senbagababu akka

akka unga salwar cutting full ah kathukiten.please upload blouse cutting akka

தயவுசெய்து தனி நபர்களின் பெயரிட்டு உதவி கோரும் இழைகளைத் தொடங்காதீர்கள். ஒருவர் இமா அக்கா என்று ஆரம்பித்தால், செண்பகா அக்கா, வனி அக்கா என்று வரிசையாக தலைப்புகளில் இழைகள் தொடங்கப்படுவது நல்லதல்ல. செண்பகா அக்கா இதைப் பார்த்து பதிலிடுவதற்கு வாய்ப்புகள் குறைவு. நீங்கள் அவரை நோக்கி மட்டும் உதவி கேட்டுள்ளதால் மற்றவர்கள் இங்கே வந்து பதில் கொடுக்கப் போவதில்லை. எனவே இந்த இழை பதிவுகள் இல்லாமல் வீணாகப் போகின்றது. இதே உதவியை பொதுவாகக் கேட்டிருந்தால் வேறு யாரேனும் ஒருவர் உதவுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே தனிநபர் பெயரிட்டு மன்ற இழைகளைத் தொடங்க வேண்டாம்.

கருத்து தெரிவிக்க அல்லது பதிலளி மூலம் தனிநபரை நோக்கி உதவி கேட்பது வேறு விதம். அதில் தவறு இல்லை. ஒரு டிஸ்கஷன் நடந்து கொண்டிருக்கும்போது ஒருவருக்காக பதிவு கொடுப்பது, ஒருவரை நோக்கி கேள்வி எழுப்புவது என்பது ஏற்றுக்கொள்ளப்படும் விசயம். ஒரு மன்ற இழையையே தனிநபருக்காக தொடங்குவது நல்லதல்ல.

மன்றம் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்க அனைவரும் மன்ற விதிகளை கடைபிடிக்க வேண்டும். விதிமீறல்கள் அவ்வபோது நடந்து கொண்டிருக்கின்றன என்பது வருத்தம் அளிக்கும் விசயம். சம்பந்தப்பட்டவர்களுக்கு தவறுகளைச் சுட்டிக் காட்டி மின்னஞ்சல் அனுப்பிக்கொண்டு இருக்கின்றோம். ஏற்கனவே நிறைய பேசப்பட்ட விசயங்களுக்கு மீண்டும் மீண்டும் இழைகள் தொடங்குவது, எல்லாவற்றிற்கும் ஒரு புதிய இழை தொடங்குவது, சாட்டிங்போல் இரண்டு நபர்களுக்குள்ளே உரையாடல் செய்வது, நீங்கள் நலமா, நான் நலம் பதிவுகள் என்று மன்றத்தின் பயன்பாட்டை பாதிக்குமாறு நடக்கும் விசயங்கள் கவலைக்குரியது. இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்று உறுப்பினர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

மேலும் சில பதிவுகள்