தேதி: July 29, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மைதா மாவு - 250 கி்ராம்
மார்ஜரின் (Margarine) - 250 கி்ராம்
சர்க்கரை - 250 கி்ராம்
முட்டை - ஒன்று
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி
நியூட்டெல்லா (Nutella) - 4 மேசைக்கரண்டி
பால் - அரை கப்
தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் கலந்து சலித்து வைக்கவும்.

முதலில் மார்ஜரினுடன் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.

முட்டையைத் தனியாக அடித்து, மார்ஜரினுடன் சேர்த்து மீண்டும் அடிக்கவும்.

அதனுடன் நியூட்டெல்லாவைச் சேர்த்து அடிக்கவும்.

பிறகு பால் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.

இந்தக் கலவையுடன் மைதா மாவைச் சேர்த்து, மரக்கரண்டியால் கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலக்கவும்.

மைக்ரோவேவ் பவுலில் பட்டர் தடவி, சிறிது மாவு தூவி கல்ந்து வைத்துள்ள கலவையை ஊற்றவும்.

பிறகு பவுலை மைக்ரோவேவில் வைத்து ஹையில் 20 / 25 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

டூத் பிக்கை கேக்கின் உள்ளே விட்டுப் பார்த்து, ஒட்டாமல் வரும் போது எடுத்து, ஒரு தட்டில் மாற்றி ஆறவிட்டு துண்டுகள் போடவும்.

டேஸ்டி நியூட்டெல்லா கேக் ரெடி. விரும்பினால் அதன் மீது நியூட்டெல்லா தடவி அலங்கரித்துப் பரிமாறவும்.

கேக் செய்யும் அடிப்படை முறையை அறுசுவையிலிருந்து கற்றுக் கொண்டு, நான் முயற்சி செய்து பார்த்த கேக் இது.
Comments
நித்யா
கேக் சூப்பர்...
கலை
nithi
கேக் பார்க்க சூப்பரா இருக்கு. நல்ல முயற்சி. ஆனா நான் கேக் செஞ்சா எனக்கு ஹார்டா வருது. ஸாஃப்டா வர மாட்டுது. எப்டி பண்ணனும்னு கத்து குடுங்க நித்தி.
எல்லாம் சில காலம்.....
நித்யா
கேக் மைக்ரோவேவில் நல்லா வந்திருக்கு நித்யா, இனி வித விதமா கேக் ரெஸிப்பிகளா செய்து அசத்திடுங்க.சூப்பர்.
பாலநாயகி,
நான் பிகினர்ஸ் க்கு என்று ஸ்டெப் பை ஸ்டெப்பா Sponge கேக் ரெசிப்பி கொடுத்துள்ளேன். விரும்பினால் பார்த்து டிரை பண்ணுங்க.
http://www.arusuvai.com/tamil/node/28885
இல்லைன்னா நீங்க எப்படி பண்ணினீங்கன்னு குறிப்பிட்டால் தவறை திருத்திக் கொள்ளலாம். உங்களுக்கு உபயோகப் பட்டால் மகிழ்ச்சி.
நன்றி
நியூட்டெல்லா கேக்
மைக்ரோவேவ் அவனிலே நியூட்டெல்லா கேக் சூப்பரா வந்திருக்கு நித்யா. வீட்டில நியூட்டெல்லாக்கு ஒரு பெரிய ஃபேன் இருக்காங்க, ஒரு நாள் இப்படி கேக் செய்து குஷிப்படுத்திட வேண்டியதுதான்! ;)
அன்புடன்
சுஸ்ரீ
நித்யா
வாவ்... மைக்ரோவேவில் சூப்பர் கேக். என்ன மைக்ரோவேவ் வெச்சிருக்கீங்க ;) சொல்லுங்க பயன்படும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நியூட்டெல்லா கேக்
குறிப்பு வெளியிட்ட அட்மினுக்கு நன்றி.
கலை கருத்துக்கு நன்றி.
பாலனாயகி கருத்துக்கு நன்றி. நானே இப்போ தான் பா கத்துகிட்டு இருக்கேன். வானி சொல்ரேன் சொல்ல்ராங்க அவங்கலிடம் கேளுங்க பா.
நன்றி வானி. முயர்சிப்போம்.
சூஸ்ரீ நன்றி. செய்து பாருங்கள்.
நன்றி வனி.நான் solstar model. மைக்ரோவேவ் வைத்துள்ளேன்.
நித்யா
சூப்பரோ சூப்பர் நித்யா. :)
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா