சோறும், சோறு சார்ந்த இடமும் - கிறிஸ்மஸ் ராபர்ட்ஸ்

"சோறும், சோறு சார்ந்த இடமும் (சமையலும், சமையல் சார்ந்த இடமும்)"

ஏய்! குட்டி வாண்டு அந்த பாத்திரத்தை எடு...
என்னங்க... அந்த சீனிய கொஞ்சம் எடுங்க..
ஏய்! அத தொடாத...
ஏய்..ய்..ய்... அதை அதிகம் கொட்டக் கூடாது... அப்ரண்டீஸ்... அமைதியா நான் சொல்லுறத மட்டும் தான் செய்யணும். அதிகப் பிரசங்கித்தனம் கூடாது.

என் சமையலறை அல்லோல, கல்லோலப்பட்டது ஏன்னு கேக்குறீங்களா?

எல்லாம் வனி சிஸ்டரோட எக்லெஸ் வெனிலா அவன்லஸ் கேக் செய்யுறதுக்காகத் தான்.

என்ன தான் அவன் இல்லாது செய்யுறதா இருந்தாலும், என்னவன் இல்லாது செய்யக்கூடாதுன்னு உத்தரவு.

அட இது என்னடி? பெரிய கதையா இருக்குன்றீங்களா?

பெரிய கதை தான். சொல்லுறேன் கேளுங்க. (என்ன பண்ணுறது? கொசுவர்த்தி ஒன்ன கொளுத்தி போடுங்க).

அதான் நம்ம சமையல் பத்தி தெரியும்ல. அறுசுவைல சேர்ந்த புதுசுல கேக், குக்கீஸ்னு அவன்ல செய்ற மெனுகளைப் பார்த்துட்டு, ஆர்வமாகி அவன் வேணும்னு என்னவர்கிட்ட கேட்டேன்.

அவர் என் சமையல் சாகசத்தை தெரிந்தவர் என்பதால் அவனுக்கு அனுமதி மறுத்தார்.

"அட என்னங்க நீங்க, போன வாரம் தான அறுசுவைல பார்த்து (ஆலு ஸ்நாக்ஸ் - நன்றி வனி சிஸ்டர்) உருளைக்கிழங்குல முறுக்கு செய்து தந்தேன். நீங்களும் எவ்வளவு ருசியா இருக்குன்னீங்க. நல்லா இருக்குன்னு கமெண்ட் போட்டோமே" என்றேன்.

"'ஆம்" என்று தலையசைத்து ஆமோதித்தார்.

“அதே மாதிரி, அப்படியே ருசியா செஞ்சிரலாம். படம் போட்டுருக்காங்க. எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி, அவன்ல வைக்கிறதுக்கு முன்னாடி சந்தேகம் வந்தாக்கூட கேட்கலாம். உடனே ரிப்ளை பண்ணுவாங்க. (அப்பப்ப சனி, ஞாயிறுல ஈ ஆடுறத நா சொல்லலியே). அவ்ளோ ஈசி போங்க..” ஒரு வழியா பாடம் எடுத்து சம்மதிக்க வைத்தேன்.

மூன்று நாட்களில் வந்தது அவன்.

2 நிமிஷம் இல்லங்க. பதினஞ்சே செகண்ட்ல நூடுல்ஸ் ரெடி. பாருங்க சோளத்த 3 வது நிமிஷம் வேக வச்சிட்டேன். பாப் கார்ன் வீட்டிலேயே ரெடி.

எல்லாம் நல்லாத்தான் வந்தது.

திடீரென புட்டு சாப்பிட ஆசை வர (செய்முறை வசதி தெரிந்த ஆசை) பச்சரிசி, தேங்காய்ப் பூ, சர்க்கரை, நெய் எல்லாம் கலந்து வேகமாய் வேக வைக்க அவனில் வைத்தேன்.

எனது கணிப்புப்படி மாவும் சர்க்கரையும் கலந்து, சிறிது லிக்யூடாக மாறி பின்பு வேகும். (எல்லாம் நம்ம ஆறாம் அறிவு பண்ணுற அலம்பல்).

பெட் ரூமிலிருந்து புத்தகம் படித்தவள், ஐந்து, பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை வந்து, வந்து பார்த்தேன்.

ம்ஹும்.. எதுவும் மாறலியே...

அடுத்த முறை கூடுதலாக ஐந்து நிமிடம் கொடுத்து, 15 நிமிடங்கள் கழித்து வந்து பார்க்கலாம் என நினைத்து உட்கார்ந்தேன்.

ஒரு பத்து நிமிடங்கள் தாண்டி போயிருக்கும்.

திடீரென 'டுப்' பென்று சத்தம் கேட்டது. ஓடிச் சென்று சமையலறையை எட்டிப்பார்த்தேன்.

எனது ஆசைப் புட்டு ஒன்று கரிக்கட்டையாய் என் காலுக்கு அருகில் புகைந்தது. அவனைப் பார்த்தேன். அனைத்து புட்டுகளும் சிதறிக் கிடக்க அனைத்திலும் புகை மண்டலம். அவசரமாய் பவரை ஆஃப் செய்து பார்த்தேன்.

அவனுக்கு ஒன்றும் பெரிய காயமில்லை. சிறிது கண்ணாடிச் சிதறல் தான். ஆனால், என் ஆசை புட்டுத் தான் கரித்துண்டாகிவிட்டது. அப்போதே அவனைத் தனியாக பயன்படுத்த தடா வந்தது.

இது மட்டுமல்ல. இன்னொரு சாகசமும் இருக்கு. அதையும் கேட்டுக்கோங்க.

(என்..ன...து... கொசுவர்த்தி எரிஞ்சி, முடிஞ்சி போச்சா? கவலைப்படாதிங்க.. இன்னொன்னு கொளுத்திக்கோங்க).

ஏதோ சின்ன வயசுல தூர்தர்சன்ல பார்த்தது. (சண்டே சமையல்னு நினைக்கிறேன்) அதாங்க நம்ம வசந்த் & கோ அண்ணாச்சி கூட சாப்பிட்டுட்டு ‘’ம்ம்ம், நல்லா இருக்கு’’ ன்னு சொல்வாரே.

அதுல ஒரு குறிப்பு வெண்ணிலா கேக். அவன் தேவையில்ல. ரவை, பால், சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ், முட்டை, நெய் எல்லாம் போட்டு அடிச்சு, கிண்டி, ஒரு பதம் வந்ததும் (நாம என்ன தான் பரமபதம் பிடிச்சாலும் பதம் மட்டும் வரமாட்டேங்குது) இறக்கி பெரிய டிரேயில ஊத்தி ஆறவிட்டா வெண்ணிலா கேக் ரெடி. வெட்டி (எதை?) எடுத்து சாப்பிடலாம்.

நானும் ந..ம்பி செஞ்சேன். வாசனை எல்லாம் தூக்கல். டிரேயில ஊத்தி, ஆறவிட்டு பீஸ் போட கத்திய விட்டேன்.

ம்ஹும்... கேக் மேல கோடு கூட போட முடியலியே. கத்தியும், வெட்டுன ஆளும் சரியில்லன்னு என்னவர கூப்பிட்டேன்.

அவரும் வந்து ட்ரை பண்ண.. ம்ஹும்... கடைசியில் சுத்தியல், உளி கொண்டு ட்ரேயை தான் பீஸ் போட்டோம்.

ஆனாலும் சுவை சூப்பர்... (எப்படியா? சுத்தியல், உளி வச்சி பீஸ் போட்ட ட்ரேயையும், கேக்கையும் தனியாக்கிட்டோம்ல). இப்ப தனியாக புதிய முயற்சிக்கும் தடா.

இதோ, இப்போ…

ஏற்கனவே எழுதி வைத்த வனி சிஸ்டரோட எக்லெஸ் வெனிலா அவன்லஸ் கேக் குறிப்பைப் பார்த்து செய்து முடித்தேன். வேக வைத்து வெளியில் எடுக்க, வாசனையும், வடிவமும் அற்புதம்.

சாதித்தே விட்டாள் கிரிஸ்!!!

ஆற வைத்து பங்கு போட்டு சாப்பிட ஆரம்பித்தோம். இரண்டே நிமிடத்தில் முதல் ரவுண்டு முடிந்தது. ஆரம்பித்தோம் இரண்டாவது ரவுண்டு.

திடீரென யோசித்த அவர் கேட்டார், ''நீ ஏதோ கேக் தான செய்றேன்னு சொன்ன?"...

அவர் கேட்டதும் தான் மூளைக்கு உதித்தது. ஆமால்ல, கேக் தான செஞ்சோம். இப்ப கொஞ்சம் பிஸ்கட் மாதிரில்ல வந்திருக்கு. (மறுபடியும் வழக்கம் போல் மிக்ஸிங் பிராப்ளம் தான் போல). விடுவோமா என்ன... சமாளிப்போம்...

"அட இல்லங்க... இது எக்லெஸ் வெனிலா அவன்லஸ் குக்கீஸ். கேக் மெத்தடுல செய்ற குக்கீஸ். குக்கீஸ் மாதிரி சின்னதா ரவுண்ட், ரவுண்ட்டா செஞ்சா அவன்ல வச்சி எடுக்கணும். வேணும்னா இதையே அவன்ல வைச்சு எடுப்போமா?".

அதிர்ச்சியுடன் என்னையும், அவனையும், கேக்கையும் மாறி மாறிப் பார்த்தார்கள் அவரும், குட்டி வாண்டுவும்.

Comments

ஹையா உங்க கதைய பார்த்ததும் ஒரே சிரிப்பு தான் எனக்கு. பாருங்க படிச்சு முடிச்ச பிறகும் கூட சிரிப்பு மட்டும் என் கூடவே ஒட்டிக்கிட்டே இருக்கு... ரொம்ப தேங்க்ஸ்.. நினைச்சு நினைச்சு சிரிக்க வைச்சதுக்கு...

// அப்ரண்டீஸ்... அமைதியா நான் சொல்லுறத மட்டும் தான் செய்யணும். அதிகப் பிரசங்கித்தனம் கூடாது.// வடிவேல் வாய்ஸ்ல படிச்சேன்..

//அவனுக்கு ஒன்றும் பெரிய காயமில்லை. சிறிது கண்ணாடிச் சிதறல் தான். ஆனால், என் ஆசை புட்டுத் தான் கரித்துண்டாகிவிட்டது. அப்போதே அவனைத் தனியாக பயன்படுத்த தடா வந்தது.// அவன் கண்ணாடி உடைஞ்சதுல கூட வருத்தமில்ல... புட்டு கருகிட்டதால ரொம்ப ஃபீலிங்கா??

// நாம என்ன தான் பரமபதம் பிடிச்சாலும் பதம் மட்டும் வரமாட்டேங்குது// எப்படி வரும்.. வந்துட்டா இப்படில்லாம் எழுத முடியாம போயிருக்குமே... :-)

//எப்படியா? சுத்தியல், உளி வச்சி பீஸ் போட்ட ட்ரேயையும், கேக்கையும் தனியாக்கிட்டோம்ல// ட்ரேயை சாப்பிடலைல்ல?

//என்..ன...து... கொசுவர்த்தி எரிஞ்சி, முடிஞ்சி போச்சா???// நீங்க அப்பிடியே ஷாக்.ஆகிட்டீங்களா?

சான்ஸே இல்ல கிரிஸ்.. எதார்த்தமா சூப்பரா எழுதி இருக்கீங்க... வாழ்த்துக்கள்... .

கலை

;))) அவன்ல புட்டு! சரியா வந்திருந்தா இங்க ரெசிபி எதிர்பார்த்திருக்கலாம். மிஸ் பண்ணிட்டோம். ;(

தலைப்பு சூப்பர். கதைக்கு இதைவிடப் பொருத்தமான தலைப்பு வேற கிடைக்காது. சிரிச்சு முடியல இன்னும். ;))

‍- இமா க்றிஸ்

கிறிஸ் அக்கா,
வழக்கம் போல‌ உங்க‌ கதை காமெடி தான் போங்க‌, நிஜமா ரொம்ப‌ சிரிக்கும் படி இருந்தது உங்க‌ எதார்த்தமான‌ எழுத்து நடை,

///'நீ ஏதோ கேக் தான செய்றேன்னு சொன்ன?"...///// மூளைக்கு உதித்தது. ஆமால்ல, கேக் தான செஞ்சோம்.

////"அட இல்லங்க... இது எக்லெஸ் வெனிலா அவன்லஸ் குக்கீஸ். கேக் மெத்தடுல செய்ற குக்கீஸ். குக்கீஸ் மாதிரி சின்னதா ரவுண்ட், ரவுண்ட்டா செஞ்சா அவன்ல வச்சி எடுக்கணும். வேணும்னா இதையே அவன்ல வைச்சு எடுப்போமா?".///////

உங்க‌ சமாளிபிகேஷன் ரொம்ப‌ சூப்ப‌ர் போங்க‌,

ஆமாம் அக்கா நீங்க‌ செய்த‌ கேக் போட்டோ‍‍‍''''''''''' ஸாரி குக்கீஸ் போட்டோ போடல‌ அக்கா.............

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

கிறிஸ் உங்க காமெடியான 'சோகக்' கதைய படிச்சு ரொம்ப நாளைக்குப்பிறகு வயிறு குழுங்கன்னு சொல்வாங்களே அப்படி சிரிச்சேன் போங்க.....இன்னும் கூட என்னால் சிரிப்பை நிறுத்தமுடியலே!thanks கிறிஸ்.
//ரவை, பால், சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ், முட்டை, நெய் எல்லாம் போட்டு அடிச்சு, கிண்டி, ஒரு பதம் வந்ததும் (நாம என்ன தான் பரமபதம் பிடிச்சாலும் பதம் மட்டும் வரமாட்டேங்குது) இறக்கி பெரிய டிரேயில ஊத்தி ஆறவிட்டா வெண்ணிலா கேக் ரெடி. வெட்டி (எதை?) எடுத்து சாப்பிடலாம்.// நல்லா சொன்னீங்க போங்க ......

//அட இல்லங்க... இது எக்லெஸ் வெனிலா அவன்லஸ் குக்கீஸ். கேக் மெத்தடுல செய்ற குக்கீஸ். குக்கீஸ் மாதிரி சின்னதா ரவுண்ட், ரவுண்ட்டா செஞ்சா அவன்ல வச்சி எடுக்கணும். வேணும்னா இதையே அவன்ல வைச்சு எடுப்போமா?"// அறுமையான காமெடி கிளைமேக்ஸ்!

Mudiyala... trainla thaniya mobile paarthu sirikira ennai inga ullavanga vinodhama parka poraanga. Adhai vida ninga ennai vechu comedy pannirukinga 3:) aniyayam... en cake recipea cookies recipe aakinadhu. Hhaahaa.. aanaalum unga samarthiyathai naan paaraturen ;) kalakkunga chris. //mobile post

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சரித்திரத்தில் இடம் பிடிக்கும் சங்கதிகளை (நம்ம கதையை நம்ம பாராட்டலன்னா எப்படி) வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவுக்கு நன்றி.

உன்னை போல் பிறரை நேசி.

கலை ப்ரண்ட், கதையை விட கமெண்ட் கலக்கலா இருக்கு.. உங்க கமெண்ட்ட நான் ரொம்ப ரசிச்சேன்.
\\அவன் கண்ணாடி உடைஞ்சதுல கூட வருத்தமில்ல... புட்டு கருகிட்டதால ரொம்ப ஃபீலிங்கா??\\ பின்ன இருக்காதா, கருகி காலம்சென்ற புட்டோட சாம்பல, கண்ணீரோட வாஷ்பேசன்ல நான் தான கரைச்சேன். சிரிச்சி ரசித்ததுக்கு, கமெண்ட்டுக்கு நன்றி.

உன்னை போல் பிறரை நேசி.

இமாம்மா, நான் ரெசிபி குடுக்கனும்னா, இந்த ரெசிபி செய்யக்கூடாத முறைகள். அப்படின்னு வேண்ணா படம் போட்டு காண்பிக்கலாம்.\\தலைப்பு சூப்பர்\\ பாராட்டுக்கு நன்றி.

உன்னை போல் பிறரை நேசி.

\\உங்க‌ சமாளிபிகேஷன் ரொம்ப‌ சூப்ப‌ர் போங்க‌,

ஆமாம் அக்கா நீங்க‌ செய்த‌ கேக் போட்டோ‍‍‍''' ஸாரி குக்கீஸ் போட்டோ போடல‌ அக்கா....\\

சமாளிபிகேஷன்ல தாங்க வாழ்க்கையே ஓடுது.
ரெசிபி செய்யக்கூடாத முறைகள் அப்படின்னு தலைப்பு ஓபன் பண்ண சொல்லி அட்மின் அண்ணாவ கேக்கலாம்ன்னு இருக்கேன். அதுல நம்ம படம் 100 நாள் ஓடும்ன்னு நினைக்கிறேன். சுமி தங்கச்சி நன்றி. படிச்சி சிரிச்சதுக்கு.

