3 இன் 1 - பார்ட்டி கார்லண்ட் - கிட்ஸ் க்ராஃப்ட்

தேதி: July 17, 2014

4
Average: 3.7 (3 votes)

 

வர்ணக் கடதாசிகள்
அட்டைத் துண்டு
வெள்ளைக் கடதாசி
கத்தரிக்கோல்
பேனா
க்ளூ

 

தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
2 செ.மீ சதுரங்கள் வரைந்த ஒரு கடதாசியில் படத்தில் உள்ள வடிவத்தை வரையவும்.
பிறகு அதை அட்டையில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
வர்ணக் கடதாசியை 10 செ.மீ x 4 செ.மீ அளவில் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
அவற்றை நான்காக மடித்து வைக்கவும்.
அனைத்து துண்டுகளிலும் வெட்டி வைத்த அட்டையை வைத்து வரைந்து கொள்ளவும். X அடையாளம் கடதாசியின் மூடிய விதமாக இருக்கும் மூலையுடன் பொருந்துமாறு வைக்கவும்.
வெட்டி எடுத்த பிறகு இவ்வாறு இருக்கும். என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பொறுத்து எத்தனை துண்டுகள் வேண்டுமோ அத்தனை துண்டுகள் வெட்டி எடுக்கவும்.
சுவர் அலங்காரம்: இரண்டு துண்டுகளை விரித்து பச்சை நிறம் வெளியே இருக்குமாறு ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கவும். இரண்டு பக்கமும் ஒவ்வொரு துண்டை இப்படி மாட்டவும்.
இரண்டு பக்கமும் சம எண்ணிகையில் தொடர்ந்து மாட்டி கடைசித் துண்டுகளை மட்டும் சேர்த்து ஒட்டவும். சோடினைக்கான மாலை தயார். இங்கு ஒரு நிறம் மட்டும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. நிறங்களைக் கலந்தும் செய்யலாம்.
இதே போல் ஒரே பக்கமாகக் கோர்த்து தோரணம் போலவும், நிலைமாலை போலவும் பயன்படுத்தலாம். சங்கிலி போல நீளமாகச் செய்து அட்டை ஒன்றில் சுற்றி வைத்துக் கொண்டால் சோடிக்கும் போது தேவையான இடத்தில் ஒற்றைத் துண்டைக் கிழித்து நீக்கிவிட்டு திறந்து இருக்கும் இடத்தை மட்டும் ஒட்டினால் போதும். விழா முடிந்த பிறகு மீண்டும் சுற்றி வைத்து வேறொரு சமயம் பயன்படுத்தலாம்.
பெல்ட் (Belt / Waist Chain) : இதை பிறந்த நாள் விழாக்களில் சிறுவர் கைவேலையாகச் செய்ய வைக்கலாம். துண்டுகளை மட்டும் முன்பே வெட்டி ஒரு பெட்டியில் போட்டு வைக்கவும். அவரவர் விருப்பத்திற்கு நிறங்களை ஒழுங்குபடுத்திக் கோர்க்க வைக்கலாம். கடைசித் துண்டை மட்டும் ஒட்ட வைக்கவும். கூட நிற்கும் பெரியவர்கள் இதற்கு உதவலாம். குழந்தையின் இடுப்பு அளவைவிட ஒரு துண்டு மேலதிகமாகக் கோர்த்து, அதன் ஓரங்களைச் சேர்த்து ஒட்டிவிட்டு கடைசி இரண்டையும் ஒன்றினுள் ஒன்றாக சொருகினால் பிடித்தாற் போல நிற்கும். இறுக்கமாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். கடதாசி கிழிந்துவிடலாம்.
பார்ட்டி க்ரௌன் (Party Crown) : நெற்றிச் சுற்றளவு கிடைத்ததும் திறந்தபடி இருக்கும் நான்கு துண்டுகளையும் சேர்த்து ஒட்டவும். அனைத்து துண்டுகளையும் பிரியாமல் ஒட்டிவிடவும்.
இன்னொரு துண்டை நடுவில் ஒட்டினால் அழகான முடி (Crown) கிடைக்கும். பார்ட்டிக்காகவும் செய்யலாம். வரும் குழந்தைகளையும் செய்ய வைக்கலாம்.
குழந்தைகள் எளிதாகச் செய்யக் கூடிய இந்த கைவினையை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் கைவேலைகள் செய்வதில் மிகுந்த ஆர்வமுடைய, ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி. செபா அவர்கள்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வாவ்... சூப்பர் குட்டீஸ் க்ராஃப்ட். ஆண்ட்டி எவ்வளவு நாளாச்சு!!! நலமா? கடைசி ஃபோட்டோ ரொம்ப அழகு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செயின் மாதிரி அழகாக இருக்கு.. கலரும் சூப்பர்...

கலை

இது மிகவும் எளிமையாக உள்ளது, நான் இதை நிலை மாலையாக செய்து அலங்கரிக்கலாம் என்று மிக்க நன்றி செபா மேடம்.

வனிதா,
வருகைக்கும் பதிவிற்கும் என் நன்றி. நான் நலம். நீங்களும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.
செபா.

கலை,
மிக்க நன்றி.
செபா.

பாலபாரதி,
என் நன்றிகள்.
செபா.

ஈஸி கார்லாண்ட், அழகா இருக்கு

உமா,
என் நன்றி.
செபா.

:-) இது சரியில்லை. ;) 8 பேர் கொமண்ட் போட்டிருக்கிறார்கள் என்று வந்து பார்த்தால்... பாதி உங்களது. இதுக்கும் ஒரு பதில் போடுங்க, 10 ஆகீரும். ;)

சின்னன்ல என்னைச் செய்ய வைத்தது நினைவு இருக்கு. நடுவில் உள்ள துளையைச் சரியான அளவில் வெட்டாவிட்டால் மாட்டுவது கஷ்டம். பேரப் பிள்ளைகள் கிடைக்கட்டும், உங்கட பேரைச் சொல்லி, சொல்லிக் கொடுக்கிறேன். :-)

‍- இமா க்றிஸ்

Super