ஃப்ரைடு ஸ்பைசி ஸரீமீ

தேதி: July 29, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (4 votes)

 

ஸரீமீ (Surimi Crab Meat) - 500 கிராம்
அரிசி மாவு - அரை கோப்பை
கோதுமை மாவு - கால் கோப்பை
மீன் மசாலா - ஒரு தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய்ப் பொடி - ஒரு தேக்கரண்டி
சீரகப் பொடி - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
எள்ளு - 2 மேசைக்கரண்டி
கேசரிப் பொடி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
அரிசி மாவுடன் கோதுமை மாவு, மீன் மசாலா, மிளகாய்ப் பொடி, சீரகப் பொடி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் கேசரிப் பொடி கலந்து தடிப்பாகக் (திக்காக) கரைக்கவும்.
சீரகத்தை உள்ளங்கையில் வைத்துக் கசக்கி தூவவும். எள்ளையும் தூவிக் கலக்கவும்.
ஸரீமீயை டயமண்ட் வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
மாவுக் கரைசலில் ஒரு பிடி அளவு வெட்டிய ஸரீமீ துண்டுகளைப் போட்டு சில நிமிடங்கள் வைத்தால் சுவையை உறிஞ்சிக் கொள்ளும்.
பிறகு எண்ணெயைக் காயவிட்டு துண்டுகள் பிரியாமல் எடுத்துப் போட்டு, ஒரு பக்கம் பொரிந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறமும் பொன்னிறமானதும் இறக்கி கிச்சன் பேப்பரில் வடியவிடவும்.
சுவையான ஃப்ரைடு ஸ்பைசி ஸரீமீ (Fried Spicy Surimi) தயார். சூடாகப் பரிமாறவும். மெல்லிதாக இனிப்பும், காரமும் கலந்து வித்தியாசமான சுவையோடு இருக்கும். இதற்குத் தொட்டுக் கொள்ள எதுவுமே தேவையில்லை.

எண்ணெய் அதிகம் சூடாகி விடாமல் பார்த்துக் கொள்ளவும். தேவைக்கு மேல் பொரிய விட்டால் வெடிக்கும். எண்ணெயையும் உறிஞ்சிக் கொள்ளும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஸரீமீ வறுவல் பார்த்ததும் சாப்பிடனும் போல ஆசையத் தூண்டுது..டயமண்ட் ஷேப் ல வெட்டி வைச்சுருக்கும் ஸரீமீயைப் பார்த்தா ஸ்வீட் போல இருக்கு..

கலை

நன்றி கலை. இது எப்போதோ சமைத்து எழுதி வைத்த குறிப்பு. படம் எங்கே சேமித்தேன் என்று தேட நேரம் கிடைக்காமல் அப்படியே விட்டிருந்தேன். இப்போதுதான் அனுப்ப முடிந்தது.

எங்கள் சின்னவர் இது போல ஒன்றை எங்கோ சாப்பிட்டிருக்கிறார். அவர் விபரித்ததிலிருந்து என்னென்ன சேர்த்து இருப்பார்கள் என்று ஊகித்து சமைத்துக் கொடுத்தேன். சுவைத்துப் பார்த்துத் திருத்தங்கள் சொன்னார். மூன்றாம் முறை சமைத்த பொழுது எள்ளும் சேர்த்தேன். எல்லோருக்கும் பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடிக்கக் கூடும் என்னும் நம்பிக்கையில் அறுசுவைக்கு அனுப்பினேன். :-))

‍- இமா க்றிஸ்

ஹை நான் Surumi ல் Corn Mayo Eggசேர்த்து சாலட் தான் செய்தேன். இது புது முயற்சியா இருக்கே இமா. அருமை

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

சாலட் இங்க பெருசா விருப்பமா போகல. அதனாலயே வாங்காம விட்டாச்சு. இது எங்கேயோ சின்னவர் சாப்பிட்டிருக்கார். அது இங்க வரைக்கும் வந்தாச்சு.

சாப்பிட ஆரம்பித்தால் அப்படியே தொடர்ந்து சாப்பிடலாம். :-) சுவை காம்பினேஷன் அப்படி. உள்ளே மெத்தென்று இருப்பதுவும் பிடித்திருப்பதற்கு ஒரு காரணம்.

‍- இமா க்றிஸ்

ஹை நான் Surumi ல் Corn Mayo Eggசேர்த்து சாலட் தான் செய்தேன். இது புது முயற்சியா இருக்கே இமா. அருமை ஹயோ ரெண்டு முறை பதிவாயிடுச்சி தூக்ககலக்கத்தில்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

surumi பார்க்க பஜ்ஜி போல இருக்கு,
Surumi sticks உபயோகித்து Sushi தான் சாப்பிட்டுள்ளேன். என் கணவர் விருப்பபடமாட்டார்,அதனால வாங்குறதில்லை. ஒரு முறை இப்படி செய்து கொடுத்துப் பார்க்கிறேன்.
படங்களும், பிரசன்டேஷனும் சூப்பர்.

ஸரீமீ அவ்வளவா வாங்கி சமைச்சது இல்லை இமா. அது என்னவோ ஆரம்பத்தில் இருந்தே, ரொம்ப வரவேற்பு இல்லை இவரிடம். ஆக வெளியில் போனால் சாப்பிடுவதோடு சரி. இப்போ உங்க குறிப்பு பார்த்ததும் இப்படி பொரித்து கொடுத்தால், ஒருவேளை எல்லாருக்கும் பிடிக்குமோ என்று தோன்றுகிறது, முயற்சித்து பார்க்க வேண்டும். படங்கள் அத்தனையும் பளிச், ப்ரசண்டேஷனும் அருமை!

அன்புடன்
சுஸ்ரீ

உங்க குறிப்பை பார்த்து கூகில் அண்ணாச்சிகிட்ட கேட்டுத்தான் ஸரீமீ அப்படின்னா என்னன்னு தெரிஞ்சுகிட்டு வந்தேன் ;) தகவலுக்கு நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பரா இருக்கு அக்கா. நான் எங்க போவேன் அக்கா ட்ரை பண்ண.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அங்கு நிச்சயம் கிடைக்கும். எங்கயாவது காகில்ஸ்ல ட்ரை பண்ணிப் பாருங்க. நானும் தேடிப் பார்க்கிறேன். எங்கே கிடைக்கும் என்று கண்டுபிடித்ததும் சொல்கிறேன்.

‍- இமா க்றிஸ்

இமா, இன்றைக்கு ஈவினிங் ஸ்நாக் இதுதான், Surimi ஃபிங்கர்ஸ் உபயோகித்து செய்தேன்,கலர் மட்டும் சேர்க்கல. எங்க எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சிருந்து. நன்றி

Surimi ல் நான் வறை தான் செய்வேன் எப்போதும் சுவையாக இருக்கும
இதை செய்து பார்த்திட்டு சொல்கிறேன் .,,