கோழிக் குழம்பு

தேதி: July 5, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (5 votes)

 

கோழி - முக்கால் கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய் தூள் - 2 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
வறுத்துப் பொடிக்க:
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - முக்கால் தேக்கரண்டி
ஏலக்காய் - 3
கிராம்பு - 4
பட்டை - ஒரு அங்குலத் துண்டு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
சோம்பு, சீரகம் - தலா அரை தேக்கரண்டி
எண்ணெய்


 

கோழியைச் சுத்தம் செய்து மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி வைக்கவும். வறுக்க வேண்டியவற்றை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
சிறு தீயில் மிளகாய் தூளை வாசம் வரும் வரை வறுக்கவும். (மிளகாய் தூள் கருகிவிடாமல் பார்த்துக் கொள்ளவும். கருகினால் குழம்பு கசந்துவிடும். தூளை வறுத்து சேர்ப்பதால் குழம்பு நல்ல நிறமாகவும், மணமாகவும் இருக்கும்).
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்,
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கி, கோழி மற்றும் உப்பு சேர்த்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் வதங்கவிடவும்.
கோழி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள் சேர்த்து வேகவிடவும். தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்க்கவும். (நான் தண்ணீர் சேர்க்கவில்லை).
குழம்பு வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும், பொடித்த பொடியைத் தூவி இறக்கிவிடவும்.
சுவையான கோழிக் குழம்பு தயார். சாதம், இட்லி, தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குழம்பு சூப்பர் வித்யாசமான செய்முறை.... செய்து பார்க்கணும்

Parkave super a eruku.try panni parkuren.eppave sapdanum pola eruku.

ரம்யா ஜெயராமன்

கோழிக்குழம்பு சூப்பர்.

உமா கோழி குழம்பு பார்க்கவே நாவூறுது சூப்பர் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

குறிப்பை வெளியிட்ட டீமுக்கு நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

தோழிகளின் வருகைக்கும் அன்பான பதிவிற்கும் நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

hai sisters, i am a fan and one of the member of arusuvai. arusuvai is motivated me to cook, before going to kitchen i check arusuvai for any new dishes, please add me in your friends group..

அடுத்த சூப்பர் குறிப்பு... கலக்கறீங்க உமா நிஜமாவே. ட்ரை பண்ணிடுறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அறுசுவைல இருக்கவங்க எல்லோருமே ஃப்ரெண்ட்ஸ்தான். அப்ப கண்டிப்பா நீங்களும் எல்லோருக்கும் தோழிதான். :)

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி வனி. செய்துட்டு சொல்லுங்க.:)

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா