"கண்ணீர்தான் ஈடாகுமா"

"நெஞ்சு பொறுக்குதில்லையே..."

என்ன‌ சொல்ல‌? எப்படி சொல்ல‌? எப்படி ஆரம்பித்து சொல்றதுன்னே தெரியலைங்க‌. ஒன்றையொன்று கட்டிபிடித்து என்ன‌ நடக்குதுன்னு உணரும் முன்னமே வெந்து கருகி கரிக்கட்டைகளான குழந்தைகள். மலர்ந்து மணம் வீச காத்திருந்தவைகள் வெம்பி புதைந்துவிட்டன‌. ஆம் கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அது சரிதானா?

யாரை குற்றம் சொல்ல? பள்ளியின் அசவுகரியங்களை கவனியாத பெற்றோரையா? அந்த பள்ளியை நடத்திய நிறுவனரையா? பிள்ளைகளை ரூமில் ஆடுமாடுபோல அடைத்து வெளிப்புறம் தாழ் போட்டுவிட்டு ஆடிவெள்ளிக்காக கோயிலுக்கு சென்ற ஆசிரியைகள் மீதா? இதற்கு அனுமதி கொடுத்து வழியனுப்பி வைத்த தலைமை ஆசிரியைமீதா? கட்டிட பொறியாளர் மீதா? இல்லை அந்த வடிவமைப்பிற்கு அனுமதி கொடுத்த அதிகாரிமீதா? பள்ளி நடவடிக்கைகளை சரிவர கவனியாத சி.இ.ஓ. , போன்ற அதிகாரிகள் மீதா? சமையல் செய்ய பற்றவைத்த நெருப்பு எங்கேவிழுதுன்னு கவனமில்லாத சமையல்கூட ஆசிரியைமீதா? பிஞ்சுகள் அலரும் சத்தம் கேட்டும் காப்பாற்ற செல்லாத பல மனிதாபிமானிகள் மீதா?

தீர்ப்பில் நிறுவனருக்கு ஆயுள், மேலும் சிலருக்கு 5 வருடம்,பொறியாளருக்கு 2 வருடம், 52 லட்சம் அபராதம் இது சரிதானா? இது ஷெசன்ஸ் கோர்ட் கொடுத்தது, இதனை மேல்முறையீடு செய்து வேறு தீர்ப்பு வரவும் வாய்ப்பிருக்கு. அப்படியிருக்க இவங்க இந்த 10 வருடங்கள் எதற்காக இழுத்தார்கள்? ஒரு வழக்கிற்கு மாறுபட்ட இரண்டு தீர்ப்பு வரும்னா, எதுக்கு நீதிமன்றங்கள்? தனக்குத்தானே அனைத்து மனிதனும் நீதிபதியாகிடலாமே...!
ஒரு பெண்பிள்ளை கதறுதுங்க எனக்கு கை செயல்படாம போனதுக்கு இந்த மிஸ்தா காரணம், அவங்கள வெளில விட்டுட்டாங்கன்னு. அதுக்கு யாருங்க பதில் சொல்வது?

சுப்ரீம் கோர்ட் பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு பணம் கொடுக்க சொல்லி ஆணையிட்டது. அதனை மறுத்து மேல்முறைஈடு செய்தது நம்ம மாநில அரசு.
ஏன் அரசு கஜானாவில் பணமில்லையா? அனுசரித்து பயணம் செய்யக்கூடிய சாலையை சரிசெய்ய பல கோடி ரூபாயில் திட்டம்...
அன்னதான‌மென்ற பெயரில் அனைவரையும் சோம்பேறியாக்கி நெய்சோறு சாப்பிடவைக்கும் திட்டத்திற்கு பலகோடிகளில் பணம் செலவழிக்கப்படும்.
மேலும் கிரிக்கெட்டில் தோற்ற அணிக்குகூட கோடிகளில் பரிசுன்னு ஒருபுறம் ஆடம்பர மக்கள்...
ஆனால் அந்த பிஞ்சுகள் இறந்த அன்று ஈமச்சடங்கு செய்ய தோளில் குழந்தையுடனும் கைய்யில் கடப்பாரையுடனும் இருட்டில் சென்ற பெற்றோருக்கு கொடுக்க பணமில்லை. வெட்க்கக்கேடா இல்லை நமக்கு. ச்சை... நம்மகு இந்தநிலை வந்தாலும் அரசு இதையேதானே செய்யும்??
எங்கு கொட்டுவதுன்னு தெரியாமல் புகைந்ததை இங்கே வ‌ந்து இறக்கிட்டேன். மகாமக குளத்தில் நீராடினால் பாவங்கள் ஓடுடுமாம், அந்த மண்ணில் பிறந்தது தவிர என்ன பாவம்தான் செய்தார்கள் அந்த பிஞ்சுகள்?

5
Average: 4.8 (4 votes)

Comments

நியாயமான கேள்விகள் . ஆயிரம் ஓட்டைகள் அதிலும் அந்த 5வருடம் கூட அனுபவிப்பார்களான்னு சந்தேகம்தான்.என்ன சொல்லறது

Be simple be sample

94 பச்சிளம் குழந்தைகள் இறந்ததுக்கு அதிக பட்சம் ஒரே ஒருவருக்கு 5 வருட தண்டனை தானா? மனித உயிர்களின் மதிப்பே இவ்வளவுதானா? ஏன் எல்லாரும் வெட்டவெளி கொண்ட அரசு பள்ளிய மறந்தோம்? பெற்றோரின் வரட்டு கௌரவமா? பெற்றோரின் அதீத ஆசையா?

எனக்கு எல்லா கோபமும் மீடியா மேலதான் வருது. எக்செப்சன்ன மட்டும் தான் எலாபோரெட் பண்ணி காண்பிக்குது. பாடல் திறமையா, நடன திறமையா சிலருக்குதான் இருக்கும் ஆனா மீடியா அதை ஊதி, ஊதி பெரிசா காண்பிக்கும். இந்த திறமை இல்லாத குழந்தை சமுகத்தில் மதிப்பளிக்க பட மாட்டாது அப்படிங்கிற பிம்பத்த பெற்றோருக்கு காட்டுது. அவங்களும் எந்த வசதியும் இல்லாத, இந்த பிம்பத்த பாசிடிவா காட்டும் பள்ளில போய் குழந்தைகள அடமானம் வைக்கிறாங்க.

கிராமத்துல ஊர் கோட்டானா தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்டு இருக்கிறத வச்சி வாழ்ந்தவங்கள எல்லாம், இப்ப நகரத்துல உலகத்தோட போட்டி போட சொல்லி, நமக்கு சம்பந்தமே இல்லாத வாழ்க்கை முறையை புகுத்தி, தைரியமா வாழவும் முடியாம, அத விட்டு கீழ இறங்கி தன்னம்பிக்கையோட போங்கடா நீங்களும் உங்க வாழ்க்கை முறையும்ன்னு தொடரவும் முடியாம..... பெற்றோரே முதல்ல வாழ்க்கைனா என்னன்னு நீங்க படிங்க. குழந்தைக்கு கத்துகொடுங்க, ஓடுற உலகத்துல, அடுத்தவங்க ஆசைக்காக ஓடாதிங்க, குழந்தைகள ஓட விடாதிங்க.

உன்னை போல் பிறரை நேசி.

கடவுளே,
நீயே இதற்கு ஒரு முடிவு கொடு....ஆயிரம் தண்டனைகள் கொடுத்தாலும் போன‌ உயிர் போனது தானே....

குழந்தைகளை இழந்த‌ பெற்றோரின் வலியை நீதிபதி உணரவில்லையோ......இல்லை மனிதம் இறந்துக் கொண்டு இருக்கிறது..கை கருகிய‌ அந்த‌ பெண் பிள்ளையின் எதிர்க்கால்த்திற்கு யார் பதில் சொல்லுவார்கள்...

ஆடு மாடுகளை அடைப்பது போல‌ அடைத்துவிட்டு தீயில் கருக‌ செய்த‌ உங்களையும் அதே போல‌ தீயில் கருக‌ செய்து நாங்களும் அபராதமும் 52 லட்சம் பணம் தருகிறோம்...வாங்கி கொள்ளுகிர்க‌ளா?

பிஞ்சு உடம்பு எப்படியெல்லாம் துடித்து இருக்கும்..இப்பொழுது நினைத்தாலும் தண்ணீர் கூட‌ குடிக்க‌ முடியவில்லை.....

அந்த‌ பெற்றோர்க்கு நல்ல‌ நியாயம் கிடைக்க‌ நாம் அனைவரும் ப்ராத்திப்போம்

Anbudan,
Viji

பத்து மாதங்கள் தன் உயிராக‌ சுமந்து பெற்ற குழந்தையை தீயில் இழந்து,
பத்து வருடங்கள் கண்ணீரில் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு நீதி கிடைத்ததா? வருத்தமேயல்லவா மிஞ்சியது !

"Patience is the most beautiful prayer !!!"

ராஜி இதை படித்து மனம்தான் கனமாக உள்ளது. கண்கள் கலங்குகிறது. அந்த சமயத்தில் அந்த பிள்ளைகள் எப்படி துடித்திருப்பார்கள். அந்த பிள்ளைகளின் உடலை பார்த்து எப்படி பெற்றோர் கதறியிருப்பாங்க. பல வருடங்கள் கழித்து தீர்ப்பு. வெட்க கேடு. அந்த பிள்ளைகளை புதைத்த இடத்தில் பெரிய மரங்களே முளைத்திருக்கும். எத்தனை வருடங்கள் ஆனாலும் அந்த பெற்றோருக்கு தன் பிள்ளைகளுக்கு நடந்த கொடுமைகள் மட்டும் மனதை விட்டு நீங்காது. தீர்ப்பாம் தீர்ப்பு இந்த வெட்க கெட்ட உலகில் வாழ்வதற்கு மிகவும் வேதனையாகவும் பயமாகவும் உள்ளது. இப்பொழுதுள்ள சூழலில் எது எப்படி நடக்கும் என்றே தெரியவில்லை. எனக்கு தெரிந்து திரும்பவும் ஒரு ஹட்லர் ஆட்சி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் இது தான் சரியாக இருக்கும் இப்பொழுதுள்ள நிலைமையில். இந்த துக்கத்தை எத்தனை வருடங்களானாலும் யாராலும் மறக்க முடியாது.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

Enga ellarum adhu thapu edhu thapunu solrom enayaum serthu dhan solren edhukaga naama enna panomnu ninachipatha onumey ila makkal elarum nalla gavanikanum ellarum serndhu seyal pattal dhan endha mari vishayathai thadukalam. Problem pathi pesanumna inum niraya iruku Ella thapugalayum police aala matumey thati ketka mudiadhu makkal ellarum thati keta dhan mudium verum comment podradhoda nama edha stop panida kudadhu enayum serthu dhan solren.
Regards
Mani

பதினான்கு வருடங்கள் ஓடி விட்டன .