உன்னை போல் பிறரை நேசி.

ரொம்ப தேங்க்ஸ்பா படிச்சி பாராட்டுனதுக்கு.
வயிறு குலுங்க சிரிச்சா, சிக்ஸ் பேக் வரும்ன்னு சொல்லுவாங்க ஆப்பிரிக்காவுல. அப்பிரிகாவுலையா? அருசுவைலையா? கொஞ்சம் கன்பீஸ்.

உன்னை போல் பிறரை நேசி.

நானும் கேக் செஞ்சி, ' சூப்பர்'ன்னு கமென்ட் போடத்தான் பிளான் பண்ணி இருந்தேன். அது குக்கீஸ்ஸா வந்திரிச்சி. அநியாயம்? இத நான் குக்கீஸ்ட்ட தான் கேக்கணும். ஊர் போறிங்களா? அப்ப புதுசா ஒரு பயணங்கள் கட்டுரை வரப்போகுது. பாராட்டுக்கு நன்றி வனி சிஸ்டர்.//பதில் போஸ்ட்.

உன்னை போல் பிறரை நேசி.

"என்னை போல் ஒருவன்." நானும் இப்படி தான் என்னென்னவோ(என்ன ரெசிபி செய்ய பிளான் பண்ணேன் நு கடைசியில் எனக்கே மறந்துடும் : )) முயற்சி செய்து காமெடியாக கதையை முடிப்பேன். என்ன செய்தாலும் சாப்பிட‌ வைத்து Experiment செய்ய தான் வீட்ல ஒரு எலி வச்சிருக்கோமே! : )

கோபமா இருந்தா வனி சிஸ் பதிவை பார்க்கணும். சோகமா இருந்தா க்றிஸ்மஸ் சிஸ் பதிவை பார்க்கணும். அழகு. : ) ஒரு வாரமாக தயூ பாப்பு சோகமா இருந்தது. உங்க கதை படித்ததும் எல்லாமே மறந்து போய்டுச்சி. நன்றி : ) உங்க‌ கதைகளைத் தொடர்ந்து எதிர்ப்பார்த்து கொண்டே இருப்பேன். நியாபகம் வச்சிக்கோங்க‌. என்னைய‌ தேட‌ வைக்காம‌ சீக்கிரம் சீக்கிரமா எழுதுங்க‌.

அன்புடன்
தயூ

நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!

என்னென்னவோ தொடங்கி எப்படியோ முடிக்கிற, லிஸ்ட்ல நெறைய பேர் இருக்காங்க.
\\ஒரு வாரமாக தயூ பாப்பு சோகமா இருந்தது. உங்க கதை படித்ததும் எல்லாமே மறந்து போய்டுச்சி. நன்றி\\ என்ன சோகம்? கதைய படிச்சி சோகம் மறந்ததுல எனக்கு சந்தோசம். கண்டிப்பா அடிக்கடி தர ட்ரை பண்ணுறேன். இதுவே போன பட்டிமன்றம் முன்னாடி தொடங்கினது. ஆனா இரண்டு நாள் முன்னாடி தான் முடிக்க முடிஞ்சது(நேரமின்மை). ரொம்ப நன்றிப்பா. படிச்சி சிரிச்சதுக்கு.

உன்னை போல் பிறரை நேசி.

//என்ன சோகம்?// ஹையர் ஸ்டடீஸ் பற்றி அதிக யோசனைகள், வேலை
பளு, உடல் ந‌ல பிரச்சனை என பல கவலைகளும், சண்டைகளும் என்னை சோகமாக்கிவிட்டன. : ( உங்களால‌ அதெல்லாம் மறந்து போய்டுச்சி. : )
நீங்க‌ எந்த‌ கிளாஸ்க்கு டீச் பண்ணுகிறீர்கள் சிஸ்?

தயூ

நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!

க்றிஸ்,

சோறும், சோறு சார்ந்த இடமும்... உங்க கதை(அனுபவம்) சான்ஸே இல்லைங்க, அட்டகாசம் ! :‍) :) ;) சிரிச்சி, சிரிச்சி (அதுவும் ஆபிஸ்ல உட்கார்ந்துட்டு யாருக்கும் தெரியக்கூடாதுன்னு அடக்கி, நமுட்டு சிரிப்பு சிரிக்கறது இன்னும் ஃபன்! ;) :‍‍)) ரசிச்சி படிச்சேன்.

