தேதி: July 23, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பூண்டு பல் - 2
மிளகு தூள் - தேவையான அளவு
சீரகத் தூள் - அரை தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். பூண்டை நசுக்கி வைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கார்ன் ஃப்ளாரில் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி, பிறகு தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

தக்காளி வதங்கியதும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, மிளகு தூள், சீரகத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

கொதித்ததும் முருங்கைக்கீரையைப் போட்டுக் கிளறவும்.

கீரை வெந்ததும், கரைத்து வைத்துள்ள கார்ன் ஃப்ளாரை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

சுவையான, சத்தான முருங்கைக்கீரை சூப் தயார்.

Comments
சூப்பர்
வித்தியாசமா இருக்கு செய்து பார்க்கிறேன்.
நாங்க தேங்காய்ப்பால் ஊற்றி செய்வோம்.
நித்யா
முருங்கையிலை என்னோட ஃபேவரிட் நித்யா, அடுத்து கிடைக்கையில் உங்க சூப் செய்துட வேண்டியது தான். உங்களுக்கு முருங்கையிலை கூட கிடைக்குதா?
ஸாகிதா,வனி
குறிப்பு வெளியிட்ட டீமிற்க்கு நன்றி.
ஸாகிதா தேங்காய் பால் ஊற்றியும் செய்யலாம். நானும் சேர்த்து செய்துல்லேன். வித்தியாசமா இருக்கும்.
வனி கிடைக்கும் போது செய்து பாருங்கள். முருங்கை மரம் எங்க வீட்லயே இருக்கு பா.
Enakkum romba pudikkum but
Enakkum romba pudikkum but inga thaan kidaikathu , kidaithal seithu parkiren
நித்யா
சூப்பர்ங்க... இங்க கொஞ்சம் தூரம் போனா தான் கிடைக்கும் கீரை, ட்ரை பண்ணிப்பார்க்குறேன். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நித்யா
நித்யா சூப் super ,சூப் texture இப்படி இருந்தா பசங்க சாப்பிடமாட்டேங்கறாங்களே,அரைத்து செய்தா கசப்பு சுவை வந்திடுமோ?
nithi
சூப் நல்லா இருக்கு. கீரைலயே முருங்கை தான் கீரை லிஸ்ட்ல டாப்ல இருக்கு. அப்றம் தான் மத்த கீரை எல்லாம். நல்ல குறிப்பு. ஈஸியாவும் இருக்கு.
எல்லாம் சில காலம்.....
நித்யா
நித்யா,
கண்ணாலேயே சாப்பிடவேண்டியது தான்..
நல்ல குறிப்பு
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா