங்க எல்லா கோலமும். அம்மா பெரிய நோட் வெச்சுருக்காங்க பைண்ட் பண்ணி கோலத்துக்குன்னு. ப்ரிண்ட் பண்ண புக் போல இருக்கும் அவங்க போட்டு வைப்பது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இதுக்கு சிக்கு கோலம் என்றா சொல்லுவீங்க! அப்ப புள்ளிக் கோலம் எது!
பேர் தெரியாமலே இந்த ஸ்டைல் கோலம்தான் போட்டுட்டு இருக்கேன் எப்பவும். என் ஃபேவரிட் பார்டர் கோலம் &... ;) ச்சக்கப்ளாஸ் கோலம். இது என்னவா இருக்கும்! முடிஞ்சா கண்டுபிடிங்க சுபத்ரா. ;D

‍- இமா க்றிஸ்

சிக்கு கோலம் சூப்பர், ரொம்ப எளிமையாக போடும் விதமாக உள்ளது. மாலை நேரத்தில் எங்க வீட்டில் அதிகமாக இந்த கோலம் தான் போடுவோம்.