தேதி: July 31, 2014
தடித்த சப்பாத்துப் பெட்டி (Shoe Box) - ஒன்று
பலகை டிசைன் போட்ட கான்டாக்ட் பேப்பர் (Wood Grain Contact Paper)
கத்தரிக்கோல்
மெட்டல் ஸ்கேல்
மார்க்கிங் பென்
கடதாசி
பென்சில்
க்ராஃப்ட் நைஃப்
செல்லோ டேப்
சுத்தமான பழந்துணி
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.

முதலில் உள்ளே வைக்கப்படப் போகும் பொருளின் நீள அகல உயரங்களைக் அளந்து குறித்துக் கொள்ளவும். இந்தப் படத்திலிருக்கும் ப்ளாக்கிற்காகத் (Plaque) தயார் செய்த பெட்டியின் செய்முறையைத் தான் இங்கே கொடுத்துள்ளேன்.

பொருளின் அகலம் ஒரு பக்கமும், நீளமும் உயரமும் சேர்ந்தாற் போல் மறு பக்கமும் அளந்து ஒரு கடதாசியில் குறித்துக் கொண்டு வெட்டி எடுக்கவும். உயரத்திற்குரிய பகுதியை மடித்துவிட்ட பிறகு கிடைக்கும் துண்டை முதலில் தயாராக்கி வைத்துக்கொண்டு அதற்குப் பொருத்தமான அளவில் அட்டைப் பெட்டியை எடுத்துக் கொள்ளவும்.

பெட்டியின் மூடியைத் தனியாக எடுத்துவிட்டு, பெட்டியை கவிழ்த்துப் போட்டு, மடித்த கடதாசியை அதன் மேல் வைக்கவும். கடதாசியின் ஓரங்களில் ஒரே அளவு இடைவெளி வரும் விதமாக வைக்க வேண்டும். (இவ்வாறு வைக்கும் போது கடதாசியின் 3 பக்கங்களில் ஒரே அளவு இடைவெளியும், ஒரு பக்கம் மட்டும் இடைவெளி அதிகமாகவும் இருக்கும்).

இப்போது அதிக இடைவெளி உள்ள பக்கத்தில், மற்ற பக்கங்களிலுள்ள இடைவெளியின் அளவிற்கு இடைவெளி விட்டு ஒரு கோடு வரையவும். இந்தக் கோட்டை அப்படியே இரு புறமும் (பெட்டியின் பக்கவாட்டில்) தொடர்ந்து வரைந்து கொள்ளவும்.

அந்தக் கோடுகளிலிருந்து ப்ளாக்கின் உயரத்தைக் குறித்து இதே போல சுற்றிலும் இன்னொரு கோடு வரையவும். இந்த இரண்டாவது கோட்டின் வழியே வெட்டிவிட்டால் பெட்டி இப்படித் தெரியும்.

X வரைந்துள்ள துண்டுகள் இரண்டையும் மட்டும் வெட்டி நீக்கவும். மேற்பக்கம் வரைந்த கோட்டை வெறுமனே க்ராஃப்ட் நைஃபால் கீறி மட்டும் வைக்கவும். இது இந்த நிலையில் தெரியும் பெட்டியின் ஒரு பக்கத்துப் பார்வை.

மேற்பக்கத்தைக் கீறி வைத்த கோட்டின் வழியே மடித்து மற்ற இரு பக்கங்களோடும் பொருத்தி செல்லோ டேப் போடவும்.

மீதி மூன்று பக்கங்களையும் இதே அளவிற்கு வெட்டிவிடவும். இப்போது பெட்டியின் பிரதான பாகம் தயார்.

இதனை மூடிக்குள் பொருத்திப் பிடிக்கவும்.

மூடியின் வெளிப் பக்கமாக அடையாளம் செய்து கோடு வரைந்து கொள்ளவும். இரண்டு பக்கங்களிலும் தெரியும் சிறிய நீள்சதுரங்களை மட்டும் (x வரைந்துள்ள பகுதியை) வெட்டி நீக்கவும்.

முன்பு பெட்டிக்குச் செய்தது போல மேற்பகுதியில் க்ராஃப்ட் நைஃபால் கீறி எடுக்கவும். மடித்துப் பிடித்தால் இப்படித் தெரியும்.

மூடியின் மீதி மூன்று பக்கங்களுக்கும் ஏற்ப நான்காவது பகுதியை வெட்ட வேண்டும். எங்கே வெட்ட வேண்டும் என்பதை அடையாளம் செய்து கோடு வரைந்து நீளமாக வெட்டி நீக்கிவிடவும். நீக்கியவை போக மீதியை மடித்துப் பிடிக்க இப்படி வர வேண்டும்.

திறந்திருக்கும் இரண்டு ஓரங்களிலும் செல்லோ டேப் போட்டுப் பொருத்தவும்.

இப்போது மூடினால் பெட்டியும் மூடியும் கச்சிதமாக ஒன்றுக்குள் ஒன்று பொருந்திக் கொள்ளும்.

