சூர்ய‌ நமஸ்காரம்

அதிகாலைப் பொழுது கீழ்வானம் சிவக்க‌ ஆதவன் மெதுவாக‌ எட்டிப் பார்த்தான். ராது படுக்கையை விட்டு சோம்பல் முறித்தவண்ணம் எழுந்தாள். உள்ளங்கைகளைத் தேய்த்து முகத்தில் ஒற்றியபடி கட்டிலை விட்டு இறங்கி நைட்டியை மாற்றி யோகா செய்ய‌ வசதியாக‌ சுடி ஒன்றை எடுத்து அணிந்து கொண்டாள். மஞ்சளும் பச்சையுமாக‌ அந்த‌ சுடி அவளுக்கு பாந்தமாக‌ பொருந்தியிருந்தது.

அவள் கணவன் ராஜா அவளுக்கு முன்னரே எழுந்து பல் தேய்த்து விட்டு வாக்கிங் செல்ல‌ ஷூ அணிந்து தயார் ஆனான்.

"வாக்கிங் முடிச்சிட்டு அப்படியே யோகா ஹாலுக்குப் போயி சூர்ய‌ நமஸ்காரம் செய்துட்டு தான் வரணும்" கார் கீயை நீட்டியபடியே அன்புக் கட்டளை இட்டாள் ராது. தலையசைத்து விட்டு அவன் புறப்பட‌, அவளும் யோகா மேட்டை எடுத்துக் கொண்டு வீட்டின் உள்முற்றத்திற்கு விரைந்தாள்.

விவேகானந்த‌ கேந்திரா யோகா வகுப்பில் அவர்கள் இருவருமே யோகா கற்றிருந்தனர். அதோடு நில்லாமல் ராது தினமும் தவறாது பயிற்சியும் செய்து வந்தாள். ராஜாவோ நண்பர்களோடு சேர்ந்து தினமும் வாக்கிங் மட்டும் சென்று வந்தான்.

சூர்ய‌ நமஸ்காரத்திற்கு ஈடு இணை ஏதும் இல்லை. அது ராதுவுக்கு உற்சாகம் தரும் டானிக் மாதிரி. யோகா செய்தால் துள்ளிக் குதிக்க‌ வேண்டும் போல‌ ஒரு வேகம் வரும். அது நமக்குள் இருக்கும் சக்தியை தட்டி எழுப்புகிறது. ரத்த‌ ஓட்டத்தை தூண்டுகின்றது. அவளுக்கு மிகவும் பிடித்த‌ விஷயங்களில் இதுவும் ஒன்று.

அவள் சூர்ய நமஸ்காரம் தொடங்கி ஆசனப் பயிற்சியை முடிக்கவும் ராஜா நடைப் பயிற்சியை முடித்து விட்டு வரவும் சரியாக‌ இருந்தது. அவன் வாக்கிங் மட்டுமே செய்து விட்டிருந்தான்.

"ஏன் சூர்ய‌ நமஸ்காரம் செய்யலை? எத்தனை வாட்டி சொன்னாலும் செய்யறதே இல்லை"வந்தவுடன் பிடித்துக் கொண்டாள் ராது.

"ஒழுங்கா வாக்கிங் போறதே போதும்"

"வாக்கிங் போறது நல்ல‌ விஷயம் தான். ஆனா,அது போதாது. உச்சி முதல் பாதம் வரை எல்லா ஜாயிண்டும் வளைந்து கொடுக்கணும்னா சூர்ய‌ நமஸ்காரம் அவசியம் செய்யணும். கால் மணி நேரம் செய்துட்டு வரலாம் அல்லவா?"

"நான் நல்லாதானே இருக்கேன்" கைகளைத் தூக்கி காட்டியபடி கண் சிமிட்டினான் அவன்.

"அப்படியா சரி பத்மாசனம் போட்டு காட்டுங்க பார்க்கலாம்" விடுவதாக‌ இல்லை ராதுவும்.

தரையில் அமர்ந்த‌ ராஜாவும் "இதென்ன‌ பிரமாதம்" என்றபடி பத்மாசனம் போடலானான். ஊஹூம்.கால்கள் ஒத்துழைக்க‌ மறுத்தன‌.விருப்பபடி அவை வளைந்து கொடுக்கவில்லை. சற்று சிரமமாக‌ இருந்தது.

ராதுவுக்கு சிரிப்பாக‌ வந்தது. அவள் பத்மாசனத்தில் அமர்ந்த‌து மட்டுமின்றி குனிந்து நெற்றியால் தரையைத் தொட்டும் காட்டினாள். அவளால் நெடு நேரம் பத்மாசன‌த்தில் அமர‌ இயலும்.

"உண்மை தான் ராது. வாக்கிங் போறதுக்கு ஆறு மார்க் கொடுத்தால் சூர்ய‌ நமஸ்காரத்துக்கு பத்து மார்க் .கொடுக்கலாம் போல‌" ஒப்புக் கொண்டான் ராஜா.

"நாளை முதல் கட்டாயம் வாக்கிங் முடிச்சிட்டு பனிரெண்டு சூர்ய‌ நமஸ்காரம் செய்துட்டு தான் வருவேன் போதுமா" அவன் உறுதியான‌ குரலில் கூறினான்.
ராது முகம் மலர்ந்தாள்.

