பயன‌ உணவு

என் மகனுக்கு இந்த‌ வாரம் முதல் வருட‌ பிறந்த‌ நாள் வருகிறது.. அதற்காக‌ நாங்கள் காஷ்மீரை தாண்டி இமாலயாவின் ஒரு பகுதியில் இருக்கும் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு போக‌லாம் என்று முடிவு செய்துள்ளோம்.. என் மகனுக்கு என்ன‌ உணவு எடுத்து செல்வது என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை.. நான் பொதுவாக‌ வீட்டில் சத்துமாவு,பருப்பு சாதம்.. காய் சாதம்.இட்லி தோசை தருவேன்..ஆனால் கடையில் வாங்கிதர‌ பயமாக‌ உள்ளது.. என் மகன் ஃபார்முலா மில்க் தான் குடிப்பான் அதனால் சுடுதண்ணீர் வாங்கிகலாம்.. செரலாக் தரலாம்.. வேறு என்ன‌ செய்வது.. என் மகன் கட்டாயமாக‌ மதியம் திட‌ உணவு தான் சாப்பிடுவான் வேறு எது கொடுத்தாலும் மறுப்பான்.. 4 நாட்கள் பயனம் செல்கிறோம்.. இரயில் பயணமும் ஹெலிகாப்டர் பயனம் எந்த‌ மாதிரி உணவு எடுத்து செல்வது என்று சொல்லுங்கள்.////

முக்கிய‌ அறிவிப்பு //வனி அக்காவும் இமா அம்மாவும் தப்பிக்கவே முடியாது எனக்கு பதில் சொல்லியே ஆக‌ வேண்டும்//

சாரி கண்ணா. ரொம்ப லேட்டாச்சு. இனி தட்டினா திட்டு கிடைக்கும்.
வனி ஃப்ரீயானா சொல்லுவாங்க. காலைல வரேன்.

‍- இமா க்றிஸ்

வறுத்த சத்துமாவில் சுடுநீர் தெளித்து லட்டு இல்ல புட்டு செய்து ஒரு வேளை ஊட்டலாம்

அக்கா நான் சத்துமாவை காய்சி தான் கொடுப்பேன் அப்படியே தண்ணீரில் தெளித்து புட்டு போல‌ கொடுத்தால் வயுறு வலிக்காதா?? வேறு எதாவது சொல்லுங்க‌ அக்கா...

நீங்க‌ காலைல‌ வந்து சொல்லுங்க‌ போதும் நான் வெள்ளி கிழமை கிழம்புகிறேன் அதற்கு முன் சொல்லுங்க‌ அம்மா...

மதியம் பார்த்தேன் அழைத்திருந்ததை, ஆனால் வெளியே இருந்தேன், ஆங்கில பதிவு வேண்டாம்னு விட்டுட்டேன். :)

அவங்க சொன்னது போல சத்து மாவு கையில் வெச்சிருக்கலாம். முடிஞ்சா அங்க அங்க தங்குவீங்கன்னா கையில் ஒரு கெட்டில் கொண்டு போங்க. அதுலையே கஞ்சி எல்லாம் காய்ச்ச முடியும். மன்னா என்ற ப்ராண்டில் கிடைக்கும் சத்து மாவு எல்லாம் 3 நிமிஷம் கொதிச்சா போதும். காய்கறி வேக வெச்சு மசிச்சு கொடுக்கலாம்.

அது முடியாது எனும்போது மாவு உருண்டைகள் செய்து கொண்டு போகலாம். சத்து மாவு உருண்டை, கோதுமை உருண்டை, ராகி ஆல்மண்ட் உருண்டை என இது போல நிறைய கைவசம் வெச்சுக்கங்க. முதல் நாளுக்கு மட்டும் என்றால் பாலில் ஒரு ஸ்பூன் தயிர் விட்டு சாதம் குழைய வைத்து கலந்து எடுக்கலாம். தயிராக புளிக்காம பதம்மா இருக்கும்.

ரொட்டி ஆயில் இல்லாம ஃபுல்கா போல போட்டு கொண்டு போகலாம். பால் வாங்கி ஊற்றி ஊட்டலாம். ஜாம் வைத்தும் கொடுக்கலாம். இந்த ஃபுல்கா சரியா போட்டு ஆற வெச்சு ஒவ்வொறு வேளைக்குன்னு தனி தனியா கை படாம் பாக் பண்ணா 3 நாள் கெடாது.

முதல் நாளைக்கு இட்லி கூட கொண்டு போகலாம். பழங்கள் வாங்கி வைங்க. கெடும்னு பயமே இல்லை. நான் அதிகம் இது போல போனா ரொட்டி, ப்ரெட் பன் வகைகள் தான் அதிகம் வெச்சிருப்பேன். நட்ஸ் லட்டு, நட்ஸ் பர்ஃபி போன்றவை கூட வாங்கி வைக்கலாம். வேறு எதுவும் தோன்றினா நிச்சயம் சொல்றேன் அபிராமி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//முடிஞ்சா அங்க அங்க தங்குவீங்கன்னா கையில் ஒரு கெட்டில் கொண்டு போங்க.// எங்கயும் தங்க‌ போரது இல்லை அக்கா..அது தான் இப்போ பிரச்சனை. வெள்ளி மாலை கிழம்பி திங்கள் மாலை தான் வருவோம்.. 2 இரவு இரயிலிலும்.. ஒரு இரவும் மலையிலும் இருப்போம்.. அதற்கு தகுந்தாற்போல‌ சொல்லுங்க‌ அக்கா..
//மன்னா என்ற ப்ராண்டில் கிடைக்கும்// அக்கா சத்துமாவு நான் தயாரிப்பது நான் டெல்லியில் இருப்பதால் இது போன்ற‌ ப்ராண்டு எல்லாம் கிடைக்குமா என்று தெரியவில்லை.. நான் நாளை கிழம்புவதால் இப்போ அழைந்து வாங்க‌ முடியாது அக்கா.. வேறு எதாவது சொல்லுங்க‌ அக்கா...

ABI
KUZHANDAHI AVIL SAPPIDUVAN ENDRAL. AVILIL PAL UTRI KODUKKALAM

think positive

நான் அவில் கொடுத்தது இல்லை பா. இன்று முயற்சி செய்து பார்கிறேன் நன்றி...

Hi abi... neenga poittu vanyhuttu share pannunga. We all so plan to go..

Hi abi vanthuttengala?

மேலும் சில பதிவுகள்