//அவனுக்கு ஒன்றும் பெரிய காயமில்லை. சிறிது கண்ணாடிச் சிதறல் தான். ஆனால், என் ஆசை புட்டுத் தான் கரித்துண்டாகிவிட்டது.// ;‍)

அது சரி, அவன் கண்ணாடி நொறுங்கினதுகூட உங்களுக்கு பெரிசா இல்லை, உங்க புட்டு ஆசை நொறுங்கியதின் பக்கத்தில், இல்லை?! ;‍)

//நானும் ந..ம்பி செஞ்சேன். வாசனை எல்லாம் தூக்கல். டிரேயில ஊத்தி, ஆறவிட்டு பீஸ் போட கத்திய விட்டேன்.

ம்ஹும்... கேக் மேல கோடு கூட போட முடியலியே
// :‍‍‍) :D :D முடியலை, போங்க. மொத்தத்தில் சூப்ப்ப்பர்ர்!! :‍)

அன்புடன்
சுஸ்ரீ

தலைப்பும் சூப்பர் உள்ள‌ உள்ள‌ சொந்தக்கத‌ சோகக்கதையும் சூப்பர்...

தலிப்ப‌ பார்த்து எதாவது டிப்ஸ் இருக்கும்னு நானும் நம்பி... படிக்க‌ ஆரம்பிச்சேன்.ஆனா அது இப்படி சிரிச்சு ஓயலைப்பா..

கொசுவத்தி சுருள் பிடிச்சு கை மட்டும் வலிக்கல‌,மூக்கும் எரியுது(பின்ன‌ புகை தாங்க‌ வேணாமா?) அடுத்த‌ முறை பிளாஸ் பேக்குக்கு வேறபோட‌ சொல்லனும்.

ஹா ஜாங்கிரியை கைவிடல்ல‌ சொருகிக்கோங்க‌...

அப்பரசண்டீஸ் சும்மா சாப்பிடாம‌ கேக்கா, குக்கீஸான்னு கேள்விவேற‌ கேட்டுப்புட்டாங்களா...??

நாமதா சமாளிபிகேஷன்ல‌ கிங் இல்ல‌ இல்ல‌ குயின் ஆச்சே...

நானும் ஒரு முறை ஒரே முறை செய்தேன் வனியின் கேக்தான், அடிமட்டும் கொஞ்சம் கருப்பாகிடுச்சு,மற்றபடி பரவாயில்லை. ஃபோட்டோ எடுக்கலை அதனால் அதுபறி யாருக்கும் சொல்லலை.. தேங்ஸ்கிரிஸ் சிரிக்க‌ வச்சதுக்கு... உங்க‌ பெயர் என்ன‌?

என்னால முடியல தாயி... என் சமையலை பற்றி ஊருக்குள்ள நிறைய பேட் இம்ப்ரஷனை கிளப்பி விடுறீங்களே ;) நேற்று சென்னை டு பெங்களூர் பயணம். அதை பற்றி எல்லாம் எழுத ஒன்னுமில்லைங்க. எந்த கேக்? எக்லஸ் வெனிலா கேக் (குக்கர் முறை)?? அந்த பக்கம் வாங்க, என்ன சொதப்புனீங்கன்னு பார்த்து சரி பண்ணுவோம் நிச்சயமா. உங்களை போல என் குறிப்பை சொதப்புறவங்களுக்காகவே நான் தனியா கேக் ஃபார்முலா ஒன்னு ப்ளாக்ல எழுதனும் ;) இன்னைக்கு தானே வந்திருக்கேன், கொஞ்சம் ரெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு வரேன் எழுத. நிச்சயம் என்ன என்ன தப்பு நடக்கும், என்ன நடந்தா என்ன மாதிரி ரிசல்ட் வரும்னு தெளிவா ஒரு பதிவு போடுறேன் ப்ளாக்ல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எக்லஸ் வெனிலா கேக் (குக்கர் முறை) அதுதான் செஞ்சேன். தயிர் போட்டதால கேக் புளிக்குமொன்னு, என் பகுத்தறிவு யோசிச்சிச்சா அதான் தண்ணி அதிகம் விட்டுட்டேன். நாம குக்கீஸ் செய்றதே பெரிய விஷயம் தான். கல்யாணம் அப்புறம் தான் சமையலே ஸ்டார்ட் பண்ணி இருக்கேன்.

