தலை முடி அழகு

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஆனால் நான் முடியில் தெரியும் என்பேன். காரணம் பெண்களுக்கு மிகவும் அழகுச் சேர்ப்பதே இந்த தலை முடி தான் என்று கூறுவதை விட ஆரோக்கியமான தலை முடி தான் என்று கூறலாம். அதுமட்டுமல்ல ஒருவரின் வயதை குறைக்கவும் கூட்டவும் இவற்றால் மட்டும் தான் முடியும் என்பதால் அவற்றை எப்படி எல்லாம் பராமரிக்கலாம் என்று என்னுடைய அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
பொதுவாக பெண்களின் தலையாய பிரச்சனை முடி கொட்டுதல் தான். அவற்றை ஒழிக்க முதல் கட்டமாக முடியின் நீளத்தை குறைத்தல் வேண்டும். இவற்றால் நிச்சயம் உடனடி நிவாரணம் கிடைப்பதை காணலாம். காரணம் குட்டையான முடியினால் தலை எப்பொழுதும் சுத்தமாக இருக்கும். சிக்கும் ஏற்ப்படாது. தலை குளித்தபின் சீக்கிரத்தில் உலர்ந்து விடும். ஐந்து நிமிடத்தில் தலை அலங்காரத்தை முடித்து விடலாம்.இப்படி எவ்வளவோ நன்மைகள் இருக்கின்றது. அனுபவிப்பவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்.
முடியைக் குறைக்கும் பொழுது முக அமைப்பிற்க்கு ஏற்றார் போல் முடியை குறைத்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம்.
வீட்டை பராமரிக்கும் பெண்களாகட்டும், வெளியில் வேலைக்கு செல்லும் பெண்களாகட்டும் தலை முடியை அழகாக வெட்டி டிரிம்மாக வைத்திருப்பது அழகு குறிப்புகளில் தலையாய குறிப்பு என்று கூறி முடிக்கின்றேன் நன்றி.

அன்புச் சகோதரிக்கு,

ஒரு அறுசுவை நேயர், "எனக்கு பொடுகு இருக்கிறது. அதனை நீக்க என்ன செய்யவேண்டும்" என்று கேட்டு இரண்டு மூன்று முறை மின்னஞ்சல் செய்து விட்டார். நான் இரண்டு நாளுக்கு ஒரு முறை ஷாம்பூ போட்டுக் குளிக்கின்றேன். என் தலையில் பொடுகு கிடையாது('முடி'யும்தான்). என்னால் அதற்கு பதில் அளிக்க முடியவில்லை.

உங்களின் கேள்வியை மன்றத்தில் பதிவு செய்யுங்கள் என்று இரண்டு முறை நான் பதில் அளித்தும் அவர் பதிவு செய்யவில்லை. எனவே நானே அந்த கேள்வியை இங்கே கேட்டுவிடுகின்றேன். இதற்கும் ஒரு பதில் கொடுங்கள். உங்களுக்கு புண்ணியமாக போகும்.

திரு அட்மின் அவர்களுக்கு, தங்கள் கடிதம் நல்ல தமாசாக இருந்தது. வாசிக்கும் பொழுது சிரிப்பை வரவைத்தது.
பொடுகு பிரச்சனைக்கு புளித்த தயிரை தலையில் அதாவது மண்டை ஒட்டில் நன்கு படும்படியாக தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்த பிறகு தலை வாறும் சீப்பு அல்லது பிரஷ் கொண்டு தலையை நன்கு சீவிவிட வேண்டும். இதனால் பொடுகு நன்கு இளகி முழுவதும் வெளியில் வர உதவியாக இருக்கும்.
நம்மூராக இருந்தால் சீயக்காயையும், வெந்தயத்தையும் சுடு தண்ணீரில் ஊறவைத்து கெட்டியாக அரைத்து ஷாம்புக்கு பதிலாக இந்த சீயக்காய் விழுதை தேய்த்து தலை குளிக்கலாம். மீண்டும் மூன்று நாட்கள் கழித்து எலுமிச்சை பழத்தின் அரை மூடியை மண்டை முழுவதும் படும் படியாக தேய்த்து ஊற வைத்து அரைத்த சீயக்காய் விழுதை போட்டு தலை குளிக்கலாம்.
மற்ற படி இந்த சிகிச்சை செய்யும் பொழுது வேறெந்த ஷாம்பு அல்லது சோப்பை தலையில் போடக் கூடாது.
சீயக்காய் கிடைக்காத பட்சத்தில் வெந்தயத்தை மட்டும் ஊறவைத்து அரைத்து தலையில் தேய்த்து கழுவலாம். இவ்வாறு செய்து வர ஒரு மாதத்திற்குள் இந்த பொடுகிலிருந்து கட்டாயம் விடுதலை கிடைக்கும் என்று நம்பலாம். அனால் மீண்டும் வர வாய்ப்புள்ளது. அப்படியான பட்சத்தில் இந்த சிகிச்சையை மீண்டும் தொடர்ந்து செய்ய வேண்டும்.
இரவில் படுக்க போகுமுன் விளக்கெண்ணெயை(castor oil) தலையில் பூசிவிட்டு காலையில் எப்பொழுதும் போல் ஷாம்பு போட்டு தலை குளிக்கலாம். வாரம் ஒரு முறை இப்படி செய்ய வேண்டும்.
நல்ல பராமரிப்பினால் பொடுகுத்தொல்லையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். ஆனால் ஓரேயடியாக இதனை ஒழிக்க முடியாது காரணம் வாழ்நாள் முழுவதும் இந்த பொடுகு என்னும் இறந்த செல்கள் உதிர்ந்துக் கொண்டேதான் இருக்கும் என்று கூறி எனது கருத்தை முடிக்கின்றேன். நன்றி.

