தேதி: July 28, 2014
குடைமிளகாய்
கத்தி
கத்தரிக்கோல்
டூத் பிக்
குடைமிளகாயைக் கழுவித் துடைத்து எடுத்துக் கொள்ளவும்.

கத்தரிக்கோலால் குடைமிளகாயின் காம்பை நறுக்கி நீக்கிவிடவும்.

பிறகு கத்தியால் குடைமிளகாயின் மேல் வளைவு வளைவாக பூ போல வரையவும்.

வரைந்த பகுதியை மட்டும் கத்தியால் மெதுவாக பெயர்த்து எடுக்கவும்.

அதன் பின்புறத்தை (விதைகள் இல்லாதபடி) கத்தியால் லேசாக சுரண்டி எடுக்கவும்.

காம்பு இருந்த இடத்தில் டூத் பிக்கைச் சொருகிவிடவும்.

குடைமிளகாய் குடை ரெடி.

குடைக்கு வெட்டியெடுத்ததில், மீதமிருக்கும் குடைமிளகாயின் மேற்புற ஓரங்களை சீராக வெட்டிக் கொள்ளவும்.

பிறகு கத்தியால் அதன் ஓரங்களை ஜிக் ஜாக் வடிவில் வெட்டி முடிக்கவும்.

எளிமையாகச் செய்யக் கூடிய குடைமிளகாய் குடை மற்றும் பவுல் ரெடி.

Comments
ஜாடிக்கேற்ற மூடி
பெப்பர்ஸ் கார்விங் சூப்பர் செண்பகா.
குடையும் கூடையும்
இமாவும் பொருத்தமாக ஒரு தலைப்புப் போடாட்டா எப்படி! :-)
கார்விங் சூப்பரா இருக்கு செண்பகா. குடை... க்யூட்.
- இமா க்றிஸ்
senbga akka
akka please share blouse cutting method.i already learned salwar methods from your shares.it was really helpful to me.and i stitched well now.eagerly waiting for your reply akka.
money makes many things
குடையும் மிளகாயும்
நாங்களும் தலைப்பு தருவோம்ல ;) இமாக்கு “குட்டிக்கையில் புட்டி” தலைப்பு ரொம்பவே தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கு :P ஹிஹிஹி.
செண்பகா... இம்புட்டு அழகா குடை + மிளகாய் = குடைமிளகாய் ஃபார்முலாவை விளக்கிச்சொல்ல முடியும்னு நான் நினைக்கவே இல்லைங்க. ம்ம்... அடுத்தாப்பல இதுக்காகவே நான் ஒரு பார்ட்டி ரெடி பண்றேன், அதுல இதை வெச்சு நான் நல்ல பேர் வாங்கிக்குறேன் ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Senbaga
Nice work... Azhagaa irukku senbaga . Apt for party tables :) thanks for sharing :)
Kalai