ட்ரீட்மென்ட் எடுத்து கன்சீவ் ஆன தோழிகள் , தாய்மையடைந்த தோழிகள் யாராவது இருக்கீங்களா?

தோழிகளே ட்ரீட்மென்ட் எடுத்து கன்சீவ் ஆன தோழிகள் , தாய்மையடைந்த தோழிகள் யாராவது இருக்கீங்களா?

வணக்கம் தோழிகளே
நானும் உங்களில் ஒருத்திதான். திருமணமாகி நான்கு வருடம் ஆகிறது. ஓரு வருடம் முன்பு கரு தரித்தேன். வளர்ச்சி நன்றாக இருந்தது. ஆனால் நான்கு மாதங்களுக்குப் பிறகு துடிப்பு நின்று விட்டது. அதனால் அபார்சன் செய்து விட்டோம். அதன் பிறகு இன்னும் கரு தங்கவில்லை. மூன்று மாதங்களாக ட்ரீட்மென்டும் எடுத்து வருகிறேன். நீர் கட்டி பிரச்சனை முதலில் இல்லை. Tரீட்மென்ட் எடுத்து அதனால் நீர் கட்டி வந்து விட்டது. அது சரியாக வேறு மருந்து சாப்பிட்டேன். இந்த மாதம் கரு தங்குவதற்கு மருந்து சாப்பிட்டேன். முதல் நாள் இரவு சாப்பிட்ட மருந்தால் காலை மயக்கம் வந்து நினைவு இல்லாமல் விழுந்து விட்டேன். அது ஓவர் டோஸ் ஆகி விட்டது. மருந்து நிறைய சாப்பிட்டதால் வயிற்றில் புண் ஆகி விட்டது. நான் மீண்டும் ட்ரீட்மென்ட் போகலாமா அல்லது விட்டு விடலாமா? ரொம்ப பயமாக இருக்கு.

ப்ளீஸ் இந்த இழையில் உங்க அனுபவங்களை பதிவிடுஙள். எங்களைப்போல் ட்ரீட்மென்ட் எடுத்து கொண்டு இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வருவீர்களா?

Enaku periods regular dhan aana pappa nikala 10 months achu Dr kita pona scan pannitu egg oda volume kammiya erukknu solli tablet koduthanga avagalae sonanga seriyaga 6 months agum nu tablet potta second month finish achu 3 month conceive Anan ma eppo pappa vuku 9 months ma kavalapadathapa kadavul thaimai varam ketkura ellarkum antha varathai koduka kadavulai prathanai seikeraen ma neenga thaimai adaya en vazhuthukkal ma

நன்றி அர்ச்சனா. ட்ரீட்மென்டும் எடுத்து என்ன பிராப்ளம் அப்படின்னு அனலைஸ் பண்ணவே முடியலை. 4 மாதங்களா ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கு. ஆனா முன்னேற்றமே இல்லை. நிறைய மாத்திரையை சாப்பிடுகிறேன். அதனால் நீர் கட்டி வந்து விட்டது. இப்போது நீர் கட்டிக்கு மருந்து சாப்பிடுகிறேன். எல்லாம் சரியாக எனக்கு குழந்தை பிறக்க எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்

Kandipagha prathanai seirean ma

வணக்கம்
இந்த மாதம் கரு தங்குவதற்கு மருந்து சாப்பிட்டேன். முதல் நாள் இரவு சாப்பிட்ட மருந்தால் காலை மயக்கம் வந்து நினைவு இல்லாமல் விழுந்து விட்டேன். அது ஓவர் டோஸ் ஆகி விட்டது. மருந்து நிறைய சாப்பிட்டதால் வயிற்றில் புண் ஆகி விட்டது. நான் மீண்டும் ட்ரீட்மென்ட் போகலாமா அல்லது விட்டு விடலாமா? ரொம்ப பயமாக இருக்கு.

என்ன மருந்து சாப்பிட்டீங்க? // ஓவர் டோஸ்// & //வயிற்றில் புண்// இதெல்லாம் எப்படித் தெரிந்தது!

//மீண்டும் ட்ரீட்மென்ட் போகலாமா// நீங்கள் சொன்னது சரியாக இருந்தால் மேலே சொன்ன மயக்கம் & வயிற்றுக் காயத்துக்கு முதலில் மருந்து செய்ய வேண்டாமா! முக்கியமில்லையா அது! அதன் பிறகு மீதியை யோசிக்கலாம்.

‍- இமா க்றிஸ்

உங்கள் அக்கறை மிகவும் ஆறுதலாக உள்ளது. வயிற்றில் புண் ஆறுவதற்காக தேங்காய் பால் கசகச அரைத்து காய்ச்சி சாப்பிட்டேன். வாயிலிருந்த புண்கள் ஆறியிருக்கிறது. வயிற்றில் எரிச்சலும் குறைந்து உள்ளது. டாக்டரிடம் செல்லவில்லை. ஏனென்றால் மீண்டும் மருந்து தருவார்கள்.
என் டாப்லட்ஸை பட்டியலிடுகிறேன்.

adova 1 mg
b crip 2.5 mg
ovacet
progynova 2 mg

இதில் ஒவாசெட் மருந்தை பார்க்கும் போதே பயமாக இருந்தது. அவ்வளவு பெருசு. second night of my periods I took each one tablet of all these.

