ஈசி ஸ்க்ராப் புக்

தேதி: July 14, 2014

5
Average: 4.6 (5 votes)

 

மெல்லிய டெக்க்ஷர்ட் A4 அட்டைகள் - 30
கனமான A4 அட்டைகள் - 2 (மீள்சுழற்சி செய்யலாம்)
பொருத்தமான வர்ணத்தில் கிஃப்ட் ராப்
பொருத்தமான வர்ணத்தில் A4 பேப்பர் - 2
A4 பேப்பர் - ஒன்று (பயன்படுத்திய பேப்பராக இருக்கலாம்)
A5 அட்டை - ஒன்று (மீள்சுழற்சி செய்யலாம்)
ஃபாஸ்டர்னர்ஸ் & வாஷர்ஸ் (Fasteners & Washers) - 2 செட்
இரட்டை ஹோல் பஞ்ச் ((Double Hole Punch))
ஸ்கோரர் (Paper Scorer)
மெட்டல் ஸ்கேல்
டபுள் சைடட் டேப்
க்ராஃப்ட் நைஃப்
கத்தரிக்கோல்
பேனா
க்ளூ

 

தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
கனமான அட்டைகள் ஹோல் பஞ்சில் சுலபமாக நுழையக் கூடியனவாக இருப்பது முக்கியம். முதலில் அட்டையின் ஒரு ஓரத்தில் ஸ்கேலை வைத்து, அதன் அகலத்துக்கு க்ராஃப்ட் நைஃபால் மிக மெல்லியதாக ஒரு கோடு வரைந்து கொள்ளவும். திருப்பிப் போட்டு உட்பக்கமும் இதே இடத்தில் அதே போல கோடு வரைந்து கொள்ளவும். அட்டை முழுவதுமாகப் பிரிந்து வந்துவிடக் கூடாது. இது புத்தகத்தைத் திறந்து மூட வசதியாக இருப்பதற்காக மட்டும்தான்.
இந்த அட்டையைவிட சுற்றிலும் இரண்டு சென்டிமீட்டர் பெரியதாக இருக்குமாறு இரண்டு துண்டுகள் கிஃப்ட் ராப்பிலிருந்து வெட்டி எடுக்கவும்.
அட்டையின் ஒரு பக்கம் முழுவதும் க்ளூ தடவி, சுருக்கம் இல்லாமல் கிஃப்ட் ராப்பை ஒட்டவும். மீதியைப் பின்பக்கம் மடித்து ஒட்டவும்.
அட்டைக்கு லைனிங் கொடுப்பதற்காகத் தெரிவு செய்த A4 பேப்பர்களின் நீள அகலம் இரண்டிலுமிருந்து ஒவ்வொரு சென்டிமீட்டர் குறைத்து வெட்டிக் கொள்ளவும்.
இதை அட்டையின் உட்புறம் ஒட்டிவிடவும். இதே போல இரண்டாவது கனமான அட்டையையும் தயார் செய்யவும். முன்பு க்ராஃப்ட் நைஃபால் அழுத்தி விட்ட இடங்களின் மேல் ஸ்கோரர் வைத்து ஒரு முறை அழுத்திவிட்டு அட்டைகளை உலரவிடவும்.
மூன்றாவது பேப்பரை நீளவாட்டுக்கு இரண்டாக மடித்து அடையாளம் செய்து கொள்ளவும்.
மடிப்பில் ஒரு சிறிய V வடிவம் வெட்டிக் கொள்ளவும். இதை அனைத்து அட்டைகளிலும் வைத்துக் குறித்துக் கொள்ளவும்.
ஹோல் பஞ்சின் மத்தியிலுள்ள அடையாளமும் சிவப்பு அட்டையில் குறித்துள்ள இடமும் பொருந்தி வருமாறு வைத்து துளைகள் பஞ்ச் செய்து கொள்ளவும். ஹோல் பஞ்சின் அடி வரை அட்டையைத் தள்ளி வைத்து பஞ்ச் செய்தால் அனைத்து அட்டைகளிலும் துளைகள் ஒரே இடத்தில் வருமாறு செய்வது சுலபம். அட்டைகளின் கனத்தைப் பொறுத்து இரண்டையோ மூன்றையோ சேர்த்துப் பிடித்து பஞ்ச் செய்யலாம். எண்ணிக்கை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளவும். இல்லையெனில் துளை செய்த பிறகு வெளியே இழுக்கும் சமயம் வராமல் மாட்டிக் கொள்ளும்.
