பருப்பு தோசை

தேதி: July 31, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பச்சரிசி - ஒரு கப்
இட்லி அரிசி - அரை கப்
கடலைப்பருப்பு - ஒரு கப்
துவரம் பருப்பு - கால் கப்
பாசிப்பருப்பு - கால் கப்
உளுந்து - ஒரு மேசைக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
சோம்பு - ஒரு மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
பூண்டு - 2 பற்கள்
சீரகம் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய்
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி


 

அரிசி மற்றும் பருப்பு வகைகளை (தனித்தனியாக) 2 மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்து மற்றும் வெந்தயத்தையும் ஊற வைக்கவும். ஊறிய பருப்புடன் காய்ந்த மிளகாய், சோம்பு, பூண்டு, சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் அரிசியை நன்றாக அரைத்துச் சேர்க்கவும்.
பிறகு உளுந்து மற்றும் வெந்தயத்தையும் அரைத்துச் சேர்க்கவும். அத்துடன் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.
தோசை கல்லைச் சூடாக்கி, எண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள மாவை எடுத்து மெல்லிய தோசையாக (ரவா தோசை போல) ஊற்றவும். சிவந்ததும் திருப்பி போட்டு மறுபுறமும் சிவக்க வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான பருப்பு தோசை தயார். தேங்காய் சட்னி அல்லது சர்க்கரையுடன் சூடாகப் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நாங்கள் இப்படி செய்வதை அடை தோசை / கார தோசை என்போம். சுவையான குறிப்பு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு நித்யா,

வெந்தயம் சேர்த்து செய்திருப்பது நன்றாக இருக்கு.

நானும் கிட்டத்தட்ட இதே போல, சில வித்தியாசங்களுடன் படம் எடுத்து வச்சிருக்கேன். அனுப்புகிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

தோசை அருமை நித்யா. மாவை புளிக்க வைக்க வேண்டாமா?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

இந்த வகை தோசைக்கு மாவு அரைச்சதும் செய்யனும், புளிக்க கூடாது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பு வெளியிட்ட டீமிற்க்கு நன்றி.

கருத்துக்கு தெரிவித்த தோழிகளுக்கு நன்றி.

சீதா அம்மா சீக்கிரம் அனுபுங்க அந்த முரையில்லும் இனி செய்திடலாம்.

உமா வனி சொல்வது போல புளிக்கவைக்க தேவை இல்லை.

நித்தி நானும் இதே மாதிரி வெந்தயம் சேர்க்காம‌ மாவு கொஞ்சம் கட்டியா அரைத்து வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி வதக்கி சேர்த்து தவலை அடைனு சுடுவேன். இப்டியும் ட்ரை பண்றேன். ரொம்ப‌ நல்லா இருக்கு.

எல்லாம் சில‌ காலம்.....

சுலபமான செய்முறை காட்டியிருக்கீங்க நித்யா
என் கணவர் அடை தோசை சாப்பிட மாட்டார் , அதனால செய்றதே இல்லை. இந்தமாதிரி அயிட்டங்களெல்லாம் ஊருக்குப் போனால் தான் சாப்பிட முடியும்.

பருப்பு தோசை வெங்காயம்வதக்கி சேர்த்து செய்தேன் நன்றாக இருந்தது