//வாயிலிருந்த புண்கள் ஆறியிருக்கிறது.// ம். டாப்லட் அலர்ஜி ஆகி இருக்கலாம். அல்லாமல் வேற எதுவாகவும் கூட இருக்கலாம். ஓவர் டோஸ்... டாக்டர் அப்படிக் கொடுக்க மாட்டாங்க. நீங்களா மறந்து போய் ரெண்டு தரம் சாப்பிடுட்டீங்களா? //டாக்டரிடம் செல்லவில்லை. ஏனென்றால் மீண்டும் மருந்து தருவார்கள்.// ம். அப்ப இப்படியே விட்டுரப் போறீங்களா? உங்க இஷ்டம் அது. ஆனால் ஒண்ணு சொல்லத் தோணுது... இனி உங்க பிரச்சினைக்கு அந்த டாக்டர் பொறுப்பு இல்லை. எல்லோருக்கும் எல்லா மருந்தும் ஒத்து வரது இல்லை. பிரச்சினையானா போய்க் கேட்கத்தான் வேணும். பொண்ணுங்க நாங்க. ஹாஸ்ப்பிட்டல் போறதைத் தவிர்க்க முடியாதுல்ல! பிரசவம்னு வந்தா அந்தச் சமயம் கூட கொடுக்கும் மருந்தை வேணாம்பீங்களா?

//பார்க்கும் போதே பயமாக இருந்தது. அவ்வளவு பெருசு.// :-) இது ஒரு காரணமா! சாதம் ஒரு கவளம் எவ்வளவு வாய்ல போடுவீங்க? அப்படியே விழுங்க முடியுது இல்ல! அதை விடவா டாப்லட் பெருசா இருக்கு!

மயங்கி விழுந்திருக்கீங்க. வீட்ல இருக்கிற யாருமே ஹாஸ்பிட்டல் கூட்டிப் போகணும்னு நினைக்கலயா!

உங்க ஹெல்த். நான் சொல்றேன்னு எதுவும் பண்ண வேணாம். கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

இமா கரெக்டா கேட்ருக்காங்க. ஓவர் டோஸ் மற்றும் வயிற்றில் புண் எப்படி தெரிந்தது. டாக்டர்கிட்ட கேட்டீங்களா? என்ன சொன்னாங்க?

சில டேப்லட் எடுத்து சரியா சாப்டலைனா மயக்கம் வரும். அந்த மாதிரி டேப்லட் தரும்போதே டாக்டர் சொல்லுவாங்க. நீங்க ட்ரீட்மென்ட் கண்டிப்பா ஸ்டாப் பண்ணக்கூடாது. நான் 2 வருடமாக ட்ரீட்மென்ட் எடுத்தேன். இப்போ பையன் இருக்கான். அதனால பயப்படாம ட்ரீட்மென்ட் எடுங்க. உங்களுக்கு என்ன doubt வந்தாலும் டாக்டர்கிட்ட தயங்காம கேட்ருங்க.

நிறைய மாதுளை சாப்பிடுங்க. வயிற்றுப் புண்ணுக்கும் நல்லது. கர்ப்பப்பைக்கு ரொம்ப நல்லது. கண்டிப்பா 1 மாதுளை daily சாப்பிடுங்க. நிறைய தண்ணீர் குடிங்க. முடியுமென்றால் daily இளநீர் குடிங்க

இங்க ஒரு இழை ஓடுதா!! நான் அங்க இப்ப தான் பதில் சொல்லிட்டு வந்தேன். வயிறு புண்ணுக்கு அப்போ டாக்டரிடம் காட்டலயா பூர்ணிமா? ஏன் இப்படி?? வயிறு புண் சாதாரண விஷயம் இல்லைங்க... முதல்ல வேறு டாக்டரிடமாவது போய் காட்டுங்க. பயந்தா எந்த வைத்தியமும் பார்க்க முடியாதுங்க. போன வாரம் என் வாயுக்குள்ள பெரிய டியூபே விட்டாங்க. நீங்க மாத்திரைக்கு அழலாமா இப்படி சின்ன புள்ள போல? எனக்கு டாக்டர் கொடுத்த மருந்து ஒன்னு சேரல... ஆனா டாக்டர்ஸ் அந்த மருந்தாலன்னு நினைக்க கூட இல்ல. காரணம் மற்றவர்களுக்கு அது சேர்ந்துச்சு, எனக்கு தான் ஆகல. அதை சொன்னா தானே அவங்களுக்கு தெரியும்? போய் முதல்ல டாக்டரை பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கண்டிப்பாக செகண்ட் ஒபினியன் கேட்க வேறு மருத்துவரிடம் செய்கிறேன்.
பதிவுக்கு நன்றி

மேலும் சில பதிவுகள்