பொடுகு போவதற்கு மிளகை ஊறவைத்து பின் அதனை நன்றாக அரைத்துக் கொள்ளவும், அரைத்த விழுதை பாலில் கொதிக்க வைக்கவும். பின் அந்த கலவையை தலையில் தடவி சிறிது நேரம் ஊறிய பின் ஷாம்பு போட்டு குளிக்க பொடுகு போகும்

சின்ன வெங்காயம் அரைது தலையில் அரை மணி ஊர வைத்து அலசினால் பொடுகு மறையும்......

prema

சிறுமிகளுக்கு தலை முடி பள பளப்பாகவும், ஆரோக்கியமாக இருப்பதற்க்கு, உளுத்தம் பருப்பை இட்லிக்கு அரைப்பது போன்று ஊறவைத்து நன்கு வெண்ணை போன்று அரைத்து அல்லது இட்லிக்கு அரைக்கும் பொழுது சிறிது அதில் எடுத்து முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலக்கி தலை முழுவதும் பூசிவிட்டு குறைந்தது ஒரு மணி நேரம் ஊறவைத்து விடவும். பிறகு ஷாம்புவை போட்டு அலசிவிட்டு பாருங்கள். இதனால் முடி மட்டுமல்ல தலையிலுள்ள சூடும் குறையும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்தீர்களானால், பெண்குழந்தைகள் சிறு வயதிலிருந்தே ஆரோகியமான முடியழகைப் பெறலாம்.

சில பேர் தலைமுடி மட்டும் நன்கு பளபளப்பாக இருக்கிறதே? எப்படி? ஷாம்பு ,கண்டிஷ்னர் தவிர வேறு என்ன போடுகிறார்கள்?

Hi Manohari, நான் 2 வருடத்திற்கு முன்பு permanant straightning செய்தேன். இப்பொழுது hair சரியான dry ஆகி விட்டது. நான் எந்த oil உம் பாவிப்பதில்லை. அத்துடன் 3 நாளைக்கு ஒரு முறை தலைக்கு குளிக்காவிட்டால் தலை எண்ணைத் தன்மையாக வந்து விடும். குளித்தால் முடி பறந்து கொன்டிருக்கும். எனக்கு இப்பொழுது straightning செய்ய விருப்பமில்லை. எனக்கு loose hair தான் விருப்பம், ஆனால் இப்பொழுது முடியவில்லை, loose ஆக விட்டால் முடி பரந்து கொன்டிரு, அவசரத்திற்கு தலை இழுக்க மிடியவில்லை. என்னுடைய hair இற்கு எப்படி cut பண்ணினால் loose hair ஆக விடலாம். Please advise me.

மனோஹரி மேடம் இந்த தலைமுடி அழகு குறிப்பு ரொம்ப நல்லா இருக்கு. இன்னும் எழுதுங்க.
தயிர் கொஞ்சம் குளிர் குறைந்ததும் ட்ரை பண்ணறேன்
நான் முயற்சி செய்ததை சொல்கிறேன். ஆப்பிள் சைடர் வினிகர் ( எல்லா இடத்திலும் கிடைக்குமா என்று தெரியவில்லை) ஒரு பகுதியும் தண்ணீர் 3 பகுதியும் சேர்த்து குளித்ததும் கடைசியில் இந்த கலவையை வைத்து கழுகி, தலையை மறுபடியும் நீர்விட்டு அலசினால் பொடுகும் குறையுது நல்ல மினு மினுப்பும் இருக்கும்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் மனோகிரி மேடம் ,எப்படி இருக்கீங்க?வீட்டில் அனைவரும் நலமா?என் பொண்ணுக்கு இப்போ 5 வயதாகிறது.அவளுக்கு இந்த உளுத்தமாவை தலையில் தேய்க்கலாமா?தேய்க்கலாமென்றால் ஒரு கையளவு உளுத்தமாவு போதுமா?அதனைஊறவைத்து மிக்சியில் அரத்து யூஸ் பன்னலாந்தானே.இங்கு நல்ல குளிர்காலம்.குளிர்காலத்திலும் இந்த மெத்தடு யூஸ் பன்னலாமா.நன்றி

ramba

மனோகிரி மேடம்,எனக்கு இன்னுமொரு சந்தேகம்.தீர்த்து வைப்பீங்களா?இங்கு இப்போது வின்டர் சீசன் ஆரம்பித்துள்ளது.அதனால் என்ன பன்னினென்னா 2 வாரத்துக்கு ஒருமுறை தலைக்கு ஊத்தினேன்.முன்னாடி வாரத்திற்கு 2 தடவை தலக்கு விடுவேன்.ஆதலால் என் தலையில் நிறைய அழுக்கு சேர்ந்துள்ளது.என்ன சாம்பூ என் தலைக்கு யூஸ் பன்னலாம்.கூறுங்கள் நன்றி

ramba

மேலும் சில பதிவுகள்