கோதுமை இடியாப்பம்

தேதி: July 9, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

கோதுமை மாவு - 2 கப்
அரிசி மாவு - 2 கைப்பிடி அளவு (கொழுக்கட்டை மாவு)
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

வெறும் வாணலியில் கோதுமை மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த மாவை சுத்தமான துணியில் மூட்டையாகக் கட்டி இட்லி பானையில் வைத்து 5 நிமிடங்கள் வேக வைத்தெடுத்து கட்டிகளின்றி சலித்து ஆற வைக்கவும். (ஆறிய பிறகு டப்பாவில் கொட்டி வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்).
கோதுமை மாவுடன் அரிசி மாவு, உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கலந்து கொதி நீரை விட்டு இடியாப்ப மாவு பதத்திற்கு பிசையவும்.
பிசைந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டு இடியாப்ப தட்டிலோ அல்லது இட்லி தட்டிலோ பிழியவும்.
பிழிந்த இடியாப்பத்தை இட்லி பானையில் வைத்து 5 - 8 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
மென்மையான, சுவையான கோதுமை இடியாப்பம் தயார். தேங்காய்ப் பால் அல்லது குருமாவுடன் சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கோதுமை மாவில் இடியாப்பம் ஆரோக்கியமான குறிப்பு. சூப்பர்

சத்தான குறிப்பு அக்கா. நான் பல தடவை கோதுமை இடியாப்பம் செய்ய ட்ரை பண்ணி எனக்கு சரியா வரல. என்ன தப்புன்னு தெரியல. ;-)

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

கோதுமை இடியாப்பம் சூப்பர் ஐடியா. எங்க‌ வீட்ல‌ பெரியவங்களுக்கு செஞ்சி குடுக்க‌ அருமையான டிஷ் இது. தேங்ஸ் அக்கா. செய்து பார்த்துட்டு சொல்றேன்

எல்லாம் சில‌ காலம்.....