ஜாக்கெட் , புடவையில் தைக்க படும் patch வொர்க் என்கிற motif மற்றும் புடவை border lace எப்படி செய்ய வேண்டும் ?

எனக்கு கைவினை செய்வதில் ரொம்ப ஆர்வம் . ஜாக்கெட் , புடவையில் தைக்க படும் patch வொர்க் என்கிற motif மற்றும் புடவை border lace எப்படி செய்ய வேண்டும் ? எப்படி தைக்குறதுனு கேட்கல , எப்படி நாமலே உருவாக்குறது ? கிளாஸ் போயி கத்துக்க முடியாது . என் பொண்ணுக்கு இப்ப தான் ஒன்ற வயசு . விட்டுட்டு போக முடியாது . செய்ய தெரிஞ்ச யாரவது எனக்கு சொல்லித்தாங்களேன் விளக்கமா . அதுக்கு என்னன்னா பொருள் எங்க வாங்கணும் , எங்க சென்னைல கம்மி விலைல விக்கும்னு சொல்லுங்க pls .

//எப்படி நாமலே உருவாக்குறது ?// நிறைய நேரம் எடுக்கும் வேலை என்று தெரியும். //கிளாஸ் போயி கத்துக்க முடியாது .// க்ளாஸ் போறதுதான் பெஸ்ட். என்னென்ன பயன்படுத்துகிறார்கள், எப்படி என்பதெல்லாம் செயல்முறை விளக்கம்... அப்போதான் முழுமையாகக் கிடைக்கும். முடிந்தால் ஒரே ஒரு நாள் ஆவது எப்படிச் செய்கிறார்கள் என்பதை நேரில் போய்ப் பாருங்கள். நெட்டில் சர்ச் செய்தால் சில வீடியோக்கள் கிடைக்கும். ஆனால் எதுவும் அதைப் பார்த்து நாம் வேலையை ஆரம்பிக்கும் அளவுக்குத் தெளிவாக இல்லை.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்