பி.கு. என்னுடைய‌ முதல் பதிவு அனைவருக்கும் நமஸ்காரம் சொல்வதாக‌ இருக்க‌ வேண்டும் என்ற‌ ஆசையில் இந்த‌ சிறு முயற்சி.

4
Average: 4 (8 votes)

Comments

டைரியின் முதல் பக்கம் முதல் ஆளாகப் பதிவு இடுகிறேன். :-)
தொடருங்க. என் அன்பு வாழ்த்துக்கள். @}->--

‍- இமா க்றிஸ்

முதல் கருத்து ,அதுவும் இமாவிடமிருந்து.. பொக்கிஷமாக‌ வைத்திருப்பேன் இமா. வாழ்த்துக்கு மிக்க‌ நன்றி தோழி.

முதல் பதிவு... வணக்கம் :) வாழ்த்துக்கள்... தொடருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நிகிலா ஆரம்பமே நல்லா இருக்கு,உங்கள் டைரியின் ஆரோக்கியமான பக்கங்களை எங்களுடன் பகிருங்கள்,காத்திருக்கிறோம் சுவைப்பதற்கு.....

முதல் வலைப்பதிவிற்கு வாழ்த்துக்கள்ங்க :-)
சூர்ய நமஸ்காரம் பற்றி ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க..
மேலும் அசத்துங்கள்.

நட்புடன்
குணா

வலைப்பகுதியில் முதல் பதிவு மிக‌ நன்றாக‌ உள்ளது. தொடருங்கள் எங்கள் எழுத்துக்களை...வாழ்த்துக்கள்.

கலக்கலான ஆரம்பம்.வாழ்த்துக்கள் நிகி

Be simple be sample

உங்கள் வருகையும் வாழ்த்தும் மனதுக்கு உத்வேகத்தை கொடுக்கிறது. மிக்க‌ நன்றி வனி

//ஆரம்பமே நல்லா இருக்கு,உங்கள் டைரியின் ஆரோக்கியமான பக்கங்களை எங்களுடன் பகிருங்கள்,காத்திருக்கிறோம் சுவைப்பதற்கு..//
இதை. இதைத் தான் எதிர்பார்த்தேன் அனு. சுவைப்பதற்கு அறுசுவை விருந்தே படைத்திடுவோம். மிக்க‌ நன்றி அனு

வாழ்த்துக்கு நன்றி சகோ.
சூர்ய‌ நமஸ்காரம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.
அதனால்,முதல் பதிவாக‌ அதையே போட்டுட்டேன்.

//வலைப்பகுதியில் முதல் பதிவு மிக‌ நன்றாக‌ உள்ளது//
மிக்க‌ நன்றி ரேணு

கலக்கிருவோம். வாழ்த்துக்கு நன்றி ரேவா

நிகிலா அக்கா,
முதல் வலைப்பதிவிற்கு வாழ்த்துக்கள்.........
ஆரம்பமே அருமை, தொடர்ந்து எழுதுங்க‌ .........ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ....

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

உங்க பெயர் ரொம்ப அழகு. சூரிய நமஸ்காரம் பற்றி சொல்லி இருக்கிங்க. அவசியமான தகவல். வாழ்த்துக்கள். : )

நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!

வாழ்த்துக்கு நன்றி சுபி.
//ஆரம்பமே அருமை, தொடர்ந்து எழுதுங்க‌ .........ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ....//
நிச்சயம் சுபி

பெயர் அழகா இருக்கா.. இது எங்க‌ சித்தி சூட்டிய‌ பெயர். அவங்க‌ ஹிந்தி பண்டிட்.. என‌வே ஹிந்தி பெயர்.
சூர்ய‌ நமஸ்காரம் அனைவருக்கும் அவசியமான‌ ஒன்று.வாழ்த்துக்கு நன்றி தோழி

ஐ.. அறுசுவைக்கு புதுசா யோகா டீச்சரா? சூப்பர், சூப்பர் நாங்களும் உங்களுக்கு சூரிய நமஸ்காரம்.

உன்னை போல் பிறரை நேசி.

நிகியின் டைரி முதல் பக்கமே அசத்தலா இருக்கு, இன்னும் நிறைய‌ படிக்க‌ ஆவலா இருக்கு, வாழ்த்துக்கள் வலைப்பதிவிற்கும், முதல் பதிவிற்கும் :)

பின்குறிப்பு: ராது பத்மாசனத்திலேயே நெற்றியை பூமியில் வைப்பது அவங்களோட‌ உடலின் வளையும் தனமையை அழகா சொல்லுது. ராதுவை கேட்டேனு சொல்லுங்க‌ நிகி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மிக்க‌ நன்றி. நீங்களும் நம்ம‌ ஊரா? ரொம்ப‌ சந்தோசம். க்றிஸ்

ரொம்ப‌ நன்றி அருள். நீங்களும் யோகா பற்றி எழுதுங்க‌ அருள். . நீங்க‌ நல்லா நகைச்சுவையா சொல்லுவீங்களே.
பி.கு. ராதுகிட்ட‌ சொல்லிட்டேன் அருள்.அவங்க‌ ரொம்பவும் சந்தோசப்பட்டாங்க‌:)

எனக்கு பிடித்த சூரிய நமஸ்காரம் @@@டச் பண்ணிட நிக்ஸ் @@@

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஓ அஸ்வதாவுக்கும் பிடிக்குமா? அப்போ கட்டாயம் செய்யணும். நன் றி அஸ்வதா