காதல் திருமணம்.

நான் 7 years ஆக‌ ஒருவரை காதலிக்கின்றேன் ஆனால் எனது வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மிகவும் கஷ்டமாக‌ இருக்கிறது. எமது காதலை ஏற்றுக்கொள்ள‌ ஏதாவது ideas plz friends...

என்ன காரணங்களைக் காட்டி எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பதைக் குறிப்பிட்டால், ஏதேனும் ஆலோசனை வழங்க உதவியாய் இருக்கும். பெரும்பாலானப் பிரச்சனைகளை பேசித் தீர்க்கலாம். நீங்கள் விரும்புவரைத் திருமணம் செய்துகொண்டால் உங்கள் வாழ்க்கை எந்த அளவிற்கு சிறப்பாக அமையும் என்பதை உங்கள் பெற்றோருக்கு எடுத்துரைத்து புரிய வைக்கலாம். (BTW, அவர்தான் அருணா? :-))

Hai shali unga lover eppadi ungala pathupar and avaroda characters unga vetla eduthu sollungal ok nenga eppadi unga parentsa approach pandringalo athu v imp nanum 7 yrs love panni parents mulu manasoda ennavarai kai pidithen first enakum ethirputhan but nan puriya vaithen athu oru periya process nalaiku vanthu kandipa ennanu share pandren ok dont wry unmaiyana anbu endraikumey thorkathu. unga lover vetla sollitara avanga vetla ok va detaila sollunga ok

எங்கள் ஜாதி வேற‌ அவருடைய‌ ஜாதி வேற‌ அது தான் பிரச்சினை. எனக்கு அப்பா இல்லை அதனால் அம்மா அவருடைய‌ உறவினர்கள் பேச்சைக் கேட்டு எதிர்க்கின்றார். எவ்வளவு சொன்னலும் புரிஞ்சுக்கவே மாட்டேன் என்றாங்க‌. ஆனா அவர‌ பக்கம் ஓகே தான். நான் என்ன‌ செய்யட்டும்? (அவர் தான் அருண் எப்பிடி அட்மின் கரக்டா கண்டுபிடிச்சிங்க‌?.)

ஷாலி அருண்

நான் ரொம்ப‌ தடவை எடுத்து சொல்லிடன் கடைசிய‌ பொறுக்காம‌ அம்மாக்கு என்னோட‌ லவ்வ‌ பற்றி மனசில இருக்கிற‌ எல்லாத்தையும் அம்மாக்கு கடிதத்தில‌ பெரிய‌ மஹாபாரதமே எழுதிக் கொடுத்தன். ஆனால் அதுக்கு அவ‌ வேற‌ ஜாதில உனக்கு கல்யாணம் பண்ணித் தரவே மாட்டன் என்டு உறுதியா சொல்லிட்டாங்க‌. இத‌ தவிர‌ அவர‌ குறை சொல்வதற்கு ஒன்றுமே இல்ல‌ நல்ல‌ ஜொப்ல் இருக்கேர். கெட்ட‌ பழக்கம் ஒன்றுமே இல்ல‌. பாக்க‌ ரொம்ப அழக‌ இருப்பேர்.

ஷாலி அருண்

அப்பா இல்ல னு சொல்லுறிங்க... அம்மா உங்கள கஷ்டப்பட்டு வளர்த்து இருப்பாங்க உங்கள நல்ல இடத்துல கல்யாணம் செஞ்சு கொடுக்கணும்னு அவங்களுக்கு ஆசை இருக்கும் . உங்க காதல் ல அம்மாக்கு புரிய வைங்க .அவர தவிர வேற யாரையும் கல்யாணம் செய்ய மாட்டேன் னு பிடிவாதமா சொல்லுங்க . கடைசி வரைக்கும் இப்படியே இருந்துருவேன் னு சொல்லுங்க .

ஆமாம் அதனால‌ தான் நான் இவ்வளவு நாட்களாக‌ காத்திருக்கிறன். காத்திருக்கவும் கால‌ எல்லை இருக்கு தானே... காலம் தான்டினால் என்ன‌ செய்வது? வீட்டில் ஓகே சொல்லுவான்க‌ என்டு நம்பிக்கையே இல்ல‌... மனசு ரொம்ப‌ வலிகுது. பயமா இருக்கு... வீட்ட‌ எதிர்க்கவும் முடியல்ல‌... அவரோட‌ சேரவும் முடியல்ல‌....

ஷாலி அருண்

அருண் ந நேரா உங்க வீட்டுக்கு வந்து உங்க அம்மா கிட்ட பேச சொல்லுங்க உங்க பொண்ண நா நல்ல படியா பார்த்துப்பேன் உங்களுக்கு மருமகனா இல்ல ஒரு மகனா இருப்பேன் நு சொல்ல சொல்லுங்க உங்க கல்யாணம் நடக்கறதுனால எந்த பிரச்சனையும் வராது னு நம்பிக்கை ய குடுக்க சொல்லுங்க

நல்ல‌ ஆலோசனை தான் ஆனால் அவர் பேச‌ வரும் போது அம்மாவும் மற்றவர்களும் வார்த்தையால் அவர் மனதை காயப்படுத்திருவார்களோ என்று பயமா இருக்கு... அவர் சரியான‌ மென்மையான கரக்டர், அவர் மனம் வேதனைப்படும்.

ஷாலி அருண்

kavala padathinga pa. unmaiyana kadhal endraikume thorkadhu. nenga marriage pana avangala tha panuve ilana ipdiye irundhurvenu sollunga ungalaium unga kadhalaium meeri unga amma veera yarukum kalyanam pani vaika mudiadhu. so wait panunga ma avangata eduthu soli parunga romba porumaiya irunga indha kaalathula jaadhi nguredhe poiruchi pa madham mari kuda kalyanam pandranga avangalam sandhosama ilaya. so eduthu solunga avanga manasu maarura vara porumaiya irunga avangata argue panathinga unga amma kudia seekiram unga manasa purinjipanga don't worry ma...

மிகவும் நன்றி... உங்கள் வார்ததைகள் என் மனதிற்கு மிகவும் ஆறுதல் அளிக்கின்றது. இதுவரை எனக்குத் துணையாக‌ இருந்தது எனது காதலும் கடவுளும் தான். ஆனால் தற்போது உங்களைப் போன்ற‌ நண்பிகளின் ஆறுதல் வார்ததைகளும் கூட‌... எல்லா பெருமையும் அறுசுவை.கொம் இற்குத் தான்..

ஷாலி அருண்

மேலும் சில பதிவுகள்