சிவப்பு அட்டைகளிலும் ஸ்கேல் & ஸ்கோரர் கொண்டு ஒவ்வொரு கோடு அழுத்தவும். கோடுகள் துளைகள் இருக்கும் பக்கம் வர வேண்டும். அட்டையின் ஒரு பக்கம் மட்டும் அழுத்தினால் போதும்.
தடித்த அட்டைகள் நன்கு காய்ந்த பிறகு அவற்றிலும் துளைகள் போட்டுக் கொள்ளவும். துளைகள் தயார் செய்திருக்கும் மார்ஜினுக்குள் வர வேண்டும்.
A5 அளவிலுள்ள அட்டை, புத்தகத்தின் முதுகுப் பகுதி செய்வதற்காக. அட்டையின் அகலப் பக்கம் காட்டியுள்ள அளவுகளைக் குறித்து வெட்டிக் கொள்ளவும். A - மார்ஜின் (ஸ்கேலில் அகலத்தைவிட 2 மில்லி மீட்டர் குறைவாக இருக்கட்டும்). B - 32 அட்டைகளையும் சேர்த்து அடுக்கி வைத்த உயரம்.
கோடு வரும் இடங்களில் ஸ்கோரரால் அழுத்திவிட்டு மடித்தால் 'ப' வடிவத்திற்கு வரும். பிறகு கிஃப்ட் ராப் கொண்டு முழுவதுமாக மறைத்து ஒட்டிவிடவும். உட்பக்கமும் முழுவதும் மறைய வேண்டும். மீண்டும் 'ப' வடிவத்திற்குக் கொண்டு வந்து உலரவிடவும்.
க்ளூ காய்ந்த பிறகு துளைகள் வர வேண்டிய இடங்களை அடையாளம் செய்து, துளைகள் போடவும்.
மேலும் கீழும் முகப்பு அட்டைகள் வரும் விதமாக அட்டைகளைச் சரியான படி நேராக அடுக்கிக் கொள்ளவும். 'ப' வடிவ அட்டையினுள் இவற்றைச் சொருகி துளைகள் அனைத்தும் சரியாக வருமாறு வைத்துப் பிடிக்கவும். பேப்பர் ஃபாஸ்ட்டனரை புத்தகத்தின் முன் பக்கமிருந்து நுழைக்கவும். தகடுகள் மார்ஜினுக்குச் செங்குத்தாக வர வேண்டும். பின் பக்கம் வாஷரைச் சொருகி தகட்டை வளைத்துவிடவும்.
இவற்றைக் கையாலேயே அழுத்தலாம்.
ஸ்கேலின் அகலத்தில் ஃபாஸ்டர்னர்களை மறைக்கக் கூடிய நீளத்திற்கு ஒரு துண்டு கிஃப்ட் ராப்பை வெட்டி எடுக்கவும்.
அதை டபுள் சைடட் டேப் கொண்டு ஃபாஸ்டர்னர்களின் மேல் அழுத்தி ஒட்டிவிடவும்.
புத்தகத்தைப் பிரித்ததும் முதற் பக்கத்தின் உட்புறத் தோற்றம் இது.
புத்தகம் எதற்காகப் பயன்படப் போகிறதோ அதற்குப் பொருத்தமாக முன் அட்டையை அலங்கரிக்கலாம். இங்கு காட்டியுள்ள அட்டைக்கு பார்டர் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறேன். பொருத்தமான நிறத்தில் திருமண அழைப்பிதழ் ஒன்று கிடைத்தது. அதிலிருந்து சில பகுதிகளை வெட்டி நீக்கிவிட்டுப் பயன்படுத்தியிருக்கிறேன். இந்த ஸ்க்ராப் புக் திருமணம் தொடர்பான நிகழ்வுகளுக்குப் பொருத்தமாக இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஈசி & அழகு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப அழகா இருக்கு...

கலை

:-) ஒரு வேண்டுகோள் - மறக்காம தொடர்ந்து வரும் எல்லா க்ராஃப்ட் குறிப்பும் பார்க்கணும் நீங்க. :-)

‍- இமா க்றிஸ்

ரொம்ப நல்லா௫க்கு

ரம்யா ஜெயராமன்

ஸ்க்ராப் புக் மிகவும் பயனுள்ளது, எங்க சித்தி பையன் தான் ரொம்ப நாள் இந்த புக் வாங்கி தர சொல்லி கேட்டுக்கிட்டு இருந்தான், நான் இந்த ஈசி ஸ்க்ராப் புக் பார்த்து செய்து கொடுக்க போறேன், மிக்க நன்றி.

ரொம்ப அழகா இருக்கு ..வித விதமான ஸ்டிக்கர் ஒட்டி குழந்தைகள் ஒரு வயது வரைக்கும் மற்றும் christening ,பாப்டிசம் ,நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தலாம்

மிக்க நன்றி ஏஞ்சல். எல்லோரும் அங்கயே கமண்ட் போட்டுட்டா என்ன பண்றது என்று பயத்துல அங்க லாக் பண்ணிட்டு வந்து பார்த்தா... ஏஞ்சல் இங்க இருக்கீங்க. :‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍)

//christening ,பாப்டிசம்// ஆமாம். இது பளபள சிவப்பாக இருந்து கூறைப்புடவையை நினைவு படுத்தி... கூடவே அந்த இன்விடேஷன் கையில கிடைக்க இப்படி ஆக்கிட்டேன்.

அதிக மேக்கப் இல்லாம சிம்பிளா எங்க மணவாழ்க்கை தொடர்பான ஒரு ஸ்ராப் புக் பண்ணலாம்னு இப்போ தோணி இருக்கு ஏஞ்சல். சொன்னேன். க்றிஸ் ஸ்லைட்டா ஒரு சிரிப்பு சிரிச்சாங்க. ஐடியா பிடிச்சு இருக்கு என்று தோணுது. :-) ஒரு பாக்ஸ் வைச்சு கைல கிடைக்கிறது எல்லாம் போட்டுட்டு வரேன். கொஞ்சம் நிரம்பியதும் பார்க்கலாம். :‍)

‍- இமா க்றிஸ்

நன்றி வனி & ரம்யா.

//பார்த்து செய்து கொடுக்க போறேன்// சந்தோஷம் பாலபாரதி. முடிஞ்சா எங்கயாச்சும் ஃபோட்டோ ஷேர் பண்ணுங்க.

‍- இமா க்றிஸ்

செய்யுங்க இமா :) விரைவில் பார்க்கணும் இங்கே
முன் அட்டைக்கு சில்க் துணி அல்லது நம்ம ட்ரெடிஷனல் half white கலர் கிராண்டா இருக்கும் :)

// :-) ஒரு வேண்டுகோள் - மறக்காம தொடர்ந்து வரும் எல்லா க்ராஃப்ட் குறிப்பும் பார்க்கணும் நீங்க. :-) // கண்டிப்பா தொடர்ந்து பார்க்கிறேன்.. எதுவும் ஸ்பெஷல் இருக்கா?

கலை

//சில்க் துணி// அது மனசில இருக்கு - ரொம்ப நாள் ஆசை. யாராவது மாட்டணுமே! சும்மா சும்மா செய்து பயனில்லாமல் போகக் கூடாது. சீக்கிரம் சந்தர்ப்பம் அமையும் என்று தோணுது. பார்க்கலாம்.
//விரைவில் பார்க்கணும் இங்கே// அது... தெரியல. சில சமயம் வேலை முடிச்சுட்டு ஃபோட்டோஸ் பார்க்க, நடுவுல கொஞ்சம் ஸ்டெப்பைக் காணோம்னு இருக்கும். ;) தொட்டுக்கொள்ளவில் போடலாம். இல்ல அங்கயாச்சும் வரும் கட்டாயம். ;)

நன்றி ஏஞ்சல்.

‍- இமா க்றிஸ்

//எதுவும் ஸ்பெஷல் இருக்கா?// ;) இருக்கு.
http://www.arusuvai.com/tamil/node/28984

‍- இமா க்றிஸ்