பார்பி டால் டெக்கரேஷன்

தேதி: July 10, 2014

5
Average: 4.9 (8 votes)

 

பார்பி பொம்மை
சார்ட் பேப்பர்
பேப்பர் பவுல்
ஃபெவிக்கால்
டிஷ்யூ பேப்பர் - வெள்ளை மற்றும் டிசைன் டிஷ்யூ
மெல்லிய குச்சிகள் - 2
சாட்டின் ரோஸ்
கத்தரிக்கோல்

 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். சார்ட்டை கோன் போல சுருட்டிக் கொள்ளவும். அதன் அடிபாகத்தைச் சமமாக நறுக்கிவிடவும்.
கோனின் மேல் பகுதியில் பொம்மையை நுழைக்கும் அளவிற்கு நறுக்கி எடுக்கவும்.
பிறகு கோனின் உள்ளே பொம்மையை நுழைக்கவும்.
பேப்பர் பவுலில் ஃபெவிக்கால் தடவி கோனின் அடிப்பகுதியில் வைத்து ஒட்டவும்.
டிஷ்யூ பேப்பரை நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். (நறுக்கிய துண்டுகள் சதுரமாக இருக்க வேண்டும்).
மெல்லிய குச்சிகளில் ஒன்றை எடுத்து, படத்தில் இருப்பது போல் டிஷ்யூ பேப்பரின் ஒரு புறம் வைத்து பேப்பரை சுருட்டவும்.
பாதி அளவிற்கு சுருட்டியதும் அதை அப்படியே நிறுத்திவிட்டு பிடித்துக் கொண்டு, அதன் எதிர் புறம் மற்றொரு குச்சியை வைத்து சுருட்டவும்.
இரண்டு புறமும் சமமாகச் சுருட்டிய பிறகு, மேலிருந்து கீழும், கீழிருந்து மேலுமாக பேப்பரை சுருக்கிவிடவும். பிறகு பேப்பரை இறுக்கமாக பிடித்துக் கொண்டு இரண்டு குச்சிகளையும் அதிலிருந்து எடுத்துவிடவும்.
சுருக்கிய டிஷ்யூ பேப்பரை வளைத்து, ஃபெவிக்கால் வைத்து இரண்டு முனைகளையும் இணைத்து ஒட்டிக் கொள்ளவும்.
ஒட்டிய பிறகு இவ்வாறு இருக்கும். இதே போல் தேவையான எண்ணிக்கையில் வெள்ளை மற்றும் டிசைன் டிஷ்யூ பேப்பரில் தயார் செய்து கொள்ளவும்.
தயார் செய்தவற்றை ஒவ்வொன்றாக எடுத்து, ஒட்டி வைத்துள்ள பேப்பர் பவுலின் மீது ஃபெவிக்கால் தடவி ஒட்டவும். (ஒரு டிசைன் டிஷ்யூ, ஒரு வெள்ளை டிஷ்யூ என மாற்றி மாற்றி ஒட்டவும்).
இதே போல் கோனைச் சுற்றிலும் தொடர்ந்து ஒட்டிக் கொண்டே வரவும்.
பொம்மையின் வயிறு பகுதி வரை ஒட்டிக் கொள்ளவும் (நெருக்கமாக ஒட்ட வேண்டும்).
பொம்மையின் வயிற்றுப் பகுதிக்கு மேல், டிஷ்யூவை விரித்தாற் போல் வைத்து ஒட்டி, அதன் இரண்டு ஓரங்களிலும் வெள்ளை நிற டிஷ்யூவை ஒட்டிவிடவும்.
பிறகு சாட்டின் ரோஸை ஃபெவிக்கால் வைத்து படத்தில் இருப்பது போல் ஒட்டிக் கொள்ளவும்.
டிஷ்யூ பேப்பரைக் கொண்டு அலங்கரித்த பார்பி டால் ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

க்யூட்டா இருக்காங்க பாபி. ம்... நவீனாவுக்கா! டிஷ்யூ வைத்து செய்தது போலவே இல்லை. சூப்பர்.

‍- இமா க்றிஸ்

செம் க்யூட் சூப்பர்.

அழகா இருக்காங்க‌

வார்த்தையே இல்லை... அத்தனை அழகு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகோ அழகு!!!!!!!!!!!!!

இதுவும் கடந்து போகும்.

அசத்திட்டீங்க‌. சூப்பர்.

எல்லாம் சில‌ காலம்.....

பார்பி டால் அழகு

அருமை உங்கள் கைகள் பூந்து விளையாடிவிட்டது. கலக்கிட்டீங்க‌