ஆமை பின்குஷன்

தேதி: July 21, 2014

5
Average: 5 (4 votes)

 

டிசைன் துணி
கத்தரிக்கோல்
தட்டு
பென்
பஞ்சு
ஊசி
நூல் - கறுப்பு, வெள்ளை, பிங்க், நீலம்
பேப்பர்
அட்டை
பிங்க் கலர் ஃபெல்ட்
வெள்ளை லேஸ்
கூக்ளி ஐ - 2
காந்தம்
நீல நிற ரிப்பன்
பட்டன்
பின் (குண்டூசி)
ஜெம் க்ளூ

 

தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
துணியின் பின்புறத்தில் தட்டை வைத்து வட்டம் வரைந்து கொள்ளவும்.
வரைந்த வட்டத்தை வெட்டி எடுக்கவும்.
வெட்டி எடுத்த பிறகு இவ்வாறு இருக்கும்.
பிறகு அதன் ஓரத்தைச் சுற்றிலும் கறுப்பு நூலால் நூலோட்டம் தைக்கவும். (கறுப்பு நூலால் தைத்தால் படத்தில் தெரியாது என்பதற்காக நான் வெள்ளை நூலால் தைத்துள்ளேன்).
நூலை லேசாகச் சுருக்கிவிட்டு துணியின் உள்ளே சிறிது பஞ்சை வைக்கவும்.
பிறகு நூலை நன்றாக சுருக்கிக் கட்டி கையால் அமர்த்திவிடவும்.
சுருக்கிக் கட்டியதும் இவ்வாறு பந்து போல இருக்கும். இது ஆமையின் உடல் பகுதி
ஆமையின் உடல் பகுதியின் அளவிற்குப் பொருத்தமாக பேப்பரில் ஆமையின் அடிப்பக்கத்தையும், தலையையும் வெட்டியெடுத்து, அதனை அட்டையில் வரைந்து கொள்ளவும்.
அட்டையில் வரைந்த வடிவத்தை வெட்டி எடுக்கவும்.
இதனை பிங்க் ஃபெல்ட் துணியில் வைத்து, ஒவ்வொன்றிலும் இரண்டு துண்டுகள் வரையவும்.
அவற்றைத் தனித்தனியாக வெட்டி எடுக்கவும்.
வெட்டி வைத்துள்ள இரண்டு தலை துண்டுகளையும் சேர்த்து பின் செய்து கொண்டு, வளைவாக உள்ள பக்கத்தை மட்டும் பிங்க் நூலால் இணைத்துத் தைக்கவும்.
உள்ளே இறுக்கமாக பஞ்சை நிரப்பி, ஆமையின் உடலோடு சேர்த்துத் தைக்கவும்.
இதே போல அடிப்பக்கத்திற்கு வெட்டி வைத்துள்ள இரண்டு துண்டுகளையும் சேர்த்துத் தைத்து, சிறிது பஞ்சை வைத்து நிரப்பவும். உள்ளே காந்தத்தையும் வைத்துத் தைத்தால் ஃப்ரிட்ஜ் மாக்னட்டாக பயன்படுத்தலாம். லேஸையும் பட்டனையும் தொப்பி போல ரிப்பனில் பொருத்தி ஆமையின் தலையில் வைத்து தைக்கவும்.
கடைசியாக கண்களை ஒட்டிக் காயவிடவும். அழகான ஆமை பின்குஷன் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வாழ்த்துக்கள் ஏஞ்சல். :-)

‍- இமா க்றிஸ்

சூப்பருங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பின்குஷன் அழகா செய்துருக்கீங்க... வாழ்த்துக்கள்..

கலை