தேதி: July 19, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கோழி - அரை கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
தயிர் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிது
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
தாளிக்க :
சோம்பு - அரை தேக்கரண்டி
பட்டை - சிறிது
கிராம்பு - 2
பட்டை இலை - ஒன்று
கறிவேப்பிலை - சிறிது
அரைக்க:
தேங்காய் - பாதி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
முந்திரி - 6 / 7
குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் உப்புச் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் சுத்தம் செய்த கோழி மற்றும் தூள் வகைகள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

அதனுடன் தயிர் சேர்த்து பிரட்டவும்.

அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி நன்கு கிளறவும்.

நன்றாகக் கிளறிவிட்டு, குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கவும்.

விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து ஊற்றி கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

சுவையான கோழி குழம்பு தயார்.

Comments
nithi
நித்யா குழம்பு ஆவி பறக்க பார்க்க சூடா சூப்பரா இருக்கு. அருமையா செய்து இருக்கீங்க. நானும் செய்து பார்க்கறேன். எப்டியோ நானும் ஃபர்ஸ்ட் கமெண்ட் குடுத்துட்டேன். எனக்கு கிஃப்டா ஒரு ப்ளேட் குழம்பு பார்செல் பண்ணிடுங்க.
எல்லாம் சில காலம்.....
நித்யா
பார்க்கவே ரொம்ப அருமையா இருக்கு! சீக்கிரமே செய்து பார்த்துவிடுகிறேன். அதே மாதிரி காளிப்ளவர்ல எதாவது சூப்பரா செய்து காட்றீங்களா ப்ளீஸ்.
நித்யா
அருமையா இருக்கு கோழி குழம்பு.....
நன்றி
குறிப்பு வெளியிட்ட டீமிற்க்கு நன்றி.
கருத்து கூரிய தோழிகள் அனைவருக்கும் நன்றி.
நிஷா கிடைத்தால் கன்டிப்பா செய்து அனுப்புகிரேன்
hai nithya
நான் வீட்டில் செய்து பார்த்தேன் பா நல்லா வந்தது.என் கணவர் மிகவும் விரும்பி சாப்பிட்டார்
ஏமாறாதே|ஏமாற்றாதே
very super.
very super.
all is well