மாவுகளைப் பற்றிய சந்தேகம்

அறுசுவை தோழிகளே என் சந்தேகங்களை தீர்த்து வையுங்கள்.
1.செல்ஃப் ரெய்சிங் (self raising flour)மாவில்,பேக்கிங் பவுடர் மட்டும்தான் கலந்திருக்குமா?இல்லை பேக்கிங் சோடாவும் கலந்திருக்குமா?
2.மைதா என்பது உண்மையில் என்ன?
3.ஆல் பர்பஸ் ஃப்ளோர் (all purpose flour) என்பது என்ன?
4.ப்ளெயின் ஃப்ளோர் (plain flour) என்பது என்ன?

மிக மிக நன்றி வனி.நீங்க எனக்கு உடனே பதில் சொல்லிட்டீங்க,என்னால உங்களுக்கு உடனே நனறி சொல்ல முடியல மன்னிக்கவும்,கொஞ்சம் வேலை அதிகம்.ரொம்ப தெளிவா விளக்கிட்டீங்க .பேசாம நீங்க EASY CAKES AND COOKIES னு BOOK ஏ எழுதி Publish பன்னிடுங்க,நானே முதல் ஆளா வாங்கிவிடுகிறேன்.

இன்னும் ஒரே ஒரு சந்தேகம்,உங்களுக்கு நேரம் இருந்தால் பதில் சொல்லுங்கள்.கேக் ரெஸிப்பியில் ஏன் Lime juice and cooking oil சேர்க்கறாங்க?

ம்ம்... லேட்டா வந்ததை கூட மன்னிக்கலாம், என்னை வெச்சு புக் பப்லிஷ் பண்ற காமெடியை மன்னிக்கவே முடியாதாம்... பெரியவங்க சொன்னாங்க. பென்ச் தான் ;)

லைம்/லெமன் ஜுஸ் - புளிப்பு தன்மை உள்ளது. சிலது அந்த கேக்குக்கு எலுமிச்சையின் சுவையை மனத்தை தர பயன்படுத்துறாங்க. சிலது பேக்கிங் சோடா போன்ற எதாவது இங்ரெடியண்ட்டை ஆக்டிவேட் பண்றதுக்காக பயன்படுத்தறாங்க. அவை அசிடிக் இங்ரெடியண்ட்டாக செயல் பட்டு பேகிங் சோடாவை ஆக்டிவேட் பண்ணும்.

எண்ணெய் - வெண்ணெய் போல ஃபாட் தான். கேக்குக்கு தேவையான ஃபாட் (fat), கேக்குக்கு ஈரத்தனமை (moisture) கிடைக்க உதவும். பட்டரை விட எண்ணெய் அதிக மாய்ஸ்ட் கேக் கிடைக்கச்செய்யும். சில குறிப்புகளில் வெண்ணெய்க்கு பதில் எண்ணெய் சிலதில் தயிர்... ஃபாட்டுக்காக பயன்படுத்துபவை தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி
இது comedy எல்லாம் இல்லை,100% உண்மை.இவ்வளவு பேரோட சந்தேகங்களை தீர்த்து வைக்கறீங்க,உங்கள் சமையல் குறிப்புகளின் எண்ணிக்கை 712ஐ தாண்டி பயணமாகிக் கொண்டிருக்கிறது,ஒரு பக்கம் பயணக்கட்டுரைகளில் கலக்குறீங்க,இன்னொரு பக்கம் பட்டியில் கலக்குறீங்க.you are really so talented vani.I am becoming a big fan of you.......

And many many thanks for clearing my doubts.

உங்கள் அன்புக்கு நன்றி :) //12ஐ தாண்டி பயணமாகிக் கொண்டிருக்கிறது// - பயமாகிக்கொண்டிருக்கிறதுன்னு படிச்சேன் ;) ஹஹஹா. முன்பெல்லாம் நிறைய எழுதினேன், இப்போ எழுதுவது குறைஞ்சு போச்சு.... பட்டியில் புது முகங்கள் பலர் கருத்துக்களை அழகா சொல்றீங்க, வயசானதாலோ என்னவோ, எனக்கு தான் சொல்லவே வராத மாதிரி இருக்கு. என்னை விட கெட்டிக்காற பிள்ளைகள் இப்போ நிறைய பேர் வந்துட்டீங்க. மகிழ்ச்சியா இருக்கு, பழையபடி அறுசுவையை கலகலப்பா பார்க்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

pikelet... இங்க குறிப்பு எதுவுமே காணொமே! வரும் வாரம் முடிந்தால் குறிப்பு அனுப்பப் பார்க்கிறேன். பான்கேக் போலதான் இதுவும். ஆனால் சின்னதாக கொஞ்சம் குண்டாக இருக்கும் ப்ரியா.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்