ஸ்வீட் கார்ன் பாஸ்தா

தேதி: July 4, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (2 votes)

 

பாஸ்தா - ஒரு பாக்கெட்
ஸ்வீட் கார்ன் - ஒரு கப்
குடைமிளகாய் - அரை கப்
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
டொமேட்டோ சாஸ் - கால் கப்
சில்லி சாஸ் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

பாஸ்தாவை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும். குடைமிளகாயைப் பொடியாகவோ அல்லது நீளமாகவோ நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் கார்ன், குடைமிளகாய், கரம் மசாலா மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும்.
பிறகு டொமேட்டோ சாஸ் மற்றும் சில்லி சாஸ் சேர்த்து பிரட்டவும்.
அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி சிறிது நேரம் பிரட்டவும்.
பிறகு வேக வைத்துள்ள பாஸ்தாவைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். சுவையான கார்ன் பாஸ்தா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் பாஸ்தா நித்யா. படங்கள் கலர்ஃபுல்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ஸ்வீட் கார்ன் பாஸ்தா சூப்பர், செய்முறை மிகவும் எளிமையாக உள்ளது.

நல்லா இருக்கு. easya செய்து இருக்கீங்க‌. வாய்ல‌ எச்சில் ஊருது. செய்து பார்க்கறேன்.

எல்லாம் சில‌ காலம்.....