கான்டாக்ட் பேப்பரை பெட்டியின் நான்கு பக்கத்தைச் சுற்றிலும் வந்து, உள்பக்கமும் சிறிது மடிக்கக் கூடிய அளவிற்கு பெரியதாக இரண்டு துண்டுகள் வெட்டிக் கொள்ளவும். அதில் ஒரு பேப்பரை எடுத்து பெட்டியின் மூடியின் மீது ஒட்டவும். ஒட்டும் போது பேப்பரின் பின்பக்கமுள்ள வெள்ளைப் பேப்பரைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்து, காற்றுக் குமிழ்கள், மடிப்புகள் ஏற்படாதவாறு கவனமாக ஒட்டவும். ஒரு சுத்தமான துணியைத் திரட்டிப் பிடித்து ஒட்ட ஆரம்பித்த பக்கத்திலிருந்து எதிர்ப்புறமாக அழுத்தித் துடைப்பது போல இழுத்து விட்டால் சீராக ஒட்டிக்கொள்ளும்.

விளிம்புகளில் மடிக்கும் போது படத்தில் காட்டியுள்ளவாறு சற்று உள்ளே சரித்து வெட்டிவிட்டு ஒட்டவும்.

இப்படியே முழுவதையும் சுற்றி ஒட்டி, ஓரங்களைப் பார்த்து சீராக வெட்டிவிடவும். மூடி தயார். இதே போல் மற்றொரு கான்டாக்ட் பேப்பரை எடுத்து பெட்டியின் மீது ஒட்டிவிடவும்.

கான்டாக்ட் பேப்பரை ஒட்டிய பிறகு பெட்டி, மூடி இரண்டின் உட்புறங்களும் இப்படித் தெரிய வேண்டும்.

முழுமையாகத் தயாரான பெட்டி இது. உள்ளே வைக்க வேண்டிய பொருளை அளவான பபுள் ராப்பில் சுற்றி பாக் செய்யலாம்.

அன்பளிப்புப் பெட்டி என்பதற்கு மேலாக அன்பளிப்பைத் தொடர்ந்தும் பாதுகாப்பாக வைப்பதற்கும் இந்தப் பெட்டி பொருத்தமாக இருக்கும்.

Comments
இமா...
பக்காவா கிஃப்ட் பாக்ஸ் ரெடி பண்ணிருக்கீங்க... அதுவும் Wood Color Paper ல அழகா இருக்கு...
ஒரு டவுட்... நீங்க யூஸ் பண்ணிருக்கும் பாக்ஸும், மூடியும் ஒரே ஹைட்ல இருந்துச்சா. இல்ல நீங்க கட் பண்ணும் போது ஹைட்ட கம்மி பண்ணிருக்கீங்களா?
கலை
கிஃப்ட் பாக்ஸ்
//நீங்க யூஸ் பண்ணிருக்கும் பாக்ஸும், மூடியும் ஒரே ஹைட்ல இருந்துச்சா.// இல்லை. அது ஷூ பாக்ஸ். பெட்டி பெரிது மூடி சின்னது.
//கட் பண்ணும் போது ஹைட்ட கம்மி பண்ணிருக்கீங்களா?// அதுதான் ஸ்டெப் 4 முதல் 8 வரை இருக்கு.
படம் 9 - பெட்டி உயரத்திற்கு வந்த பின்.
'ப்ளாக்' மூடியை விட கொஞ்சம் உயரமாக இருந்தது. அதனால் கீழே உள்ள பெட்டி மூடியை விட சற்று ஆளமாக இருக்கிறது. கடைசிக்கு முதற் படத்தில் இது தெரியும்.
- இமா க்றிஸ்
இமா
மரத்தாலான பெட்டி போல பார்க்க ரொம்ப அழகா இருக்கு.
நல்ல உபயோகமான ஒன்று.. சோ க்யூட்.
நிகிலாவுக்கு
மரப்பெட்டி போலவேதான் இருக்கும். பல காலம் இருக்க வேண்டும் என்று தடிப்பான அட்டைப் பெட்டியைத் தெரிவு செய்திருந்தேன். அறுசுவைக்கென்று செய்யாத கைவினை இது. இருட்டில் அவசரமாகச் செய்யும் சமயம் கூடவே படமும் எடுக்க பெரிதாக நன்றாக வருவது இல்லை. உண்மையில் அதிக நேரம் செலவளிக்க இயலுவது இல்லை. கவனம் முழுக்க பொருள் தயாரிப்பில் இருக்கும். மீதி எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
என் எண்ணம், இங்கு போடும் அளவுக்கு நன்றாக வராவிட்டால் இருக்கவே இருக்கிறது என் 'உலகம்' என்று. :-) இப்போது 'தொட்டுக்கொள்ளவும் முடியும். இருந்தாலும் இங்கு அனுப்பத்தான் பிடிக்கிறது.
கருத்துக்கு அன்பு நன்றிகள் நிகிலா.
- இமா க்றிஸ்
Superb
Superb
பாக்யகவி
நன்றி சகோதரி. :-)
ப்ரொஃபைலில் பாலினம் கொடுக்கவில்லை நீங்கள். ஒரு கெஸ். :-)
- இமா க்றிஸ்
hi
Profile edit paniten ma.girl.