அடுத்த முறை, தயிர் கம்மி பண்ணி, வித் எக் போட்டு தண்ணி ஊத்தாம செஞ்சேன் சூப்பர் கேக் வந்தது. டோன்ட் வொரி வனி சிஸ், கேக் செஞ்சி சாப்டுடேன். ரொம்ப நன்றி,நன்றி.

உன்னை போல் பிறரை நேசி.

படிச்சி சிரிச்சதுக்கு தேங்க்ஸ்பா. ஏற்கனவே நம்ம சமையலுக்கு வீட்ல நக்கல். இன்னைக்கு புட்டு செய்ய போறேன்னு சொல்லி, கரிதுண்ட வச்சா அவ்ளோதான். ஆனாலும் நம்ம சமையல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.

உன்னை போல் பிறரை நேசி.

அடப்பாவி!!! இதை கதையில் எங்கையுமே சொல்லவே இல்லையே!! தண்ணிய கொண்டு போய் கேக்ல விட்டுட்டு, நியாயமான்னு என்னையே கேள்வி வேற?? மண்டை எங்க?? நங் நங் நங்... உங்களுக்கு தான் ;) ஹைய்யா நான் டீச்சரம்மா தலையிலயே கொட்டி வெச்சுட்டேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

\\தலிப்ப‌ பார்த்து எதாவது டிப்ஸ் இருக்கும்னு நானும் நம்பி... படிக்க‌ ஆரம்பிச்சேன்\\

நம்ம சமையலில் இருந்து டிப்ஸ்ஸா. போங்கப்பு போய் பொழப்ப பாருங்க... கொசுவர்த்திய இனி லிக்குட்மேட்டா மாத்திருவோம். புகை கம்மில்ல? உங்களோட சிம்பிள் ஜாங்கிரி ஏற்கனவே என்னோட விருப்ப பட்டியலில் இருக்கு. நெஸ்ட் ட்ரை அதுதான்.
\\உங்க‌ பெயர் என்ன‌?\\ என்ன 'டபக்'குன்னு இப்படி கேட்டு புட்டிங்க சிஸ்டர். கரெக்டாதான போட்டுரிக்கேன். எனக்கே டவுட்டு வருது. கிறிஸ்மஸ் or கிறிஸ்துமஸ் (christmas) or க்ரிஷ் or கிரிஷ் or கிறிஸ் or க்றிஸ் or கிரிஸ் or ..... (ஹோ.. இதுக்கு தான் இவ்ளோ குழப்பமா? இன்னும் வருதே) இருந்தாலும் எல்லாம் ஓகே தான்.

உன்னை போல் பிறரை நேசி.

//வயிறு குலுங்க சிரிச்சா, சிக்ஸ் பேக் வரும்ன்னு சொல்லுவாங்க ஆப்பிரிக்காவுல. அப்பிரிகாவுலையா? அருசுவைலையா? கொஞ்சம் கன்பீஸ்//

நானும் குழம்பிட்டேன்,இனிமேல் உங்க கதைகளைப் படித்து வயிறு குழுங்காம சிரிக்க முயற்சிக்கிறேன்.

//உங்களோட சிம்பிள் ஜாங்கிரி ஏற்கனவே என்னோட விருப்ப பட்டியலில் இருக்கு. நெஸ்ட் ட்ரை அதுதான்.// - ரேணுகா.. ஜாக்கிரதை ;) ஜாங்கிரி மாவில் முறுக்கு சுடுவது எப்படின்னு அடுத்த கதை ஆகிடப்போகுது.

//வயிறு குலுங்க சிரிச்சா, சிக்ஸ் பேக் வரும்ன்னு சொல்லுவாங்க ஆப்பிரிக்காவுல. அப்பிரிகாவுலையா? அருசுவைலையா? கொஞ்சம் கன்பீஸ்// - ஹஹஹா. முடியல க்றிஸ் நிஜமாவே... உங்க கதையோடு சேர்த்து பின்னாடி வால் பிடிக்கிற கமண்ட்ஸையும் படிக்கிறது வழக்கம்... எதை படிச்சாலும் சிரிப்பு வருதே... அதுக்கு தான். :)

உங்க மிஸ்டர் ப்ரேவ்க்கு என் வாழ்த்துக்கள் :) இவ்வளவுக்கப்பறமும் அடுப்படி வரை வந்திருக்காரே!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்லா சிரிக்க‌ வைக்கறீங்க‌.
என்னமா எழுதியிருக்கீங்க‌.
எதை பாராட்டறது.எதை விடுறதுனே தெரியலை
மொத்தத்தில் காமெடி பஜார் போன‌ மாதிரி இருக்கு போங்க‌.

இன்றைக்கு காலையிலிருந்தே மனசு ரொம்ப டல்லாவே இருந்தது, வேலைப் பளு வேறு சேர்ந்து கொண்டது. உடலும், மனமும் சோர்ந்து போய் மாலையில் அறுசுவையை திறந்து உங்க நகைச்சுவையான கதையைப் படித்ததில் மனம் ஏனோ லகுவாகி விட்டது -))

ஆனா கூட உங்க புட்டு மேட்டர் இருக்கே புட்டு புட்டுன்னு சிரிச்சேன் :-)))

முதல் கேக் அனுபவம் எனக்கும் உண்டு :-)
ஏழாம் வகுப்பு படிக்கையில் தான் நான் தங்கையுடன் சேர்ந்து முதன் முதலில் கப் கேக் செய்தேன்.செய்யும் முன்னே மாடி வீட்டு ஆன்டியையெல்லாம் கேக் சாப்பிட அழைத்தாயிற்று. எல்லோரும் கேக்கிற்க்காக ஆவலுடன் வெயிட்டிங். இறுதியில் அவனிலிருந்து டிரேயை எடுத்தால் .. அட கேக் பார்க்க நன்றாகவே வந்திருந்தது. அதீத ஆவலுடன் சுவைத்தால் ரப்பர் போன்ற பதம். மாடி வீட்டு ஆன்டி வேற கேக் செய்வதாக அல்லவா சொன்னீர்கள், "ரப்பர் கேக்" என்று சொல்லவே இல்ல என்க; அவர்கள் பையனோ ஒரு படி மேலே போய் "இட்லி" சூப்பர் என்றானே பார்க்கலாம். அதிலிருந்து எங்களைப் பார்க்கும் போதெல்லாம் என்னடி "ரப்பர் கேக்" அடுத்து எப்போ பண்ணப் போற என்று கேட்ப்பாங்க. ஆன்டி அப்புறமா பக்கத்து தெருவில் வீடு கட்டி போயிட்டாங்க.என் திருமணம் நிச்சயம் ஆன விஷயத்த சொல்ல கேக் செய்து ஆன்டி வீட்டிற்க்கு எடுத்துட்டு போனேன், நெஜமாவே தேறிட்ட !!! என்று பாராட்டினாங்க.

வேறென்ன சொல்ல
"சமையலறை ஓரு ஆய்வுக் கூடம்
உறவுகள் பரிசோதனைக்குட் படும் எலிகள்"

அவ்வளவுதான் :-))

பாராட்டுக்கு ரொம்ப நன்றி நிகிலா. \\காமெடி பஜார் போன‌ மாதிரி இருக்கு\\ அப்படியா, நன்றி, நன்றி.

உன்னை போல் பிறரை நேசி.

பாராட்டுக்கு ரொம்ப நன்றி வாணி சிஸ்டர். அட, ரப்பர் கேக், இது நல்லா இருக்கே. \\சமையலறை ஓரு ஆய்வுக் கூடம்
உறவுகள் பரிசோதனைக்குட் படும் எலிகள்"\\ உங்க தத்துவம் சூப்பர்... சூப்பர். இத நான் என் சமையலறை கதவுல எழுதி வைக்கலாம்ன்னு இருக்கேன். நன்றி..நன்றி.

உன்னை போல் பிறரை நேசி.

sema story.ithu mathiri na panna en husband ne kitchen pakame pogathe naane kitchena pathukurenu soliduvanga

அட செம காமெடியா எழுதறிங்க. அந்த நிகழ்ச்சி பேரு 'சாப்பிடவாங்க' சரியாசொல்லிட்டேனா ,நிகழ்ச்சி மறந்துடுச்சு,ரெசிபி மட்டும் நியாபகம் இருக்கா

Be simple be sample

கிரிஸ்,
உங்க‌ கதை சிரிப்பு கலந்து அருமை,