அட்மின் அண்ணா அவர்களுக்கு,

நாம் ஏன் பழமையான‌ சமையல் முறைகளை இங்கே பதிவிடக்கூடாது?
இந்த‌ கேள்வியை இங்கே கேட்கலாமா என்று தெரியவில்லை.

அம்மிக்கல்,ஆட்டுக்கல் அல்லது உரல்,உலக்கை,திருகு இவையெல்லாம் பயன்படுத்தி செய்யும் பதார்த்த்ங்கள் பற்றி தெரிந்து கொள்ள‌ விரும்புகிறேன்.திரும்ப இவற்றை நாம் ஏன் உபயொகிக்கக் கூடாது.இதற்கு நேரமின்மையை காரணம் காட்டாமல்,ஏன் முயன்று பார்க்கக்கூடாது.

இப்படி எனக்குத் தோன்றக்காரணம் என் பாட்டி.

என் பாட்டி சொன்னார்,இன்றும் அவர்களுடைய‌ வலிமைக்குக் காரணம் இப்படி சமைத்த‌ உணவுகள் தானாம்.இந்த‌ காலத்து உணவுகளில் இவையெல்லாம் இல்லையாம்.மீண்டும் அந்த‌ சத்தான‌ உணவுகளை நம் பழக்கத்திற்குக் கொண்டு வருவது?இவையெல்லாம் சாத்தியப்படுமா?

பழங்கால சமையல்களை நிச்சயம் கொடுக்கலாம். பிரச்சனை என்னவென்றால், அதை செய்து காண்பிப்பதற்கு ஆட்கள் கிடைப்பது கடினமாக இருக்கின்றது. உங்கள் பாட்டி அந்த வகை உணவுகளை செய்து காண்பிக்க தயார் என்றால் சொல்லுங்கள். நாங்கள் நேரில் சென்று தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து அவர் செய்வதை படமெடுத்து இங்கே வெளியிடுகின்றோம். இதை விளையாட்டாக குறிப்பிடவில்லை. அப்படி யாரேனும் செய்து காண்பிப்பவர்கள் தமிழ்நாட்டிற்குள் இருக்கின்றார்கள் என்றால், எந்த ஊர் என்றாலும் பரவாயில்லை. நாங்கள் நேரில் சென்று பார்த்து வருகின்றோம். சில வருடங்களுக்கு முன்பு இது குறித்து மன்றத்தில் குறிப்பிட்டு இருந்தேன். ஒவ்வொரு மாவட்டமாக சென்று அங்கேயுள்ள சிறப்பு உணவுகளின் செய்முறையை படமெடுத்து அறுசுவையில் வெளியிட வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. இதற்கு யாரேனும் உதவ முன்வந்தால் அதை நிச்சயம் செயல்படுத்தலாம்.

திருகு!! ஆஹா.. சிறு வயதில் திருகு சுற்றுவது எனக்கு மிகவும் பிடித்த விசயம். சலிக்காமல் மணிக்கணக்காக சுற்றுவேன். முன்பு இருந்த ஊரில், எங்களது பக்கத்து வீட்டில் அடிக்கடி திருகு பயன்படுத்துவார்கள். தீபாவளி நேரங்களில் பலகாரங்களுக்காக மணிக்கணக்கில் உளுந்து அரைத்து இருக்கின்றேன். (இவர்கள் குடும்பத்தில்தான் நாகை சிவா பெண் எடுத்திருக்கின்றார் என்பது இங்கே அவசியமற்ற தகவல். ;-)) இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்றிருந்த போது அந்த திருகு பற்றி விசாரித்தேன். அதெல்லாம் எங்கே இருக்கின்றது என்றே தெரியவில்லை என்றார்கள் அடுத்த தலைமுறையினர். பயனில்லாத பொருட்களை பத்திரப்படுத்துவதில் அர்த்தமில்லைதான். எங்கள் வீட்டு ஆட்டுக்கல்லை கவிழ்த்துப் போட்டு உட்காருவதற்கும், மீன் தேய்ப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றோம்.

மரியாதைக்குரிய‌ அட்மின் அண்ணா அவர்களுக்கு,நான் மன்றத்தில் இணைக்கும் 2 கேள்விகளும் நீக்க‌ பட்டு விட்டன‌.ஏன்?அதில் எதும் தவறுகள் உள்ளனவா?மீண்டும் அந்த தவறுகள் செய்யாமல் இருக்கவே இக்கேள்வியை கேட்டுள்ளேன்.(கேள்விகள்:வார்த்தை விளையாட்டு,Spoken English எங்கு எளிதாக கற்றுக் கொள்ளலாம்)

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

அன்பிற்குரிய சகோதரி அவர்களுக்கு,

வார்த்தை விளையாட்டு இழையில் ஒவ்வொருவரும் ஒற்றை வார்த்தையில் பதிவுகள் கொடுக்க, ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு பதிவு என்று செல்லும்போது அதனால் என்ன மாதிரியான பிரச்சனைகள் உண்டாகும் என்பதை எடுத்துக் கூறிவிட்டு, சிறிது கால அவகாசம் கொடுத்துவிட்டுதான் அந்த இழையை நீக்கினேன். நான் கொடுத்திருந்த விளக்கத்தை நீங்கள் கவனிக்கவில்லை என்று எண்ணுகின்றேன்.

இரண்டாவது ஸ்போக்கன் இங்கிலீஸ் குறித்த இழை. "Spoken English எங்கு எளிதாக கற்றுக் கொள்ளலாம்" என்று நீங்கள் கேள்வி கேட்கவில்லை. :-) எந்த 'இணையதளத்தில்' கற்கலாம் என்று கேட்டிருந்தீர்கள். இங்கே அறுசுவையில் பிற தளங்களுக்கான லிங்க் கொடுக்கக்கூடாது என்பதை முக்கிய விதியாக கொண்டிருக்கின்றோம். அப்படி இருக்கையில், எந்த தளத்தில் ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம் என்ற கேள்வி வந்தால், அதற்கு பிற தளங்களுக்கான லிங்க்ஸ் தான் பதிலாக வரும். அப்படித்தான் ஒரு பதிலும் வந்தது. அந்த பதிலை மட்டும் நீக்குவதில் பயனில்லை என்பதால் மொத்த இழையையும் நீக்கினோம். அது போன்ற கேள்விகளுக்கு எளிமையான பதில் - 'கூகுள்' என்பதுதான். அது உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

கடைசியாக ஒரு விசயம். அந்த இரண்டு இழைகளையும் தொடங்கியது நீங்கள்தான் என்பது தெரியாது. உங்கள் பெயரை கவனித்து இருந்தாலும் இது பலரும் செய்யும் தவறுகள் என்பதால், பெயரை எல்லாம் மனதில் பதிய வைத்துக்கொள்ளவில்லை. எனவே, உங்கள் இழைகளாகப் பார்த்து நீக்கியதாக எண்ண வேண்டாம். அதில் உள்நோக்கம் எதுவும் கிடையாது.

மிக்க நன்றி அண்ணா.நான் நிச்சயமா என் பாட்டியிடம் இது பற்றி என்னவெல்லாம் தெரியும் என்று கேட்டு உங்களுக்கு update செய்கிறேன்.

அறுசுவை தோழிகள் யாவரும் இதற்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

No pains,No gains

ANANTHAGOWRI.G

நன்றி அண்ணா.இனி இத்தவறுகளை திருத்திக் கொள்கிறேன்.

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

மேலும் சில பதிவுகள்